வில்லங்க சான்றிதழ்.. பத்திரப்பதிவில் வந்தது மாற்றம்.. இனி தப்பமுடியாது.. சாட்டையை சுழட்டிய தமிழக அரசு
சென்னை: பத்திரப்பதிவு துறையில் தமிழக அரசு பல்வேறு அதிரடிகளை செய்துவரும் நிலையில், தவறுகள் செய்வோர் மீதும் துறைரீதியான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதனால் பொதுமக்களின் நன்மதிப்பை பத்திரப்பதிவு துறை தொடர்ந்து பெற்று வருகிறது.
பொதுவாக நிலம், வீட்டு மனை, வீடு போன்ற சொத்துகளை வாங்க விரும்புவர்கள் அந்த சொத்தின் முந்தைய ஓனர்கள் குறித்தும், அதில் வில்லங்கம் ஏதேனும் உள்ளதா என்பதை அறிந்து கொள்ளவும், வில்லங்க சான்றினை பெறுவார்கள்.
குறிப்பிட்ட அந்த சொத்தின் உரிமையாளர் யார் என்பதை உறுதிப்படுத்தும் சான்று இது.. இதில் அந்த குறிப்பிட்டு சொத்து யார் வசம் இருந்து கைமாறி வந்தது என்ற அனைத்து விவரங்களும் இடம்பெற்றிருக்கும்.

பதிவுத்துறை: அந்த சொத்து பதிவுத்துறையில் பத்திரப்பதிவு செய்யப்பட்ட தேதி, பத்திரத்தின் ஆவண எண், உரிமையாளர் பெயர், சொத்தின் வகைப்பாடு, சொத்தின் விஸ்தீர்ணம் (அளவு), சர்வே விவரம் என சகல விவரங்களும் இதில் உள்ளடங்கி இருக்கும். இதன் மூலம் ஒரு சொத்து தொடர்பான வில்லங்கத்தை முழுமையாக தெரிந்து கொள்ள முடியும்.
இன்றைய தினம், அசையா சொத்தின் மீது வங்கி மற்றும் நிதி சேவை நிறுவனங்களில் கடன் பெறவும் வில்லங்க சான்று தேவையாக இருக்கிறது.. முன்பெல்லாம் இந்த வில்லங்க சான்றினை பெறுவதற்காக, பத்திரப்பதிவுத்துறை அலுவலகத்திற்கு நேரில் செல்ல வேண்டி இருந்தது. ஆனால், இப்போது, ஆன்லைன் மூலமாகவே, வில்லங்க சான்றினை பொதுமக்கள் பெற முடியும்.. தமிழ்நாடு பதிவுத்துறை சார்பில் வழங்கப்படும் இந்த சான்றினை, இணைய வழியில் எளிய முறையில் விண்ணப்பித்து, பெற்றுக்கொள்ளலாம்..
வில்லங்க சான்றிதழ்: இதற்காக எந்தவித லஞ்சமும் புரோக்கர்கள் உட்பட யாருக்குமே தர வேண்டிய அவசியமில்லை. இப்படி விண்ணப்பிக்கும்போது, இரண்டு அல்லது மூன்று நாட்களில், வில்லங்க சான்றிதழ் வழங்க வேண்டும்.. ஆனால், பெரும்பாலான அலுவலகங்களில், இதுபோன்று ஆன்லைன் முறையில் பதிவாகும் விண்ணப்பங்களுக்கு, உரிய காலத்தில் வில்லங்க சான்றிதழ்கள் கிடைப்பதில்லை என்று புகார்கள் எழுகின்றன..
அதாவது, ஆன்லைனில் 24 மணி நேரமும் பொதுமக்கள் விண்ணப்பிக்கலாம் என்றாலும், சார் பதிவாளர் அலுவலகங்கள், காலை முதல் மாலை வரையே செயல்படுகின்றன.
விண்ணப்பங்கள்: அதிலும், மாலை 4 மணி வரை பதிவாகும் விண்ணப்பங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறது.. அதற்கு பிறகு, அலுவலக நேரம் முடிந்து விடுவதால், 4 மணிக்கு மேல் பதிவாகும் விண்ணப்பங்கள் மீது மறுநாள் காலை தான் நடவடிக்கை எடுக்க முடிகிறது.. இந்த விஷயத்தைதான், பதிவுத் துறை கையில் எடுத்துள்ளது.. பொதுமக்கள் விண்ணப்பிக்கும்போது, அதன்பேரில் உடனுக்குடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சார் பதிவாளர்களுக்கு முக்கிய உத்தரவையும் பிறப்பித்துள்ளது.
அதாவது, ஆன்லைனில் வில்லங்க சான்று விண்ணப்ப பதிவில், மாலை, 4 மணிக்கு மேல் பதிவாகும் விண்ணப்பங்களை, அடுத்த நாள் கணக்கில் சேர்க்க வேண்டும் என்று விரைவில் உத்தரவிடப்போவதாக தெரிகிறது.. இது பொதுமக்களுக்கு மிகுந்த தெம்பை தந்து வருகிறது.
ஸ்பெஷல் கவனிப்பு: எனினும் சில இடங்களில் கட்டணம் செலுத்தி விண்ணப்பித்தாலும், இரண்டு நாட்களில் வில்லங்க சான்றிதழ் கிடைப்பதில்லை என்கிறார்கள்.. ஆவண எழுத்தர்கள் வாயிலாக விண்ணப்பித்தால், சார் - பதிவாளர் அலுவலக எழுத்தர்களை, ஸ்பெஷலாக "கவனித்தால்" மட்டுமே, வில்லங்க சான்றிதழ் கிடைப்பதாகவும், ஒரு வில்லங்க சான்றிதழுக்கு, 1,000 ரூபாயை எழுத்தர்கள் லஞ்சம் வாங்குவதாகவும் கூறப்பட்டது.
இப்படிப்பட்ட சூழலில்தான், கோவை மாவட்டம், அவிநாசி சார் - பதிவாளர் அலுவலக எழுத்தர், 10,000 ரூபாய் லஞ்சம் கேட்டிருக்கிறார்.. இது தொடர்பாக வீடியோ ஆதாரமும் சோஷியல் மீடியாவில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்திவிட்டது.. இதையடுத்து, தலைமை எழுத்தர் தனபாலன் உடனடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்..
அதிரடி உத்தரவு: இதுகுறித்து, பதிவுத்துறை உயரதிகாரி ஒருவர் சொல்லும்போது, ஆன்லைன் முறையில் விண்ணப்பிப்போருக்கு, உடனுக்குடன் வில்லங்க சான்றிதழ் வழங்க வேண்டும்... ஒருவேளை தாமதமானதால், ஐஜி அலுவலக கட்டுப்பாட்டு அறையில், மக்கள் உடனே இது தொடர்பாக செய்யலாம். நிலுவை விண்ணப்பங்கள் குறித்து, மாவட்ட பதிவாளர்கள் மற்றும் டிஐஜிக்கள், அவ்வப்போது ஆய்வு செய்ய அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்" என்றார்.












Click it and Unblock the Notifications