விக்ரம் படத்தில் "அந்த வரிகள் எங்கே போச்சு".. பாதியில் கட்டான பாட்டு.. பத்தல பத்தலனு கத்திய ரசிகர்கள்
சென்னை: விக்ரம் படத்தில் பத்தல பத்தல பாடலில் "அந்த வரிகள்" ஏன் இடம்பெறவில்லை என்ற கேள்வி எழுந்துள்ளது.
விக்ரம் படத்தில் நடிகர் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பஹத் பாசில், சூர்யா உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இந்த படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கியிருந்தார்.
5 மொழிகளில் பிரம்மாண்டமாக வெளியான இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார். இந்த படம் வெளியாவதற்கு முன்பே பத்தல பத்தல எனும் பாடல் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது.

60 வயது
60 வயதிலும் கமல் அப்போ இருந்த மாதிரியே நடனம் ஆடுகிறார், குரலும் அப்படியே இருக்கிறது என ரசிகர்கள் பாராட்டி வந்தனர். இந்த பாடலை கமல் எழுதியிருந்தார். இவ்வாறு இந்த பாடல் டிரென்டாகி வரும் நிலையில் மறுபுறம் விமர்சனத்திற்குள்ளானது. இதில் கமல்ஹாசன் மறைமுகமாக அரசியல் பேசியதாக விவாதங்கள் எழுந்தன.

கஜானாலே காசில்லே
இந்த பாடலில் கஜானாலே காசில்லே, கல்லாலையும் காசில்லே, காய்ச்சல் ஜூரம் நிறைய வருது தில்லாங்கடி தில்லாலே என அரசின் நிதி பற்றாக்குறை குறித்தும், கொரோனா, டெங்கு குறித்தும் மறைமுகமாக கமல் குறிப்பிட்டிருந்தார். மேலும் ஒன்றியத்தின் தப்பாலே, ஒன்னியும் இல்ல இப்பாலே, சாவி இப்போ திருடன் கையிலே என அரசியலை மறைமுகமாக சுட்டி காட்டியிருந்தார்.

பாஜக
இந்த வரிகள் தொடர்பாக பாஜகவினர் சிலர் கண்டனங்களை எழுப்பியிருந்தனர். ஒன்றியம் என்ற சொல்லுக்கு நிறைய அர்த்தங்கள் இருப்பதாகவும் இது படம் பார்த்தால் புரியும் என்றும் கமல்ஹாசன் ஒரு பிரஸ் மீட்டில் விளக்கமளித்திருந்தார். இந்த நிலையில் இந்த பாடலை திரையில் பார்ப்பதற்காகவே ரசிகர்கள் ஆவலுடன் காட்டியிருந்தனர்.
Recommended Video

பாடல் வெளியீடு
கடந்த 3ஆம் தேதி விக்ரம் படம் வெளியான நிலையில் காலை முதல் ஷோவில் அந்த பாடல் வெளியானது. அதன் பின்னர் அந்த பாடலில் அந்த வரிகள் நீக்கப்பட்டது. பாடலும் பாதியிலேயே முடிந்துவிட்டது. அந்த வரிகள் இடம் பெற்ற பாடல் மீண்டும் படத்தின் நடுவே வருமோ என ரசிகர்கள் காத்திருந்து வராததால் ஏமாற்றமடைந்தனர்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications