பிறந்தநாளன்று கூட மக்களை சந்திக்காதவர் ரஜினிகாந்த்... விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன் விமர்சனம்..!
சென்னை: உயிரே போனாலும் தேர்தலை சந்திப்பேன் எனக் கூறிய ரஜினிகாந்த் பிறந்தநாளன்று கூட மக்களை சந்திக்கவில்லை என தேமுதிக தலைவர் விஜயகாந்த் மகன் விஜயபிரபாகரன் விமர்சித்துள்ளார்.
ரஜினிகாந்த் மீது தாம் மரியாதை வைத்திருப்பதால் அவரை பற்றி மேற்கொண்டு கருத்து தெரிவிக்க விரும்பவில்லை எனத் தெரிவித்தார்.
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர் இதனைக் கூறினார்.

விஜய பிரபாகரன்
தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மூத்தமகன் விஜய பிரபாகரனுக்கு இன்று பிறந்தநாள். அதையொட்டி கோவில், சர்ச், என அனைத்து இடங்களுக்கும் சென்று காலையிலேயே வழிபட்டவர் செய்தியாளர்களையும் சந்தித்தார். அப்போது ரஜினி குறித்து பேசிய அவர், பிறந்தநாளன்று கூட மக்களை சந்திக்காதவர் ரஜினி என்றும் ரஜினி மீதுள்ள மரியாதை காரணமாக அவரைப் பற்றி மேற்கொண்டு பேச விரும்பவில்லை என்றார்.

புயல் போல்
அச்சத்தின் காரணமாகவே திமுக முதல் ஆளாக பிரச்சாரத்தை தொடங்கியுள்ளதாகவும் அதுவும் தொடங்கிய வேகத்திலேயே முடிந்தும் விட்டதாகவும் கூறினார். புயல் எப்படி வந்துவிட்டுச் சென்றதோ அதேபோல் திமுக பிரச்சாரமும் தொடங்கிய கணமே முடிந்தும் விட்டதாக விமர்சித்தார்.

விளக்கம்
தற்போதைய சூழலில் அதிமுக கூட்டணியில் தான் தேமுதிக இருப்பதாகவும், மூன்றாவது அணி உருவாகுமா என பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பிய காரணத்தினால் தான் மூன்றாவது அணி குறித்து தாம் கருத்து தெரிவித்ததாக கூறினார். எத்தகைய தடைகளையும் கடக்கும் ஆற்றலும் வலிமையும் தேமுதிகவுக்கு உள்ளதாக தெரிவித்தார்.

நிர்வாகிகள் அழைப்பு
தேமுதிக நிர்வாகிகள் அழைத்ததன் பேரில் தான் கட்சிப் பணிகளை தாம் கவனித்து வருவதாகவும், அரசியலுக்கு வரமாட்டேன் என தனக்கு சீன் ஓட்டத்தெரியாது (அவர் கூறிய வார்த்தை)என்றும், விஜய பிரபாகரன் தெரிவித்தார். முன்னதாக பிராட்வே சகாயமாத பேராலயம் முன்பு ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications