தீவுத்திடலில் விஜயகாந்த் உடல்.. வரிசையில் காத்திருந்து பொதுமக்கள் அஞ்சலி.. 3000 போலீசார் பாதுகாப்பு
சென்னை: விஜயகாந்த் உடல் பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக சென்னை தீவுத்திடல் கொண்டு வரப்பட்டது. கூட்ட நெரிசலை தவிர்க்க பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இதேபோல் 3000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
அரசியல் மற்றும் சினிமா உலகில் முத்திரை பதித்த விஜயகாந்த் உடல் நலக்குறைவு காரணமாக நேற்று காலை காலமானார். அவருக்கு வயது 71. விஜயகாந்த் மரண செய்தியை கேட்டு பிரேமலதா உடைந்து போனார். துக்கம் தாங்காமல் கண்ணீர்விட்டு கதறி அழுதார். மகன்கள் விஜய பிரபாகரன், சண்முக பாண்டியன் ஆகியோர் பிரேமலதாவை ஆறுதல்படுத்தினார்கள். தேமுதிகவினரும் விஜயகாந்த் மறைந்துவிட்டாரே என்று கண்ணீர்விட்டு கதறினார்கள்.

இதனையடுத்து மியாட் மருத்துவமனையில் இருந்து விஜயகாந்த் உடல் சாலிகிராமம் வீட்டிற்கு கொண்டு வரப்பட்டது. பின்னர் அங்கிருந்து கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. தேமுதிக அலுவலகத்திற்கு விஜயகாந்த் உடல் வருகிறது என தெரிந்தவுடன் லட்சக்கணக்கான தொண்டர்கள் அங்கு குவியத் தொடங்கினர். விஜயகாந்த் ஊர்வலம் சாலிகிராமத்திலிருந்து கோயம்பேடு வர 4 மணி நேரம் எடுத்துக் கொண்டது.
கோயம்பேடு அலுவலகத்தில் விடிய விடிய பொதுமக்கள், ரசிகர்கள், விஜயகாந்த் உடலுக்கு அஞ்சலி செலுத்தி வந்தனர். கோயம்பேடு பகுதி நெரிசல் மிக்கது என்பதால் விஜயகாந்த் உடலை பொதுமக்கள் அஞ்சலிக்காக தீவுத்திடல் கொண்டு செல்ல ஏற்பாடு செய்யப்பட்டது. இதன்படி, இன்று காலை 4.50 மணிக்கு விஜயகாந்தின் உடல் கட்சி அலுவலகத்திலிருந்து தீவுத்திடல் நோக்கி பயணத்தை தொடங்கியது.
தற்போது சென்னை தீவுத்திடலுக்கு விஜயகாந்த் உடல் கொண்டு செல்லப்பட்டது. அங்கு பொதுமக்கள், தொண்டர்கள் அஞ்சலி செலுத்துவதற்காக உடல் வைக்கப்பட்டுள்ளது. முன்னதாக விஜயகாந்த் உடல் தீவுத்திடல் கொண்டு வரப்படுவது அறிந்து முன்கூட்டியே அவரது ரசிகர்கள் தொண்டர்கள் அங்கு குவிந்தனர். எனவே கூட்ட நெரிசலை தவிர்க்க அங்கு முன்னேற்பாடுகள் செய்யப்பட்டன.
குறிப்பாக பொதுமக்கள் கூட்ட நெரிசல் இன்றி அஞ்சலி செலுத்திவிட்டு செல்லும் வகையில் அங்கு பல்வேறு முன்னேற்பாடுகள் செய்யப்பட்டன. மேலும் பொதுமக்கள் அமரும் வகையில் 2 ஆயிரம் இருக்கைகள் அமைக்கப்பட்டன. மேலும் பாதுகாப்பிற்காக சென்னை தீவுத்திடலில் 3,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இதேபோல் தீவுத்திடலில் மாநகராட்சி சார்பில், மக்களுக்கு குடிநீர் வசதியும் செய்யப்பட்டுள்ளது. கழிவறை வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. சென்னை மாநகராட்சி ஆணையர் ஜெ. ராதாகிருஷ்ணன் இதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளார். இதேபோல் தீவுத்திடல் சாலைகளில் கனரக வாகங்களுக்கு அனுமதி இல்லை. வெளியூர்களில் இருந்து வருபவர்கள் வாகனங்களை நிறுத்திக்கொள்ளவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
மொத்தமாக சென்னை தீவுத் திடலில் பொதுமக்கள் அமர 2,000 இருக்கைகள், பிரமுகர்கள் அமர 100 இருக்கைகள், 15 இடங்களில் நடமாடும் கழிவறைகள், பிரமுகர்கள் அஞ்சலி செலுத்த தனிப் பாதை, பொதுமக்கள் அஞ்சலி செலுத்த தனிப்பாதை அமைக்கப்பட்டுள்ளன.தற்போது 6.55 மணியளவில் இருந்து விஜயகாந்த் உடலுக்கு பொதுமக்கள் மற்றும் ரசிகர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். வெளியூர்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான மக்கள் சென்னை தீவுத்திடலுக்கு குவிந்து வருகின்றனர். நீண்ட வரிசையில் காத்திருந்து விஜயகாந்த் உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
-
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள்












Click it and Unblock the Notifications