பாஜகவினர் வற்புறுத்தியதால் கையெழுத்திட்டேன்.. அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட விஜயகுமார் விளக்கம்
சென்னை: பாஜக சார்பில் நடத்தப்பட்டு வரும் மும்மொழிக் கொள்கைக்கு ஆதரவான இயக்கத்தில் கையெழுத்து போட்ட முன்னாள் எம்எல்ஏ விஜயகுமார் அதிமுகவில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில், மும்மொழிக் கொள்கைக்கு ஆதரவாக பாஜகவினர் அழுத்தம் கொடுத்து வற்புறுத்திக் கேட்டதால் கையெழுத்திட்டேன் என்றும், இதுகுறித்து பொதுச் செயலாளரை சந்தித்து என் தரப்பு விளக்கத்தை அளிப்பேன் என்றும் முன்னாள் எம்எல்ஏ விஜயகுமார் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தின் பள்ளிக் கல்வித் துறைக்கு வழங்க வேண்டிய நிதியை தேசிய கல்விக் கொள்கையை ஏற்றால் மட்டுமே தமிழ்நாட்டிற்கு நிலுவையில் உள்ள ரூ.2,152 கோடி விடுவிக்கப்படும் என்றும், இந்தியாவில் பாஜக ஆட்சி செய்யாத மாநிலங்கள் கூட மும்மொழி கொள்கையை ஏற்கும் போது, தமிழ்நாடு ஏற்பதற்கு என்ன என்றும் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் கேள்வி எழுப்பியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.

இதற்கு பல்வேறு தரப்பினரும் கடுமையாக எதிர்ரப்புத் தெரிவித்தனர். மீண்டும் தமிழ்நாட்டில் மும்மொழிக் கொள்கை, இந்தி திணிப்பு குறித்த விவாதம் எழுந்தது. திமுக, அதிமுக உட்பட பல்வேறு கட்சிகளும் ஓரணியில் திரண்டு இருமொழிக் கொள்கையே தொடர வேண்டும் என்று மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்தனர். பல்வேறு போராட்டங்களும் நடத்தப்பட்டு வந்தன.
இதற்கிடையே மும்மொழிக் கொள்கைக்கு ஆதரவாகவும், இந்தி கற்றுக் கொள்வதால் ஏற்படும் நன்மைகள் குறித்தும் பாஜக தரப்பில் கூறப்பட்டு வந்தது. மத்திய இணையமைச்சர் எல்.முருகன், கும்மிடிப்பூண்டி தாண்டினால் சிரிச்சுகிட்டே இந்தியில் திட்டுவான்.. தமிழ்நாட்டில் யாருக்கு ஆங்கிலம் தெரியும்.. கிராமத்தில் இருப்பவர்களுக்கு ஆங்கிலம் தெரியுமா என்று கூறியிருந்தார்.
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, பார்டர் தாண்டினால் சாப்பிட வேண்டும் தலைவா என்றும் கருத்து தெரிவித்திருந்தார். இதற்கிடையே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இந்தி திணிப்பு காரணமாக இந்தியாவில் இருந்து 26 மொழிகள் அழிந்துள்ளன. ரூ.2 ஆயிரம் கோடி என்ன.. ரூ.10 ஆயிரம் கோடி நிதி கொடுப்பேன் என்று கூறினாலும், தேசிய கல்விக் கொள்கையில் கையெழுத்து போட மாட்டேன் என்று அறிவிப்பு வெளியிட்டிருந்தார்.
தமிழ்நாட்டில் தொடர்ந்து இந்தி திணிப்பு குறித்த விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், பாஜக சார்பில் நடத்தப்பட்டு வரும் மும்மொழிக் கொள்கைக்கு ஆதரவான இயக்கத்தில் கையெழுத்து போட்ட முன்னாள் எம்எல்ஏ விஜயகுமார் அதிமுகவில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
இதுகுறித்து, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியுள்ளதாவது: திருவள்ளூர் வடக்கு மாவட்டம், கழகத்தின் கொள்கை - குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும்; கழகத்தின் சட்ட திட்டங்களுக்கு மாறுபட்டு, கழகத்தின் ஒழுங்குமுறை குலையும் வகையில் நடந்துகொண்டதாலும்; கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில், கழகக் கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும் அவப் பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும், திருவள்ளூர் வடக்கு மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் எம்எல்ஏ K.S.விஜயகுமார் (மாவட்ட புரட்சித் தலைவி பேரவைச் செயலாளர், எல்லாபுரம் வடக்கு ஒன்றியக் கழகச் செயலாளர்) இன்று முதல் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார். கழக உடன்பிறப்புகள் யாரும் இவருடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக்கொள்ளக் கூடாது என கேட்டுக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, அதிமுக முன்னாள் எம்எல்ஏ விஜயகுமார் கூறுகையில், மும்மொழிக் கொள்கைக்கு ஆதரவாக பாஜகவினர் அழுத்தம் கொடுத்து வற்புறுத்திக் கேட்டதால் கையெழுத்திட்டேன். பொதுச் செயலாளரை சந்தித்து என் தரப்பு விளக்கத்தை அளிப்பேன் என்று தெரிவித்துள்ளார்.
-
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
என்னப்பா அங்க சத்தம்.. ஆக்ஷனில் இறங்கிய ’ஷா’! சரண்டரான அதிமுக தலைகள்! பஞ்சாயத்து முடிந்தது எப்படி? -
அதிமுகவில் அடுத்தடுத்து 2 விக்கெட்.. மாஜி எம்எல்ஏக்கள் 2 பேர் தவெகவில் ஐக்கியம்.. யார் இவர்கள்? -
அதிமுகவில் தவெக ’துரந்தர்’.. மாமியார் மூலம் இலையை கருக வைத்த ’அர்ஜுனா’ வியூகம்! பலே பாலிடிக்ஸ் விஜய் -
அதிமுகவில் இன்னொரு பெரிய ‘விக்கெட்’.. தவெகவில் இணைந்தார் முன்னாள் டிஜிபி நடராஜ்! -
விஜய் இஸ் இஞ்சூரியஸ் டூ இரட்டை இலை.. அதிமுகவின் ஒவ்வொரு செங்கலையும் பிரிக்கும் தவெக! எடப்பாடி ஷாக்! -
அதிமுகவை நோக்கி தவெக போட்ட வலை.. எம்ஜிஆரை தூக்கும் போதே யோசிச்சுருக்கனும்! கோட்டை விட்ட எடப்பாடி! -
சரண்டரான சண்முகம்.. எடப்பாடி கைக்கு போன ‘கீ’.! உச்சகட்ட டென்சனில் விழுப்புரம்.. தவெகவில் ஐக்கியம்? -
தவெக குதிரை பேரம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தவேண்டும்.. ஆளுநரை சந்தித்து அதிமுக நிர்வாகிகள் புகார் -
தவெகவில் இணைவது உறுதி போலயே.. அமைச்சருடன் கோயிலுக்கு வந்த விஜயபாஸ்கர்.. அடுத்தது என்ன? -
குதிரை பேரம் இல்லை, கற்பனை! அதிமுகவை தவெக உடைத்ததா? விஜய்க்கு ஆதரவாக ஐயுஎம்எல் காதர் மொய்தீன் பேச்சு












Click it and Unblock the Notifications