விஜயகாந்துக்கு செயற்கை சுவாசமா? மறுத்த தேமுதிக தலைமை! அறிக்கையில் சொல்லியது என்ன?
சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு செயற்கை சுவாசம் வைத்துள்ளதாக வந்த செய்திகளை தேமுதிக கட்சி அலுவலகம் மறுத்துள்ளது.
நடிகரும் சட்டசபை முன்னாள் எதிர்க்கட்சித் தலைவருமான விஜயகாந்த் கடந்த 2005 ஆம் ஆண்டு தேமுதிக எனும் அரசியல் கட்சியை தொடங்கினார். அவரது கட்சி மக்களிடையே செல்வாக்கை பெற்று வந்த நிலையில் கூட்டணி முடிவுகளால் அவரது கட்சி தொடர்ந்து நடந்த தேர்தல்களில் சோபிக்கவில்லை.

இதனிடையே விஜயகாந்துக்கு பேசுவதில் பிரச்சினை, உடல்நல பாதிப்பு போன்றவற்றால் அவரால் மக்களை சந்தித்து பிரச்சாரம் செய்ய முடியாமல் போனதும் கட்சி தோல்விக்கு காரணமாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில் நீண்ட காலமாக அவர் வெளியே வராமல் வீட்டுக்குள்ளேயே ஓய்வு எடுத்து வருகிறார்.
அவருக்கு அவ்வப்போது அமெரிக்காவில் சிகிச்சைகள் கொடுக்கப்படுகின்றன. இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அவரது விரல்களுக்கு ரத்தம் ஓட்டம் போகாததால் அவை அறுவை சிகிச்சை செய்து நீக்கப்பட்டன. இந்த நிலையில் விஜயகாந்துக்கு கடந்த 18ஆம் தேதி மாலை திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டது.
அவருக்கு கடுமையான சளி, காய்ச்சல், இருமல் இருந்ததால் அவதிப்பட்டு வந்தார். இதனால் அவர் மூச்சுவிடுவதிலும் சிரமம் இருந்தது. இதையடுத்து நந்தம்பாக்கத்தில் உள்ள மியாட் மருத்துவமனையில் விஜயகாந்த் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

உடல் பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டன. இதில் விஜயகாந்துக்கு சளி தொல்லை சீராவதற்கு கூடுதல் சிகிச்சை அளிக்க வேண்டும். எனவே அவரை மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை கொடுக்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தினர். இதையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
நேற்று முன் தினம் முதல் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு இன்று 3ஆவது நாளாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவருக்கு மூச்சு விடுவதில் சிரமம் இருப்பதால் அவருக்கு அவ்வப்போது செயற்கை சுவாசம் அளிக்கப்படுவதாக செய்திகள் வெளியானது. இதை தேமுதிக கட்சி அலுவலகம் மறுத்து அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் விஜயகாந்துக்கு செயற்கை சுவாசம் கொடுக்கப்படவில்லை. அவர் நலமாக இருக்கிறார், வழக்கமான உடல் பரிசோதனைக்காகவே அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் ஓரிரு நாட்களில் வீடு திரும்புவார் என தெரிவித்துள்ளது.
விஜயகாந்தின் உடல்நிலை குறித்து தவறான தகவல்கள் பரவின. இதையடுத்து தேமுதிக சார்பில் வெளியான அறிக்கையில் வதந்திகளை நம்ப வேண்டாம். அவருக்கு காய்ச்சல், சளிதான் என குறிப்பிடப்பட்டுள்ளது.
-
அமித் ஷாவுக்கே அடங்காத அண்ணாமலை! சைலண்டாய் டெல்லியில் பார்த்த வேலை! ஆர்வக்கோளாறில் ஆதரவாளர்கள்! -
கதை ஓவர்! அதிமுகவில் இருந்து நீக்கியதை எதிர்த்த மனுவை வாபஸ் பெற அனுமதி கேட்ட ஒபிஎஸ்.. இன்று விசாரணை -
முதலில் இயக்கம்.. அடுத்து அரசியல் கட்சி.. உறுதியாக நிற்கும் அண்ணாமலை.. நாளை வெளியாகிறது அறிவிப்பு! -
‘அல்காரிதம்’ புரியாததால் வந்த வினை! தவெகவின் அலையைக் கணிக்கத் தவறிய டிஆர்பி ராஜா.. அடியோடு மாறுதாம்! -
மோடியை சந்தித்த அண்ணாமலை? மீண்டும் தமிழக பாஜக தலைவராக்க டெல்லி தலைமை திட்டம்? -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
"இது அதுல்ல?.. ஜனநாயகத்தை சிதைப்பதில் பாஜகவும் தவெகவும் ஒண்ணு” - திமுக சரமாரி அட்டாக்! -
ரொம்ப அவசரப்படாதீங்க அண்ணாமலை.. அமித் ஷா போட்ட அன்புக் கட்டளை! இன்னும் தமிழ்நாடு திரும்பாதது ஏன்? -
தவெக-வின் 'யு-டர்ன்' அரசியல்.. வெளுத்து வாங்கிய அன்புமணி -
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
"கடைசி மூச்சு வரை உங்களுக்காக உழைப்பேன்!" - கலைஞர் கருணாநிதியின் இறுதிப் பேருரை.. என்ன பேசினார்? -
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம்












Click it and Unblock the Notifications