முகக்கவசம் அணிந்து கைகளை தூக்கி வணக்கம் சொன்ன விஜயகாந்த்.. ரூ 100 வழங்கிய தங்கமனசுக்காரர்!
சென்னை: ஆங்கிலப் புத்தாண்டு தினத்தையொட்டி தேமுதிக தலைவரும் நடிகருமான விஜயகாந்த் தொண்டர்களை தனது கட்சி அலுவலகத்தில் சந்தித்தார். முகக் கவசம் அணிந்து கொண்டு வந்த அவர் நாற்காலியில் அமர வைக்கப்பட்டார்.
திரைத்துறையிலும் அரசியலிலும் எதிரிகளே இல்லாதவர் என சொல்லும் அளவுக்கு பணத்தை விட நற்பெயரை அதிகமாகவே சம்பாதித்தவர் விஜயகாந்த். இவர் அரசியலில் நன்றாகவே வளர்ந்து வந்த நிலையில் யார் கண்ணுப்பட்டதோ அவரது உடல்நிலையில் சில உபாதைகள் ஏற்பட்டன.
அவருக்கு தைராய்டு பிரச்சினை இருப்பதால் முன்பு போல் கர்ஜனையுடன் பேச முடியவில்லை. இதற்காக அமெரிக்காவில் சிகிச்சை எடுத்து வருகிறார். அவருக்கு பேச்சு தெரபியும் கொடுக்கப்படுகிறது. அவர் பொதுவெளியில் அதிகம் வருவதில்லை.

விஜயகாந்த்
விஜயகாந்த் எப்போது தொண்டர்களை பார்க்க ஆசைப்பட்டாலும் சரி அவருடைய குடும்பத்தினர் அதற்கான ஏற்பாடுகளை செய்து விடுகிறார்கள். தாயை பிரிந்த குழந்தைகள் எப்படி தாயின் அன்பும் அரவணைப்பும் கிடைத்தால் மகிழ்வார்களோ அது போல் விஜயகாந்த்தை பார்க்கும் தொண்டர்களும் ரசிகர்களும் நெகிழ்ச்சி அடைகிறார்கள்.

சுதந்திர தினம்
அண்மையில் சுதந்திர தினம், அவருடைய பிறந்தநாள் ஆகிய இரு நாட்கள் தொண்டர்களை சந்தித்தார். அவரது உடல்நிலையை பார்த்து பல ரசிகர்களின் கண்கள் குளமாகின. இந்த நிலையில் தொண்டர்களை சந்தித்து புத்தாண்டு வாழ்த்துகளை சொல்ல வேண்டும் என விஜயகாந்த் தனது குடும்பத்தாரிடம் கூறியிருந்தார். அதற்கான ஏற்பாடுகளை அவர்கள் செய்தனர்.

அறிவிப்பு
அதன்படி முன்கூட்டியே இதற்கான அறிவிப்பு வெளியானது. பின்னர் நேற்றைய தினம் கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்திற்கு விஜயகாந்த் வந்தார். முகக்கவசம் அணிந்து நாற்காலியில் அமர வைக்கப்பட்டார். அவர் தொண்டர்களை பார்த்து கையசைத்தார். பின்னர் புத்தாண்டு வாழ்த்துகளையும் தெரிவித்தார்.

புத்தம் புதிய ரூ 100
பின்னர் தன்னை சந்தித்து வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் பிரேமலதா விஜயகாந்த் மூலம் புத்தம் புதிய ரூ 100 தாளை வழங்கினார். வெள்ளை நிற பேண்ட் , வெள்ளை சட்டை அணிந்து 1980, 90 களில் நடித்த படங்களில் பெரும்பாலும் இந்த நிற உடையை அணிந்திருப்பார். அது போன்றொரு உடையில் வந்திருந்தார். அவர் உடல் மெலிந்து காணப்பட்டதால் தொண்டர்கள் வேதனை அடைந்தனர்.

தொண்டர்கள் யாரும் அருகே வரக் கூடாது
தொண்டர்கள் யாரும் விஜயகாந்தை பார்த்த ஆர்வத்தில் பக்கத்தில் வந்துவிடக் கூடாது என்பதற்காக கம்புகளை போட்டு தடுப்புகள் கட்டப்பட்டிருந்தன. விஜயகாந்தை பார்த்த ரசிகர்கள் கேப்டன் வாழ்க, கேப்டன் வாழ்க என கோஷமிட்டனர். கைகளை நீண்ட நேரம் உயர்த்த முடியாமல் விஜயகாந்த் அவதிப்பட்டதை பார்த்த தொண்டர்களுக்கு ரத்தக் கண்ணீரே வந்திருக்கும்.

அரணாக இருந்த மகன்கள்
உடன் மகன்கள் விஜய பிரபாகரனும் சண்முகபாண்டியனும் இருந்தார்கள். இந்த நிகழ்வில் பிரேமலதா பேசுகையில் இந்த ஆண்டு தேமுதிகவுக்கு வெற்றிகரமான ஆண்டாக அமையும் என்றார். தொண்டர்கள் உற்சாகமடைந்தனர். புத்தாண்டின் போது தன்னை சந்திக்க வரும் ரசிகர்கள், தொண்டர்களுக்கு எப்போதும் புதிய ரூ 100 நோட்டை வழங்குவது விஜயகாந்தின் வழக்கம். அதை தொண்டர்கள் செலவு செய்யாமல் பிரேம் செய்து இன்று வரை பொக்கிஷமாக பாதுகாத்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. தொண்டர்கள் முதல் மாவட்டச் செயலாளர்கள் வரை அனைவரும் பிரேமலதாவிடம் ரூ 100 தாளை வாங்கிச் சென்றனர்.
-
குமரியில் காலியாகும் அதிமுகவின் அடித்தளம்.. 4 தொகுதிகளை கைப்பற்றிய பாஜக.. சோர்வடைந்த தொண்டர்கள்! -
அதிமுக, பாஜக நேரடி போட்டியில்லை.. பெரம்பூரில் தவெக விஜய்க்கு சாதகம்? களமிறக்கிவிடப்பட்ட பாமக! -
ஆக்டிவ் மோடில் ஸ்டாலின்.. கையில் எடுத்த பிரச்சார ஆயுதம்.. 2021 தேர்தலில் திமுக போட்ட பக்கா ஸ்கெட்ச் -
சிலர் சிரிப்பார்! சிலர் அழுவார்! நாங்கள் சிரித்துக் கொண்டே அழுகின்றோம்! திமுகவால் புலம்பும் மதிமுக -
தேர்தல் நேரத்தில் கிளம்பிய பூதம்.. ரூ.4 கோடி பிடிபட்ட வழக்கில் நயினார் நாகேந்திரனை ED விசாரிக்க மனு! -
திமுக கூட்டணியில் அடுத்த விக்கெட்? தனியரசு விலக முடிவு.. அதிருப்தியின் பின்னணி -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பாஜகவுக்கு பல்ப் கொடுத்த எடப்பாடி.. வெயிட்டான தொகுதிகளை வச்சுகிட்டாரே! எந்தெந்த தொகுதிகளில் போட்டி? -
அவிநாசி: பாஜகவுக்காக.. அதிமுகவின் எஃகு கோட்டையை தாரை வார்த்த எடப்பாடி பழனிசாமி! தனபால் கதை ஓவர் -
கீழ்வேளூரில் வடிவேல் ராவணன், அம்பத்தூரில் சேகர்.. பாமகவின் 3 வேட்பாளர்களை அறிவித்த அன்புமணி! -
உடையும் கூட்டணி? திமுக முதுகில் குத்திய காங்கிரஸ்! நேருக்கு நேர் தோழமைகளுடன் மோதும் கதர் தலைகள்? -
சேப்டி கேம் ஆடுகிறாரா எடப்பாடி? தென் மண்டலத்தை பாஜகவிற்கு தாரை வார்த்ததில் உள் அர்த்தம் இருக்கிறதா?











Click it and Unblock the Notifications