விஜயகாந்த்தை.. ஒருமுறை கண்ணில் காட்டுங்களேன்.. விக்கி விக்கி அழுத தொண்டர்கள்.. தேமுதிக ஹேப்பி நியூஸ்
விஜயகாந்த் புத்தாண்டிற்கு தொண்டர்களை சந்திக்க உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது
சென்னை: விஜயகாந்த்தை கண்ணால் ஒருமுறை காட்டுங்களேன் என்று தொண்டர்கள் மனமுருகி கேட்டு கொண்டு வந்த நிலையில், தேமுதிக தலைமைக் கழகம் சார்பில் முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகி உள்ளது. இதையடுத்து, தொண்டர்கள் குஷியில் உள்ளனர்.
அரசியலையும் தாண்டி ஒருவர் விரும்பப்படுவது இந்த காலத்தில் அபூர்வம்.. அதில், மிகமிக முக்கியமானவர் விஜயகாந்த்.. கடந்த சில வருடங்களாகவே உடம்பு சரியில்லாமல் போய்விடவும் தளர ஆரம்பித்துவிட்டார்.. ஏராளமான சிகிச்சைகள் எடுத்து கொள்வதும் இதற்கு காரணமாக இருக்கலாம்.. எனினும் முன்புபோல் அவர் வெளியே வருவதில்லை.
கடந்த ஆகஸ்ட் மாதத்தில், சுதந்திர தினத்தன்று கொடியேற்ற அழைத்து வரப்பட்டார்.. ஜீப்பிலேயே உட்கார்ந்திருந்தார்.. அவரால் கொடியை ஏற்ற முடியவில்லை.. ஒருகையால் விஜயகாந்த்தை தாங்கிப்பிடித்துக் கொண்டு, மறுகையால் தேசிய கொடியை ஏற்றினார் பிரேமலதா.

விபூதி
இதை பார்த்து தொண்டர்கள் பதறிப்போய்விட்டார்கள்.. உடம்பு சரியில்லாமல் அவரை வெளியே அழைத்து வந்து, இப்படியெல்லாம் கஷ்டப்படுத்த வேண்டுமா? எங்களால் கேப்டனை இப்படி பார்க்க முடியவில்லை என்று கண்ணீர் விட்டு அழுதனர்.. இந்த வீடியோக்கள் எல்லாம் இணையத்தில் வைரலானது.. இதற்கு பிறகு, விஜயகாந்த்தின் 70வது பிறந்தநாளின்போது, கட்சி அலுவலகத்திற்கு வந்திருந்தார் விஜயகாந்த்.. ஒயிட் & ஒயிட் டிரஸ்ஸில், நெற்றியில் விபூதி, கூலிங்கிளாசுடன் உட்கார்ந்திருந்தார்.- ரசிகர்களை, தொண்டர்களை சந்தித்தார்..

தம்ப்ஸ் அப்
அப்போதும் விஜயகாந்தால் யாரிடமும் பேச முடியவில்லை என்றாலும், தொண்டர்களின் வாழ்த்தொலியை கேட்டு பூரித்து போனார்.. உணர்ச்சிவசப்பட்டு கண்கள் கலங்கினார்.. கூட்டத்தினரை பார்த்து "தம்ப்ஸ்அப்" சின்னத்தில் விரல் காட்டினார்.. பிறகு இரு கைகளையும் கூப்பி கூட்டத்தினருக்கு வணக்கம் சொன்னார்.. ஆனால், 10 விரல்களையும் ஒன்றாக சேர்த்து அவரால் வணக்கம் தெரிவிக்க முடியவில்லை.. பிறகு, இரு கைகளையும் தலைக்கு மேல் குவித்து வணக்கம் சொல்லி கொண்டே இருந்தார்.. இதை பார்த்து தொண்டர்கள் கைகளை தட்டி ஆரவாரம் செய்தார்கள்.. எனினும், அன்றைய தினமும் தளர்ந்துபோய்தான் விஜயகாந்த் காணப்பட்டார்.

கேக் ஊட்டினார்
"மாசத்துக்கு ஒருமுறையாவது, கேப்டனை எங்கள் கண்ணில் காட்டுங்கள், எங்களுக்கு வேற எதுவுமே வேணாம், எங்க தெய்வத்தை நாங்க கண்ணால் பார்த்தாலே போதும்" என்று தேமுதிக தொண்டர்களும், ரசிகர்களும் கண்ணீருடன் உருகி கோரிக்கை வைத்ததை அன்றையதினம் காண முடிந்தது... இந்நிலையில், கடந்த 10 நாட்களுக்கு முன்பு விஜயகாந்தின் ஒரு போட்டோ வெளியானது.. மகன் விஜயபிரபாகரன் பிறந்தநாளுக்கு கேக் எடுத்து ஊட்டிவிடுகிறார் விஜயகாந்த்.. அந்த போட்டோவில் வழக்கம்போல் கூலிங்கிளாஸ் அணிந்திருந்தார். மாஸ்க் அணிந்திருந்தார்.. ஆனால், விஜயகாந்த் பார்ப்பதற்கு மிகவும் உடல் மெலிந்து காணப்பட்டார்.

கூலிங்கிளாஸ்
பிறந்தநாள் அன்று பார்த்ததைவிட, இந்த போட்டோவில் உடல் எடை குறைந்து காணப்பட்டது, மீண்டும் ரசிகர்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தியது.. இந்நிலையில், மீண்டும் தொண்டர்களை சந்திக்க வருகிறாராம் விஜயகாந்த்.. வழக்கமாக ஆங்கில புத்தாண்டு அன்று தொண்டர்களை விஜயகாந்த் சந்திப்பது வழக்கம்.. அதன்படி, வரும் புத்தாண்டு அன்றும் தொண்டர்களை சந்திக்க இருப்பதாக தேமுதிக தலைமை கழகம் சார்பில் அறிவிப்பு வெளியாகி உள்ளது..

கேப்டன் கேப்டன்
அந்த அறிவிப்பில், "சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் விஜயகாந்த் காலை 11 மணி முதல் பிற்பகல் 12 மணி வரை தொண்டர்களை சந்திக்கவுள்ளதாகவும் தொண்டர்கள் விஜயகாந்தை சந்தித்து புத்தாண்டு வாழ்த்து தெரிவிக்கலாம் தேமுதிக தலைமை கழகம் அறிவித்துள்ளது... மீண்டும் கேப்டனை நேரில் சந்திக்கவும், அவருக்கு புத்தாண்டு வாழ்த்து சொல்லி, பதில் வாழ்த்தை பெறவும் தொண்டர்களும், ரசிகர்களும், ஏன் பொதுமக்களும்கூட தயாராகி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications