நிர்மலா சீதாராமனுக்கு விரைவில் தமிழ்நாட்டில் பாராட்டு விழா.. விக்கிரமராஜா வைத்த கோரிக்கை
சென்னை: பெட்ரோல், டீசலை ஜி.எஸ்.டி. வரம்புக்குள் கொண்டுவர வேண்டும். டீக்கடைகள், உணவகங்களுக்கு வினியோகிக்கப்படும் வர்த்தக பயன்பாட்டுக்கான கியாஸ் சிலிண்டர்களுக்கு ஜி.எஸ்.டி. வரிவிலக்கு அல்லது மானியம் வழங்க வேண்டும் என்று மத்திய அரசு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு கோரிக்கை வைத்துள்ளது. டெல்லியில் நிர்மலா சீதாராமனை நேரில் சந்தித்து தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநில தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா இந்த கோரிக்கையை வைத்துள்ளார்.
ஜிஎஸ்டி அமைப்பு நான்கு முக்கிய வரி அடுக்குகளைக் கொண்டுள்ளது: 5%, 12%, 18% மற்றும் 28%. சில பொருட்கள் பூஜ்ஜிய வரி விகிதத்திலும் இருந்தன. சில பொருட்கள் சிறப்பு விகிதத்திலும் இருந்தன. ஆனால் மத்திய அரசு ஜிஎஸ்டி விகிதங்களை குறைக்க முடிவு செய்து அறிவிப்பு வெளியிட்டது. இந்த புதிய ஜிஎஸ்டியின்படி சுமார் 500 பொருட்களின் விலை குறைந்துள்ளது. வீடுகளில் அன்றாடம் உபயோகிக்கப்படும் பல பொருட்களின் விலை குறைந்துள்ளது. ஹேர் ஆயில், ஷாம்பு, பற்பசை, டாய்லெட் சோப் பார், டூத் பிரஷ், ஷேவிங் கிரீம், வெண்ணெய், நெய், பாலாடைக்கட்டி, டெய்ரி ஸ்ப்ரெட், பேக்கேஜ் செய்யப்பட்ட தின்பண்டங்கள், புஜியா கலவை, பாத்திரங்கள், குழந்தைகளுக்கான பாலூட்டும் பாட்டில்கள், நாப்கின்கள் மற்றும் டயப்பர்கள் போன்றவை குறைந்துள்ளன. அதேபோல் கார், பைக் உள்பட வாகனங்களின் விலையும் அதிரடியாக குறைந்துள்ளது.

இந்நிலையில் ஜி.எஸ்.டி. வரி விகிதம் 2 அடுக்காக மாற்றியமைக்கப்பட்டதற்காக மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமனுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் கோவையில் அடுத்த மாதம் (நவம்பர்) 11-ந் தேதி தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் பாராட்டு விழா நடத்தப்பட இருக்கிறது. இந்த விழாவுக்கான அழைப்பிதழை டெல்லியில் நிர்மலா சீதாராமனை நேரில் சந்தித்து தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநில தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா வழங்கினார்.
அப்போது வணிகர்களின் 20 அம்ச கோரிக்கைகள் அடங்கிய மனு ஒன்றையும் நிர்மலா சீதாராமனிடம், ஏ.எம்.விக்கிரமராஜா கொடுத்தார். அப்போது, மாநில பொதுச்செயலாளர் கோவிந்தராஜூலு, மாநில தலைமைச்செயலாளர் பேராசிரியர் ஆர்.ராஜ்குமார், மாநில கூடுதல் செயலாளர் எஸ்.ராஜசேகரன் ஆகியோர் உடன் இருந்தனர். தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு வழங்கிய மனுவில் உள்ள முக்கிய கோரிக்கைகள் விவரம் வருமாறு:
* வணிகர்கள் எதிர்கொள்ளும் பல்வேறு ஜி.எஸ்.டி. தொடர்பான பிரச்சினைகளை முடிவுக்கு கொண்டுவர, வணிக பிரதிநிதிகளை கொண்ட குழு ஒன்று அமைத்து, கலந்தாலோசித்த பிறகே உரிய முடிவுகளை மேற்கொள்ள வேண்டும்.
* ஒரே நாடு ஒரே வரி என்ற கோரிக்கைக்கு மாற்றாக தற்போது அரசு அறிவித்திருக்கின்ற ஈரடுக்கு ஜி.எஸ்.டி.யை வணிகர்கள் வரவேற்றாலும், ஓரடுக்கு ஜி.எஸ்.டி.யே அரசின் வருவாய்க்கும், வணிகர்களின் எளிமையான வரித்தாக்கலுக்கும் பயனுடையதாக இருக்கும்.
* பெட்ரோல், டீசலை ஜி.எஸ்.டி. வரம்புக்குள் கொண்டுவர வேண்டும். டீக்கடைகள், உணவகங்களுக்கு வினியோகிக்கப்படும் வர்த்தக பயன்பாட்டுக்கான கியாஸ் சிலிண்டர்களுக்கு ஜி.எஸ்.டி. வரிவிலக்கு அல்லது மானியம் வழங்க வேண்டும் போன்ற பல்வேறு கோரிக்கைகள் இடம்பெற்றுள்ளன.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications