விஜயின் கடைசி படம்.. "ரெய்டு போட்டோவை" வைத்து உருவாக்கப்பட்ட ஜனநாயகன் போஸ்டர்.. யாருக்கு மெசேஜ்?
சென்னை: நடிகர் விஜய் நடிக்கும் 69வது மற்றும் கடைசி படமான ஜனநாயகன் படத்தின் போஸ்டர் வெளியாகி உள்ளது. இந்த போட்டோ வருமான வரித்துறை ரெய்டு சமயத்தில் எடுக்கப்பட்ட அவரின் பிரபல போட்டோவை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்டு உள்ளது.
கடந்த 2020ம் ஆண்டு பிப்ரவரி மாதம் நடிகர் விஜயின் மாஸ்டர் படம் ஷூட்டிங் நடந்தது. தற்போது அவரின் வீட்டில் வருமான வரித்துறை ரெய்டு நடத்தப்பட்டது. ரெய்டுக்கு பின் மீண்டும் நெய்வேலிக்கு நடிகர் விஜய் ஷூட்டிங்கிற்கு சென்றார். அப்போது விஜய்க்கு ஆதரவாக ரசிகர்கள் பலர் கூடி இருந்தனர்.

முக்கியமாக பெண்கள்தான் அதிக அளவில் விஜயை பார்க்க குவிந்து இருந்தனர். கல்லூரி முடித்துவிட்டு பலர் விஜய்யை பார்க்க அங்கே வந்திருந்தனர். மாணவர்கள், என்எல்சி ஊழியர்கள் பலர் அங்கே குவிந்து இருந்தனர். இதனால் பாதுகாப்பிற்கு அங்கே போலீஸ் வரவழைக்கப்பட்டது. கூட்ட நெரிசல் காரணமாக அசம்பாவிதம் ஏற்பாடாமல் இருக்க அங்கே போலீஸ் மொத்தமாக குவிக்கப்பட்டது.
ஆனால் போலீஸ் வந்தும் கூட அங்கு கூட்டத்தை கட்டுப்படுத்த முடியவில்லை. கூட்டம் காரணமாக ரசிகர்கள் சிலர் மீது போலீசார் லத்தி மூலம் தாக்குதல் நடத்தினார்கள். ஆனால் போலீஸ் அப்படி தாக்குதல் நடத்தியும் அங்கிருந்து கூட்டம் வெளியே செல்லவில்லை. விஜயை பார்த்துவிட்டுதான் செல்வோம் என்று அங்கு மொத்தமாக எல்லோரும் நின்றார்கள். அதன்பின் விஜய் வெளியே வந்து ரசிகர்களை சந்தித்தார்.

பின் ரசிகர்கள் உடன் சேர்ந்து புகைப்படம் எடுத்துக் கொண்டார். மேலும் என்எல்சி ஊழியர்கள் சிலர் விஜயுடன் செல்பி எடுத்துக் கொண்டனர். அதன்பின் அங்கிருந்து போலீசார் சிலரும் விஜயுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். விஜய் மக்களுடன் எடுத்த இந்த புகைப்படம் தேசிய அளவில் கவனம் பெற்றது. விஜய்க்கு மக்கள் ஆதரவு இருப்பதை காட்டும் விதமாக இந்த போட்டோ அமைந்து இருந்தது. அதை இணையத்திலும் கூட விஜய் போஸ்ட் செய்து இருந்தார்.
ட்விட்டர் செயலியில் விஜய் செய்திருந்த போஸ்ட் அந்த வருடத்தில் இந்தியாவில் அதிகம் லைக் செய்யப்பட்ட போஸ்ட்டாகவும் கூட மாறியது.
விஜய் போஸ்டர்:
நடிகர் விஜய் நடிக்கும் 69வது மற்றும் கடைசி படமான ஜனநாயகன் படத்தின் போஸ்டர் வெளியாகி உள்ளது. இந்த போட்டோ வருமான வரித்துறை ரெய்டு சமயத்தில் எடுக்கப்பட்ட அவரின் பிரபல போட்டோவை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்டு உள்ளது. அதே போட்டோவை அடிப்படையாக வைத்து இந்த போஸ்டர் உருவாக்கப்பட்டு உள்ளது.

இப்படிப்பட்ட நிலையில்தான் விஜய் மீண்டும் வர வேண்டும். சினிமாவில் நடிக்க வேண்டும். சினிமாவிற்குள் மீண்டும் ரீ என்ட்ரி கொடுக்க வேண்டும்.. விஜய் முடிவால் தமிழ் திரையுலகிற்கு பெரிய சிக்கலாகிவிட்டது..முடிவை மாற்றிக்கொள்ளுங்கள் விஜய்.. என்று அவரின் ரசிகர்கள் கோரிக்கை வைக்கின்றனர். அரசியல் இருக்கட்டும்.. ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் துணை முதல்வர் ஆன பின்பும் கூட சினிமாவில் நடிக்கிறார். அடுத்த படத்தில் கூட அவர் சைன் செய்துள்ளார்.
அதிலும் பவன் கல்யாண் நடிக்கும் அடுத்த படம் 2 பாகங்களாக வருகிறது. விஜய் அப்படி நடிக்க வேண்டும். அதுவே தமிழ் சினிமாவிற்கு நல்லது. விஜய் முடிவால் தமிழ் திரையுலகிற்கு பெரிய சிக்கலாகிவிட்டது.. இதனால் தனது முடிவை விஜய் மாற்றிக்கொள்ள வேண்டும்.. அவர் ரிட்டையர் ஆக கூடாது என்று அவரது ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications