"பச்ச குத்திட்டாங்களே".. விஜயகாந்த்துக்கு தெரியுமா.. அதைவிடுங்க.. "அங்கே" போனை போட்ட விஜய பிரபாகரன்
சென்னை: விஜயகாந்த்தின் தேமுதிக கட்சி, இந்த முறை யாருடன் கூட்டணி வைக்க போகிறது? என்ற எதிர்பார்ப்புகள் எகிறி கொண்டிருக்கின்றன.. என்ன நடக்கிறது தேமுதிகவில்?
விரைவில் எம்பி தேர்தல் வரப்போகிறது.. அனைத்து தமிழக கட்சிகளும் தேர்தலுக்கு தயாராகி கொண்டிருக்கின்றன. அந்தவகையில் தேமுதிகவும் தயாராகி வருவதாகவே தெரிகிறது..
ஆனால், யாருடன் கூட்டணி என்று இதுவரை தெரியவில்லை. திமுகவை விமர்சித்து வருவதை பார்த்தால், அதிமுகவுடன் கூட்டணி வைக்கலாம் என்கிறார்கள்.. ஆனால் இதுவும் உறுதியாக தெரியவில்லை.

மார்த்தாண்டம்: நேற்றைய தினம், தேமுதிக தலைவர் விஜயகாந்த் மகன், விஜய பிரபாகரன், மார்த்தாண்டத்தில் பல்வேறு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வந்திருந்தார்.. அப்போது விஜய் பிரபாகர் செய்தியாளர்களிடம் சில கருத்துக்களை வெளிப்படுத்தியிருந்தார்.
அதில், "திராவிட மாடல் ஆட்சி அறிக்கை வடிவில் மட்டுமே உள்ளது. அது செயல் பாட்டில் வந்தால் வரவேற்கலாம். அண்ணாமலை வெளியிட்டுள்ள சொத்து பட்டியல் உட்பட விவகாரங்களில் நீதிமன்ற தீர்ப்பே இறுதியானது. குற்றம் செய்தால் கண்டிப்பாக அதன்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். விஜயகாந்த் உடல் நிலை நன்றாகவே இருக்கிறது.
2 அமைச்சர்கள்: குமரி மாவட்டம் உட்பட அண்டை மாவட்டங்களில் இருந்து கடந்த அதிமுக ஆட்சியில், கனிமவள கடத்தல் நடைபெற்றபோது வழக்கு தொடர்ந்து போராட்டங்கள் நடத்தியவர்கள் இப்போது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. குமரி மாவட்ட அமைச்சர் இப்போது எந்த நடவடிக்கையும் எடுக்காதது ஏன்? பொதுப்பணிதுறை , தகவல்தொழில்நுட்ப துறை இரண்டு அமைச்சர்களுக்கு கனிமவள கடத்தலில் தொடர்பு உள்ளதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதற்கு முதல்வர்தான் பதில் அளிக்க வேண்டும்" என்றார்..
இந்த பேட்டியிலும் திமுகவுக்கு எதிரான நிலைப்பாட்டிலேயே தேமுதிக உள்ளதால், அதிமுகவுடன் கூட்டணிக்கு நிறைய வாய்ப்பிருக்கலாம் என்கிறார்கள்.. இதையடுத்து, தேமுதிகவின் முக்கிய ஆதரவாளர்கள் சிலரிடம் பேசினோம்.. கட்சிக்குள் என்ன நடக்கிறது? யாருடன் கூட்டணி என்று கேட்டோம்.. அதற்கு அவர்கள் நம்மிடம் பகிர்ந்து கொண்ட கருத்துக்கள்தான் இவை:

விஜய பிரபாகரன்: "வரப்போகும் எம்பி தேர்தலை முன்னிட்டு, களப்பணியில் கடந்த சில மாதங்களாகவே தேமுதிக நிர்வாகிகள் நாங்கள் இறங்கி வருகிறோம்.. உட்கட்சி தேர்தலை பலப்படுத்தும் வேலையில் ஈடுபட்டு கொண்டிருந்தோம்.. பூத்வாரியாக வேலைகளும் நடந்து கொண்டிருக்கின்றன.. தொய்வை சரிப்படுத்தும் வேலையில் மும்முரமாகி உள்ளோம். விஜயபிரபாகரனின் அரசியல் எழுச்சியை மட்டுமே நாங்கள் அதிகம் நம்பி உள்ளோர்ம.
நடந்து முடிந்த ஈரோடு இடைத்தேர்தலின்போது, அவருக்கான ஆதரவை நாங்கள் நேரடியாகவே பார்த்தோம்.. மரப்பாலம் பகுதியில் வாக்கு சேகரிக்கபோன விஜயபிரபாகரனை பார்த்ததுமே, அந்த பெண்கள் ஓடிவந்து கட்டிப்பிடித்து கொண்டு, அவரது கன்னத்தை தடவி அழ ஆரம்பித்துவிட்டார்கள்.. "பார்க்கிறதுக்கு அப்பா மாதிரியே இருக்கிறீயேப்பா.. அவரை மாதிரியே செயல்பாட்டிலும் இருப்பது ரொம்ப மகிழ்ச்சி" என்று கண்ணீர் விட்டு அழுது, அரவணைத்தது நெகிழ்ச்சி எங்களுக்குள் கூட்டியது.
பக்குவம் முதிர்ச்சி: இன்றும்கூட, விஜயகாந்த்தின் தீவிரமான பல தொண்டர்கள், அவர்களது கையில் "கேப்டன்" என்று பச்சைக் குத்தி கொண்டு, களப்பணியில் இறங்கி உள்ளார்கள்.. இப்படிப்பட்ட தீவிரமான தொண்டர்கள்தான், எங்களை இன்னமும் இயக்க வைத்து கொண்டிருக்கிறது.. அத்துடன், விஜய பிரபாகரனின் பக்குவமும், முதிர்ச்சி அரசியலும் கூடியுள்ளதும் கட்சிக்கு தெம்பை தந்து கொண்டிருக்கிறது..

இப்போதெல்லாம் எங்களை போல நிர்வாகிகளுக்கு நேரடியாகவே போன் போட்டு பேசி வருகிறார் விஜயபிரபாகரன்.. "என்ன பண்றீங்க? உங்கள் தொகுதியில் மக்களிடம் நெருங்கியிருக்கும்படியான பிரச்சனைகளை கையில் எடுங்கள், அடுத்தக்கட்டமாக என்ன செய்யலாம்" என்று ஈகோ எதுவும் இல்லாமல் ஆலோசனை கேட்கிறார். விஜயகாந்தின் அதே உத்வேகம், அதே பாசம், விஜயபிரகாரனிடம் இருப்பதால், "அடுத்த அவதாரம் ரெடி" என்பதாகவே நாங்கள் பார்க்கிறோம்..
மா.செ.கூட்டம் விரைவில்: விரைவில் தேமுதிக தலைமையில், மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை விரைவில் நடத்த போகிறோம்.. அதற்கான அறிவிப்பினை தலைமை வெளியிடும்.. நடந்து வரும் களப்பணிகள், அடுத்தக்கட்ட நடவடிக்கைகள், எம்பி தேர்தலுக்கான கூட்டணி சம்பந்தமான ஆலோசனைகள் உள்ளிட்டவற்றை நடத்த போகிறோம்.. தேமுதிக கூட்டணி குறித்து கேட்கிறீர்கள்.. இப்போது, மீடியாக்களில் பொய்யான தகவல்கள் அவிழ்த்துவிடப்பட்டு வருகின்றன.. எல்லாமே வதந்திகள்.. இப்போதைக்கு கூட்டணி பற்றி எந்த முடிவையும் நாங்கள் எடுக்கவில்லை.. மாறாக, கட்சியின் அடித்தளத்தை பலப்படுத்துவதில் மட்டுமே எங்கள் முழுகவனம் குவிந்து உள்ளது" என்று முடித்து கொண்டனர் நிர்வாகிகள்.
-
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ












Click it and Unblock the Notifications