விஜயகாந்தையும் விடாத டிசம்பர் மாதம்.. வருட கடைசியில் பீதியாகும் மக்கள்.. இது உண்மையா?
சென்னை: பெரியார், முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோர் டிசம்பரில் தான் மறைந்தார். அந்த வரிசையில் கேப்டன் விஜயகாந்தும் டிசம்பர் மாதத்தில் தான் மறைந்துள்ளார். இதனிடையே கடந்த சில வருடங்களாக வருட கடைசி ஆனாலே இயற்கை சீற்றங்களும், தலைவர்கள் மரணமும் நடப்பது வாடிக்கையாக இருக்கிறது.
தமிழகத்தில் அரசியலில், திரைத்துறையில் ஆளுமை செலுத்திய முக்கிய தலைவர்கள் பலர் டிசம்பரில் தான் மரணம் அடைந்தனர். திராவிட கழகத்தின் முதுப்பெரும் தலைவர் பெரியார் (ஈவேராமசாமி), நேரடியாக அரசியலில் இறங்கி தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்றாலும், அவரதுவழியை பின்பற்றி தான் இன்றைய திமுக, அதிமுக கட்சிகள் செயல்படுகின்றன.

இன்றைக்கு திமுக, அதிமுகவிற்கான விதையை ஆரம்பித்து வைத்தது பெரியார் தான். பெரியார் உருவாக்கிய இயக்கத்தில் இருந்து வந்த அண்ணா தான் திராவிட முன்னேற்ற கழகத்தை உருவாக்கினார். அண்ணாவின் மீது அதிக பற்று வைத்திருந்த எம்ஜிஆர் அதன்பின்னர் அதிமுக தொடங்கினார். எனவே தமிழ்நாட்டை ஆளும் மற்றும் எதிர்க்கட்சிக்கு விதை போட்டது பெரியார் தான். பெரியார் 1973 டிசம்பர் 24ம் தேதி இயற்கை எய்தினார்.
அதேபோல் அண்ணாவின் வழியில் வந்த எம்ஜிஆர், மக்கள் திலகம், பொன்மனச் செம்மல், புரட்சி தலைவர் என பல பட்டங்களுடன் மக்களால் அழைக்கப்பட்டார். தமிழ் திரையுலகம் மற்றும் தமிழக அரசியலில் மிகப்பெரிய உச்சம் தொட்டார். முதல்வராக இருந்தபோதே மரணம் அடைந்தார். கடந்த 1987ம் ஆண்டு டிசம்பர் 24ம் தேதி உடல்நலக் குறைவு காரணமாக காலமானார்.
எம்ஜிஆர் மரணத்திற்கு பிறகு அரசியலில் விஸ்வரூருபம் எடுத்த ஜெயலலிதா, 1991ம் ஆண்டு தமிழகத்தின் முதல்வராக பதவியேற்றார். மீண்டும் 2001ம் ஆண்டிலும், 2011ம் ஆண்டிலும், 2016ம் ஆண்டிலும் முதல்வரானார். தொடர்ந்து இரண்டு முறை சட்டசபை தேர்தலில் எம்ஜிஆருக்கு பிறகு வென்று ஆட்சிக்கு வந்தது ஜெயலலிதா தான். இவரை அம்மா என அதிமுகவினரும் பொதுமக்களும் அழைத்தனர். கடந்த 2014ம் ஆண்டு உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட ஜெயலலிதா, அதன்பிறகு பல்வேறு உடல் உபாதைகளால் சிரமப்பட்டு வந்தார். கடந்த 2016ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 22ம் தேதி உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட ஜெயலலிதா, அதே 2016ம் ஆண்டு டிசம்பர் 5ம் தேதி உயிரிழந்தார்.
பெரியார், எம்ஜிஆர், ஜெயலலிதாவைப் போல் மூத்த பத்திரிக்கையாளரான சோவும் டிசம்பரில் மரணம் அடைந்தார். அரசியல் சாணக்கியராக அறியப்படும் சோ, கடந்த 2016ம் ஆண்டு டிசம்பர் 7ம் தேதி மரணம் அடைந்தார்.
இந்த வரிசையில் கேப்டன் விஜயகாந்த் உடல் நலக்குறைவால் டிசம்பர் 28ம் தேதி மரணம் அடைந்துள்ளார். கேப்டன் விஜயகாந்த் நுரையீரல் அழற்சி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு 'வெண்டிலேட்டர்' ஆதரவுடன் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் மருத்துவ பணியாளர்களின் கடின முயற்சி இருந்த போதிலும் நேற்று காலை காலமானார். இந்த தகவலை மருத்துவனை தெரிவித்தது.
இதனிடையே டிசம்பர் மாதம் வந்தாலே பெரிய இயற்கை பேரழிவு நடக்கிறது. தலைவர்கள் இறக்கிறார்கள். இதுவரை நடந்த சுனாமி, நிலநடுக்கம் , பெருமழை, வெள்ளம், புயல் போன்ற இயற்கை சீற்றங்கள் வந்தன. கடந்த 2015ம் ஆண்டில் டிசம்பரில் தான் பெரும் வெள்ளம் வந்தது.. அதன்பின்னர் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பரில் இயற்கை சீற்றங்கள் வாடிக்கையாக உள்ளன. இதேபோல் 2016ம் ஆண்டில் ஜெயலலிதா மரணம் அடைந்தார். அதே ஆண்டில் சோவும் மறைந்தார். முன்பு தலைவர்கள் , திரை நட்சத்திரங்கள் பலர் டிசம்பரில் தான் மரணம் அடைந்துள்ளனர். அந்தவகையில் விஜயகாந்தையும் டிசம்பர் காவு வாங்கியதால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
-
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள்












Click it and Unblock the Notifications