Vijay's Sangeetha in Trichy: விஜய்யின் தவெக பிரச்சாரத்தில் சங்கீதா? திருச்சிக்கு வருகிறாரா?
சென்னை: விஜய் தனது மனைவி சங்கீதாவை பிரிந்திருக்கிறார், இருவருக்கும் கருத்து வேறுபாடு என்றெல்லாம் வியூகங்கள் ரெக்கை கட்டி பறந்த நிலையில் அவர் சென்னை வந்துள்ள புகைப்படம் வைரலானது. இந்த நிலையில் நாளை மறுநாள் (செப்டம்பர் 13) திருச்சியில் நடைபெறும் பிரச்சாரத்தில் சங்கீதா கலந்து கொள்ள போகிறார் என்ற உறுதிப்படுத்தப்படாத தகவலும் கிடைத்துள்ளது.
பிரபலம் என்றாலே பிராப்ளம் என சொல்லப்படுவதுண்டு. குறிப்பாக திரைப் பிரபலங்களால் எந்த செயலையும் மறைவாக செய்ய முடியாது. எப்படியாவது அது வெளியே வந்து பூதாகரமாகிவிடும். அதிலும் பிரபலங்கள் வீட்டில் விவாகரத்து, கணவன் மனைவி பிரச்சனை, தந்தை மகன், மகள் பிரச்சினை என்றால் போதும் அதை தெரிந்து கொள்ள பலருக்கு ஆர்வம் அதிகம்.

திருமணம், குழந்தை பிறப்பு போன்ற நல்ல விஷயங்களை தெரிந்து கொள்வதிலும் ஆர்வம் அதிகமாக இருக்கும் என்பதை மறுப்பதற்கில்லை. அந்த வகையில்தான் அண்மைக்காலமாக விஜய் குடும்பம் குறித்து பேசப்பட்டு வருகிறது. அதாவது தந்தை, தாயுடன் விஜய் பேசுவதில்லை என்றும், நீலாங்கரை வீட்டிற்கு பேரன் பேத்திகளை பார்க்க (லண்டன் போவதற்கு முன்பு) தாய், தந்தையினர் வந்தாலும் அவர்களுடன் விஜய் முகம் கொடுத்துக் கூட பேச மாட்டார் என்றெல்லாம் ஏதோ நேரில் பார்த்தவர்கள் போல் கதை கட்டி வந்தனர்.
அது போல் அவருடைய மனைவி சங்கீதாவும் விஜய்யை விட்டு பிரிந்து தனது குழந்தைகளுடன் லண்டனில் வசித்து வருகிறார் என்றனர். விஜய் படங்களின் இசை வெளியீட்டு விழாக்களுக்குத்தான் வரவில்லை. கணவர் கட்சி ஆரம்பித்து அந்த கட்சியில் இரு மாநாடுகள் நடைபெற்றுள்ள நிலையில் அந்த மாநாட்டில் கூட சங்கீதா கலந்து கொள்ளவில்லை. கடைசியாக முரசொலி செல்வம் மறைவுக்கு கலங்கியபடியே வந்தார் சங்கீதா. அதன் பிறகு கணவரின் கட்சி விவகாரங்களில் அவர் கலந்து கொள்ளவே இல்லை.
இந்த நிலையில் கடந்த வாரம் தனது மகனுடன் சென்னை விமான நிலையத்தில் அவர் இருப்பது போன்ற புகைப்படங்கள் வெளியாகின. அவர் இயக்குநர் ஷங்கரின் மனைவியுடன் பேசிக் கொண்டே நடந்து வருவது போல் இருந்த காட்சிகள் இருந்தன. பின்னால் அவரது மகன் சஞ்சய் இருந்தார்.
அவர் எதற்காக வந்தார் என்பதெல்லாம் தெரியவில்லை. சிலர் அந்த விமான நிலையம் சென்னை இல்லை என்றனர். இன்னும் சிலர் சங்கீதாவுக்கு சினிமாவை விட்டுவிட்டு விஜய் அரசியலுக்கு வந்தது பிடிக்கவில்லை, அதனால்தான் அவர் மாநாடுகளில் கலந்து கொள்ளவில்லை என்றார்கள். இந்த நிலையில் அவர்களின் வாயை அடைப்பது போல் வரும் 13 ஆம் தேதி திருச்சியில் தவெக தலைவர் விஜய் தொடங்கும் பிரச்சாரத்தில் சங்கீதா கலந்து கொள்ள போகிறார் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன. இது எந்தளவுக்கு உண்மை என தெரியவில்லை.
-
வேற லெவலில் விஜய் செய்த சம்பவம்! ஒரே நேரத்தில் 300 பேருக்கு ப்ரோமோஷன்! வரலாற்றில் முதன்முறையாமே! -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
ஸ்டாலின் தோற்றது விஜய்க்கு வருத்தமளித்திருக்கலாம்! ஓபனாக பேசிய ப.சிதம்பரம்! -
“திமுக கூட்டணிக் கட்சிகளிடம் கையேந்தி, கெஞ்சி ஆட்சி அமைத்துள்ளார் விஜய்”.. டிடிவி தினகரன் தாக்கு! -
விஜய் Vs உதய் Vs அண்ணாமலை? திராவிடக் கடப்பாரைகளை வளைத்த Gen Z! இளைஞர்களால் மாறும் அரசியல் களம்! -
காலம் எவ்ளோ வேகமாக சுத்துது! அன்று கடம்பூர் ராஜூவுக்காக விஜய் காத்திருந்தார்! இன்று அப்படியே உல்டா! -
கே.என்.நேரு மீது FIR.. டெல்லிக்கு பந்தை திருப்பிய முதல்வர் விஜய்.. அமலாக்கத்துறை மாஸ்டர் ஆட்டம்? -
மீண்டும் டெல்லி செல்லும் முதல்வர் விஜய்.. அமித்ஷா, காங்கிரஸ் மூத்த தலைவர்களையும் சந்திக்கிறாரா? -
டாஸ்மாக் கடையை மூட மறுக்கும் விஜய் அரசு.. களத்தில் குதித்த தூத்துக்குடி மக்கள்! ரொம்ப தப்புங்க! -
வந்தே மாதரம் பாடல் விவகாரம்.. மத்திய அரசின் உத்தரவுக்கு எதிராக வழக்கு தொடர ஐகோர்ட் அனுமதி! -
நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த விஷக்காளான் நீங்க! விஜய் குறித்து திமுக ஐடி விங்க் விமர்சனம்












Click it and Unblock the Notifications