விஜய் கொடுத்த ரியாக்ஷன்..! டிரெண்டிங் ஆன கீர்த்தி ஆல்பம்! யார் அந்த போட்டோகிராஃபர்
சென்னை: நடிகை கீர்த்தி சுரேஷின் திருமணத்தில் விஜய் எடுத்துக் கொண்ட புகைப்படம் பலரது கவனத்தை ஈர்த்துள்ள நிலையில், அது குறித்த சுவாரஸ்ய தகவல்களை போட்டோகிராஃபர் தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு டிசம்பர் 12 ஆம் தேதி நடிகை கீர்த்தி சுரேஷின் திருமணம் முதலில் இந்து முறைப்படி நடைபெற்றதை அடுத்து அவரது கணவர் ஆண்டனி தட்டில் கிறிஸ்துவர் என்பதால் கோவாவில் அவரது மத சம்பிரதாயப்படி ஒருமுறை மீண்டும் இருவரும் மணம் புரிந்து கொண்டனர். அந்த நிகழ்ச்சியில் நடிகர் விஜய் மற்றும் த்ரிஷா எனத் திரைப் பிரபலங்கள் பலரும் கலந்துகொண்டனர்.

ஆண்டனியைச் சிறுவயதிலிருந்தே கீர்த்தி காதலித்து வந்தார். அவர்கள் இருவருக்கும் இடையே 15 ஆண்டுக்கால நட்பு இருந்து வந்தநிலையில், பெற்றோர்களின் சம்மதத்துடன் இருவரும் குடும்ப வாழ்க்கைக்குள் அடி எடுத்து வைத்தனர்.
கோவாவில் நடைபெற்ற திருமணவிழாவில் கலந்து கொண்டு விஜய் வாழ்த்திய புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலானது. இந்த ஜோடி இருவரையும் விஜய் அரவணைத்து நின்றபடி டாடா காட்டிய அந்த போஸ் பலரால் அதிகம் விரும்பப்பட்டது. அந்தப் படத்தை எடுத்தவர் போட்டோகிராபர் கிரண் ஷா. இவர் கீர்த்தி சுரேஷின் பர்சனல் போட்டோகிராஃபராக பல ஆண்டுகளாக இருந்துவருகிறார். படத்திற்காகவும் தனிப்பட்ட தேவைக்காகவும் கீர்த்தி சுரேஷை படங்கள் எடுத்துள்ளார். அவை அதிக அளவில் கவனம் பெற்றுள்ளன.
கீர்த்தி சுரேஷை கடந்த 2018 முதல் பல படங்களை எடுத்துள்ள கிரண், இந்தத் திருமணத்திற்காகவே கோவா அழைக்கப்பட்டுள்ளார். அவர் எடுத்த விஜய் படத்திற்குப் பின்னால் நடந்தது என்ன? அவர் ஏன் இரண்டு கைகளை உயர்த்தி டாடா காட்டினார்? அதைப் பற்றிய சுவாரஸ்யமான விசயங்களை கிரண் வெளிப்படுத்தியுள்ளார்.
“நான் கடந்த 5 ஆம் தேதியே கோவாக்கு கீர்த்தி சுரேஷுடன் போய்விட்டேன். எனக்கு கீர்த்தியின் காதலர் தட்டில் அண்ணாவை 2018இல் இருந்தே எனக்குத் தெரியும். பல வருடமாகக் கீர்த்தியைப் பலமுறை படங்கள் எடுத்திருந்தாலும் அவர் என்னிடம் கல்யாணம் பற்றிச் சொல்லவே இல்லை. அவர் போன் செய்து டிசம்பர் 5 முதல் 17வரை தேதியை யாருக்கும் கொடுக்க வேண்டாம். ப்ளாக் பண்ணி வைத்துக் கொள் என்றார். பிறகுதான் கல்யாணம் என்பது எனக்குத் தெரிந்தது.

காலையில் இந்து முறைப்படி திருமணம் முடிந்த உடனேயே மாலை கிறிஸ்துவ முறைப்படி ஒரு திருமணம் நடந்தது. ஆகவே, அன்று முழுக்கவே அவ்வளவு வேலைகள் இருந்தது. அப்படி இருந்தும் செம ஜாலியாக இருந்தோம். விதவிதமான ட்ரெஸ் எடுத்துக் கொடுத்திருந்தார் கீர்த்தி. அதைப் போட்டுக்கொண்டு செலிபிரைட்டி கல்யாணம் என்ற பதற்றம் இல்லாமல் எடுத்தோம்.
கீர்த்தி மேடம் மடிசார் சேலையில் நான் பார்த்ததே இல்லை.எவ்வளவு படங்கள் எடுத்திருக்கிறேன். முதல் முறை அவர் மடிசார் புடவையில் மிக அழகாக இருந்தார். ஒவ்வொரு படத்திற்கும் அவர் காட்டிய புன்னகையால் எடுத்த படங்கள் அழகாக வந்தன.
விஜய் முன்பே வந்து காத்திருந்து வாழ்த்தினார். அவரைப் படம் எடுக்கும் வரை சாதாரணமாகவே இருந்தார். திடீரென்று கையை உயர்த்தி 'ஹாய்’ சொல்வதைப் போல போஸ் கொடுத்தார். அதை நாங்கள் எதிர்பார்க்கவே இல்லை. அதுதான் கேமிரா மேஜிக். அதை அவருக்குச் சொல்லிக் கொடுக்கத் தேவையில்லை. ஆகவேதான் அந்தப் படம் வைரலானது” என்று கூறியுள்ளார்.
-
தவெக கூட்டத்துக்கு அனுமதி மறுப்பா? நாளை கூட்டம் என இன்று எழுதி தந்தா போதாது.. குமரகுருபரன் விளக்கம் -
தவெக வேட்பாளர் அறிமுக கூட்டம் திடீர் ரத்து.. தேர்தல் ஆணைய அனுமதி கிடைக்காததால் ஒத்திவைப்பு! -
பெண்கள் குறித்த பொன்ராஜ் பேச்சுக்கு விஜய் கடும் கண்டனம்.. திமுகவையும் காட்டமாக விமர்சித்த விஜய்! -
“விஜய் முதலில் மன்னிப்பு கேட்கணும்”.. பதில் சொல்ல வக்கு இல்லையா? பொன்ராஜ் கொடுத்த ரிப்ளை! -
தவெக பரப்புரைக்கு தடைபோடுவதா.. திடீர் பள்ளம், தடுப்பு எங்கிருந்து வந்துச்சு? கடுப்பில் விஜய் அறிக்கை -
பெரம்பூரில் விஜய்க்காக அரங்கேறும் திரைமறைவு சதி! பலிகடாவாக்கப்படுகிறதா அதிமுகவின் வெற்றிவாய்ப்பு! -
விஜய் படங்களை ஹிட்டாக்க செய்த வில்லங்க வேலை.. அம்பலப்படுத்திய பிரபலம்.. கடுப்பில் ரசிகர்கள் -
பெரம்பூர் தொகுதி பாமகவுக்கு ஒதுக்கப்பட்டது விஜய்க்கு சாதகமா? கள நிலவரம் என்ன? டேட்டாவை பாருங்க -
டிவில கூட விஜய் படத்தை போடக் கூடாது.. அவசர கடிதத்தை தேர்தல் அதிகாரிக்கு எழுதிய காங்கிரஸ் -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
விஜய்- திரிஷா பற்றி அப்படி பேச காரணமே இதுதான்! வீடியோவுக்கு பின்னாடி இருந்த சம்பவம்! சமுத்திரக்கனி விளக்கம் -
வடக்கில் தொடங்கும் விஜய்.. பெரம்பூரில் மாஸ் காட்ட பலே ப்ளான்! 2026ல் கைகொடுக்குமா? திடீர் கோரிக்கை!












Click it and Unblock the Notifications