முதலீடுன்னா சென்னை மட்டுமல்ல! நெல்லையிலும் குவியும் முதலீடுகள்! மக்களுக்கு குட் நியூஸ்! இதுதான் மாஸ்
சென்னை: விக்ரம் சோலார் லிமிடெட், திருநெல்வேலியில் கங்கைகொண்டானில் உள்ள அதன் 3 GW செல் மற்றும் தொகுதி உற்பத்தி ஆலைக்கு $200 மில்லியன் நிதியுதவிக்காக US International Development Finance Corporation (DFC) உடன் ஒப்பந்தம் செய்துள்ளது.
மாற்று மின்சார உற்பத்தி முறைகளில் இந்தியாவிற்கே தமிழ்நாடு தற்போது மிகப்பெரிய முன்னோடியாக திகழ்ந்து வருகிறது. அந்த வகையில் சமீபத்தில் கூட தமிழ்நாடு அரசு சூரிய ஒளி மின்சாரத்தில் புதிய ரெக்கார்ட் ஒன்றை படைத்து உள்ளது.

இந்தியாவிலேயே முதல்முறையாக மிதக்கும் சூரிய ஒளி மின் நிலையத்தை முதல்வர் ஸ்டாலின் சமீபத்தில் திறந்து வைத்தார். தூத்துக்குடியில் உள்ள ஸ்பிக் தொழிற்சாலை வளாகத்தில் இந்த மின் நிலையத்தை தொடங்கி வைத்தார்.
மின் நிலையம்: அணு மின் நிலையம், அனல் மின்நிலையம் மட்டும் இன்றி புகையை வெளியேற்றாத, இயற்கைக்கு பாதிப்பு ஏற்படுத்தாத மின்சாரத்தை உருவாக்குவதற்கான முயற்சிகளில் தமிழ்நாடு தீவிரம் காட்டி வருகிறது. இதை மனதில் வைத்தே தூத்துக்குடியில் உள்ள ஸ்பிக் தொழிற்சாலை வளாகத்தில் மிதக்கும் சூரிய ஒளி மின் நிலையத்தை முதல்வர் தொடங்கி வைத்தார்.
150 கோடி ரூபாயில் இந்த மின் நிலையம் அமைக்கப்பட்டு உள்ளது. 75 ஏக்கர் பரப்பளவு குளத்தில் இந்த சூரிய ஒளி மின் நிலையம் அமைக்கப்பட்டு உள்ளது. அந்த அளவிற்கு சூரிய ஒளி மின்சாரத்திலும் தமிழ்நாடு கவனம் செலுத்தி வருகிறது. அந்த வகையில் சமீபத்தில் தமிழ்நாடு அரசு சூரிய ஒளி மின்சாரத்தில் புதிய ரெக்கார்ட் ஒன்றை படைத்து உள்ளது. இதுவரை இல்லாத அளவில், சூரிய ஒளி மின் உற்பத்தி 4141 MW அளவில் உச்சம் தொட்டு இருக்கிறது. இன்னொரு பக்கம் காற்றாலை மின்சாரத்திலும் டென்மார்க்கிற்கு இணையாக தமிழ்நாடு கவனம் செலுத்தி வருகிறது.
தூத்துக்குடியில் உற்பத்தி: இந்த நிலையில்தான் தூத்துக்குடியில் உள்ள விஓசி துறைமுகம் அருகே 500 மெகாவாட் திறன் கொண்ட கடலோர காற்றாலைகள் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இதற்கான டெண்டர் விடப்பட்டு உள்ளது.
சமீபத்தில் கூட இந்தியாவிற்கான டென்மார்க் தூதுவர் ஃபெரிடி ஸ்வான் உடன் தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் சந்திப்பு நடத்தினார். அமைச்சர்கள் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், தங்கம் தென்னரசு ஆகியோர் இந்த சந்திப்பில் உடன் இருந்தனர். தமிழ்நாட்டை ஒட்டி இருக்கும் வங்கக்கடல் பகுதியில் மிகப்பெரிய காற்றாலை மின்சார திட்டத்தை கொண்டு வரும் வகையில் இந்த சந்திப்பு நடந்தது.
திருநெல்வேலி மின்சாரம்; இந்த நிலையில்தான் விக்ரம் சோலார் லிமிடெட், தமிழ்நாட்டின் திருநெல்வேலி கங்கைகொண்டானில் உள்ள அதன் 3 GW செல் மற்றும் தொகுதி உற்பத்தி ஆலைக்கு $200 மில்லியன் நிதியுதவிக்காக US International Development Finance Corporation (DFC) உடன் ஒப்பந்தம் செய்துள்ளது.
சமீபத்தில் துபாயில் நடந்து முடிந்த காலநிலை மாநாட்டில் இந்த கடிதம் கையெழுத்தானது என்று விக்ரம் சோலார் நிறுவனம் அறிக்கையில் தெரிவித்துள்ளது. விக்ரம் சோலார் நிறுவனத்துடன் கூட்டுசேர்வது, தூய்மையான எரிசக்தி மற்றும் நிலையான மின்சாரத்தை நிறைவேற்றுவதற்கான ஒரு முக்கியமான படியாகும் என்று விக்ரம் சோலார் நிறுவனத்தின் தலைவரும் நிர்வாக இயக்குநருமான கணேஷ் சவுத்ரி அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
விக்ரம் சோலார் 32 நாடுகளில் உள்ளது. மேலும் 1.50 GW க்கும் அதிகமான பொறியியல், கொள்முதல் மற்றும் கட்டுமானத் திட்டங்களை மேற்கொண்டு வருகிறது. இந்தியாவில், 3.5 ஜிகாவாட் மொத்த உற்பத்தி திறன் கொண்ட சோலார் ஃபோட்டோவோல்டாயிக் (பிவி) தொகுதி உற்பத்தி வசதி உள்ளது.
இந்த நிலையில்தான் தமிழ்நாட்டில் முதலீட்டை அதிகரிக்கும் விதமாக விக்ரம் சோலார் லிமிடெட், நெல்லையில் உள்ள கங்கைகொண்டானில் அதன் 3 GW செல் மற்றும் தொகுதி உற்பத்தி ஆலைக்கு $200 மில்லியன் நிதியுதவிக்காக US International Development Finance Corporation (DFC) உடன் ஒப்பந்தம் செய்துள்ளது.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது












Click it and Unblock the Notifications