விக்ரமுக்கு மட்டும் ஏன் இப்படி? விடிஞ்சா ரிலீஸ்.. வீர தீர சூரன்-2 படத்துக்கு தடை விதித்த நீதிமன்றம்!
சென்னை: எஸ்யூ அருண்குமார் இயக்கத்தில் நடிகர் விக்ரம் நடிக்கும் 62 வது படமான வீர தீர சூரன்- 2 படம் நாளை வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் திடீரென அந்த படத்திற்கு டெல்லி உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளதால் விக்ரம் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
தமிழ் திரையுலகில் முன்னணி நாயகர்களில் ஒருவர் விக்ரம். நீண்ட நாட்களாக தமிழ் சினிமாவில் நாயகனாகவும் டப்பிங் ஆர்டிஸ்ட் ஆகவும் பயணித்தாலும் ,தனக்கென தனி ஒரு இடத்தை பெற போராடியவர்.

தொடர்ந்து இயக்குனர் பாலா இயக்கத்தில் சேது படத்தின் மூலம் பட்டி தொட்டி எங்கும் பிரபலமானார். அதற்குப் பிறகு தில், தூள், சாமி என அதிரடியான மெகா ஹிட் படங்களை கொடுத்து முன்னணி நாயகனாக உயர்ந்தார்.
அந்நியன், ஐ உள்ளிட்ட பல படங்கள் அவரை இந்தியா முழுவதும் கொண்டு சேர்த்தது. அதற்குப் பிறகு அவர் நடித்த சில படங்கள் சரியாக போகாத நிலையில் வெற்றிக்காக போராடினார். கடைசியில் பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்து வெளியான தங்கலான் படமும் சொதப்பியது. இந்த நிலையில் சித்தா பட இயக்குனர் அருண்குமார் இயக்கத்தில் தனது 62 ஆவது படமான வீர தீர சூரன் 2 படத்தில் விக்ரம் நடித்திருக்கிறார்.
ரியா சுப்புவின் ஹச்ஆர் பிக்சர்ஸ் தயாரித்து உள்ள இந்த படத்தில் எஸ்ஜே சூர்யா, துஷாரா விஜயன், சித்திக், சுராஜ் வெஞ்சரமுடு ஆகிய பல நடித்துள்ளனர், ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ள இந்த படம் இரண்டாவது பாகமாகும். பொதுவாக தமிழ் சினிமாவில் முதல் பாகம் வெளி வந்த பின்னர் தான் இரண்டாம் பாகம் வெளியாகும். ஆனால் இந்த படத்தின் இயக்குனர் அருண்குமார் முதலில் இரண்டாம் பாகத்தை வெளியிட்டு விட்டு அதற்குப் பிறகு முதல் பாகத்தை வெளியிட இருக்கிறார்.
இதனால் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டு இருக்கிறது. இந்த நிலையில் வீர தீர சூரன் 2 திரைப்படம் நாளை வெளியாக இருக்கிறது. படத்தின் பிரீமியர் ஷோவையும் சிலர் பார்த்திருப்பதாக கூறப்படுகிறது. தற்போது படத்துக்கு சமூக வலைதளங்களிலும் எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது. இந்த நிலையில் வீர தீர சூரன் 2 படம் வெளியாவதில் பிரச்சனை ஏற்பட்டிருக்கிறது. பிரபல தயாரிப்பு நிறுவனம் ஒன்று தொடங்கிய வழக்கில் அதன் வெளியீட்டுக்கு டெல்லி உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்து இருக்கிறது.
பி4யூ என்ற தயாரிப்பு நிறுவனம் 2 படத்தில் முதலீடு செய்திருப்பதாக கூறப்படுகிறது. அதனால் அந்த நிறுவனத்திற்கு டிஜிட்டல் உரிமையை தயாரிப்பாளர் பதிவு செய்து கொடுத்ததாக கூறப்படுகிறது. ஆனால் ஒப்பந்தத்தில் இருப்பது படி ஓடிடி உரிமைத்த விற்கவில்லை என்றும், அதற்குள் படம் வெளியாக தயாராகி விட்டதால் படத்தை ஓடிடிட்டியில் விற்க முடியவில்லை. இதனால் தங்களுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது எனவும், உதவி செய்த பணத்தில் 50 சதவீதத்தை நஷ்ட ஈடாக தர வேண்டும் என பி4யூ நிறுவனம் டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
வழக்கை விசாரித்த நீதிமன்றம் படத்தை வெளியிட இடைக்கால தடை விதித்துள்ளது. இதனால் படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே தயாரிப்பு நிறுவனத்துடன் சமாதானம் பேசி படத்தை வெளியிட முயற்சிகள் நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது. அதே நேரத்தில் விடிந்தால் படம் ரிலிஸ் என்ற நிலையில், திட்டமிட்டபடி வெளியாகுமா என்பது கேள்விக்குறியாக இருக்கிறது.












Click it and Unblock the Notifications