வில்லிவாக்கத்திலிருந்து.. தி.நகருக்கு 1 மணி நேரத்தில் போக முடியாதாம்! பரப்புரையை ரத்து செய்த விஜய்!
சென்னை: தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், நாளை சென்னையின் வில்லிவாக்கம், தி.நகர் உள்ளிட்ட பகுதிகளில் பிரச்சாரம் செய்ய இருந்தார். ஆனால், இதற்கான விதிக்கப்பட்ட நிபந்தனைகள் கடுமையாக இருப்பதாக கூறி, விஜய் தனது பரப்புரையை ரத்து செய்திருக்கிறார்.
குறிப்பாக வில்லிவாக்கத்திலிருந்து, தி.நகருக்கு 1 மணி நேரத்தில் செல்ல வேண்டும் என்று நிபந்தனை விதிக்கப்பட்டதாகவும், அது சாத்தியமில்லை என்பதால் பிரச்சாரம் ரத்து செய்யப்படுவதாகவும் சொல்லப்பட்டிருக்கிறது.

விஜய் எங்கு பிரச்சாரத்திற்கு சென்றாலும், அங்கு ஏதேனும் சில அசம்பாவித சம்பவங்கள் நடந்துவிடுகின்றன. பைக்கில் செல்பவர்கள் தடுமாறி விழுகிறார்கள், பின்னால் துரத்தும் ரசிகர்கள் விபத்தில் சிக்குகிறார்கள், அல்லது பொதுமக்கள் மீது விழுந்து விபத்தை ஏற்படுத்துகிறார்கள். இதெல்லாம் ஒருபுறம் இருக்க மறுபுறம், கூட்ட நெரிசல் காரணமாக பெண்களும், குழந்தைகளும் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். எனவே இதை சமாளிக்க விஜய் பரப்புரை செய்யும் இடங்களில் கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டன.
இப்படி இருக்கையில் நாளை சென்னை வில்லிவாக்கத்தில் பரப்புரை செய்ய இருந்தார் விஜய். வில்லிவாக்கம் சிட்கோநகரில்தான் விஜய் பரப்புரை செய்ய இருந்தார். சிட்கோநகர் என்பது, பாடி மேம்பாலத்திலன் இறக்கப்பகுதியாகும். இது போக்குவரத்து நெரிசல் அதிகம் கொண்ட பகுதி. சென்னையின் புறநகர் பகுதியை, சென்னையுடன் இணைக்கும் இடம் இது.
எனவே நீண்ட நேரம் பிரச்சாரம் செய்தால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். அதேபோல, விஜய் அடுத்தடுத்த பிரச்சார ஸ்பாட்களுக்கு சீக்கிரமாக மூவ் செய்ய வேண்டும். இது குறித்து சில கட்டுப்பாடுகளை தேர்தல் ஆணையம் விதித்திருந்தது. ஆனால், தற்போது சென்னை பிரச்சாரத்தை விஜய் ரத்து செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
காரணம், வில்லிவாக்கத்திலிருந்து ஒரு மணி நேரத்தில் தி.நகருக்கு விஜய் போக வேண்டும் என கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டடிருந்ததாக சொல்லப்படுகிறது. இது சாத்தியமான விஷயம்தான். இருப்பினும், தாமதமாகலாம் என்பதால் விஜய் தனது பரப்புரையை ரத்து செய்திருக்கிறாராம்.












Click it and Unblock the Notifications