விஜயகாந்த்துக்கு கொரோனா நோய் தொற்று அறிகுறி இல்லை.. விரைவில் டிஸ்சார்ஜ்.. மியாட் அறிக்கை
சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு கொரோனா நோய்த்தொற்று அறிகுறி இல்லை என்று மியாட் மருத்துவமனை தெரிவித்துள்ளது.
தேமுதிக நிறுவனத் தலைவர் மற்றும் பொதுச் செயலாளர் விஜயகாந்த் கொரோனாவால் சென்னையில் உள்ள மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்த நிலையில் அவரது மனைவியும் தேமுதிக பொருளாளருமான, பிரேமலதா விஜயகாந்துக்கும் கொரோனா நோய் தொற்று உறுதி செய்யப்பட்டது. அவரும் மியாட் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார்.
இந்த நிலையில் மியாட் மருத்துவமனை நிர்வாக இயக்குனர் பிரித்வி மோகன்தாஸ் இன்று காலை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:

தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் செப்டம்பர் 28ஆம் தேதி கோவிட் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு நோய்த்தொற்று உறுதியாகி சென்னை மியாட் மருத்துவமனையில் செப்டம்பர் 29-ம் தேதியன்று அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் உடல்நிலை சீராக உள்ளது.
மருத்துவர்களின் கண்காணிப்பில் உள்ளார்.
பிரேமலதா விஜயகாந்தின் முதல் நிலை பரிசோதனைக்கு பின் தேமுதிக நிறுவனர் தலைவர் மற்றும் கழக பொதுச் செயலாளருமான விஜயகாந்த் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார். அவரின் உடல்நிலை சீராக உள்ளது. நோய்க்கான அறிகுறி இல்லை. தொடர் மருத்துவ சேவைகளால் அவர் நல்ல முன்னேற்றம் அடைந்து இருக்கிறார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications