டேட்டிங் பார்ட்னருடன் உல்லாசம்.. 4 ஆண்டுக்கு பின் பெண்ணுக்கு காத்திருந்த ஷாக்.. பரவும் ஆபாச வீடியோ

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: பெங்களூரில் டேட்டிங் செயலியில் பழக்கமான இளைஞருடன் உல்லாசம் அனுபவித்த இளம்பெண்ணுக்கு 4 ஆண்டுகள் கழித்து பெரிய பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இருவரும் உல்லாசமாக இருந்த வீடியோ தற்போது இணையதளங்களில் ஆபாச வீடியோவாக பரவி வரும் நிலையில் அந்த பெண் அதிர்ச்சியில் உறைந்துள்ளார்.

பெங்களூரில் வசித்து வருபவர் 28 வயது இளம்பெண். இவர் டேட்டிங் செயலி பயன்படுத்தி வருகிறார். கடந்த 2022ம் ஆண்டில் டேட்டிங் செயலி வழியாக இளைஞருடன் பழக்கம் ஏற்பட்டது. அந்த செயலியில் இருவரும் பேசி வந்தனர்.

bengaluru-woman-intimate-videos-upload-on-websites-after-the-4-years-her-dating-partner-leaves-her
Photo Credit:

அதன்பிறகு அவர்கள் இருவரும் தங்களின் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட பிற சமூக வலைதளங்களை பகிர்ந்து கொண்டனர். இன்ஸ்டாகிராமில் அவர்கள் அடிக்கடி 'சாட்' செய்து வந்தனர்.

இந்த சமயத்தில் அந்த பெண்ணுக்கு ஒரு சந்தேகம் வந்தது. யாராவது தன்னை பற்றி அறிய இப்படி செய்கின்றனரா? என்று அவர் நினைத்தார். இதனால் இன்ஸ்டாகிராமில் உள்ள அந்த நபரின் விவரத்தையும், டேட்டிங் செயலியில் உள்ள விவரத்தையும் சரிபார்த்தார். இரண்டும் சரியாக இருந்தது. இதனால் அந்த இளைஞர் மீது அவருக்கு நம்பிக்கை அதிகரித்தது.

இதையடுத்து இருவரும் நேரில் சந்திக்க முடிவு செய்தனர். அந்த நபர் தனது அபார்ட்மென்ட்டிற்கு வரும்படி இளம்பெண்ணுக்கு அழைப்பு விடுத்தார். அப்பார்ட்மென்ட் முகவரியையும் வழங்கினார். அங்கு சென்றது அந்த இளம்பெண்ணை வரவேற்று குளிர்பானம் கொடுத்தார். அதன்பிறகு இருவரும் உல்லாசமாக இருந்தனர். பிறகு அந்த இளம்பெண் தான் வசிக்கும் இடத்துக்கு புறப்பட்டு சென்றார்.

அதன்பிறகு அந்த இளைஞரை அவரால் தொடர்பு கொள்ள முடியவில்லை. இன்ஸ்டாகிராம் உள்பட பிற சமூக வலைதள பக்கங்கள் மற்றும் டேட்டிங் செயலியில் 'பிளாக்' செய்தார். இளம்பெண்ணால் அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை. இளம்பெண் தனக்கு நேர்ந்த ஏமாற்றத்தை நினைத்து வருத்தப்பட்டார். அதன்பிறகு நாட்கள் செல்ல செல்ல இளம்பெண் படிப்படியாக அதில் இருந்து மீண்டு வந்தார்.

இந்நிலையில் தான் தற்போது அந்த இளம்பெண்ணுக்கு அதிர்ச்சி ஒன்று காத்திருந்தது. அதாவது ரெடிட் வலைதளங்களிலும், பிற ஆபாச இணையதளங்களிலும் அவரது ஆபாச வீடியோ பரவி வருகிறது. அந்த இளைஞருடன் உல்லாசமாக இருந்த வீடியோ தான் தற்போது ஆபாச வீடியோவாக பரவி வருகிறது.

இதனால் ஷாக்கில் உறைந்த அந்த பெண் சம்பவம் பெங்களூர் போலீசில் புகார் செய்ததோடு, சம்பந்தப்பட்ட நபர் மீது நடவடிக்கை எடுக்கும்படி கூறியுள்ளார். இளம்பெண்ணுடன் டேட்டிங் செயலியில் பழக்கமான இளைஞர் தான் இந்த வீடியோவை இணையதளங்களில் அப்லோட் செய்திருக்கலாம் என்ற சந்தேகம் உள்ளது. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த இளைஞரை தேடிவருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+