பாடி மேம்பாலத்தில் மாஞ்சா நூல் அறுத்து காவலர் காயம்.. வில்லிவாக்கம் இன்ஸ்பெக்டர் இடமாற்றம்
சென்னை: சென்னை பாடி மேம்பாலத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு இருசக்கர வாகனத்தில் சென்ற போக்குவரத்து காவலரின் கழுத்தை மாஞ்சா நூல் அறுத்ததில், காயமடைந்தார். இந்தச் சம்பவத்தைடுத்து வில்லிவாக்கம் இன்ஸ்பெக்டர் ரஜீஸ்பாபு, இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
மாஞ்சா நூல் மூலம் காற்றாடிகளை பறக்க விட சென்னையில் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் தற்போது கொரோனாவால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் தடையை மீறி பலர் மாஞ்சா நூல் மூலம் காற்றாடிகளை பறக்க விடுகிறார்கள்.. சென்னை போலீஸார் கண்டுக்கொள்ளாமல் இருப்பதாக குற்றச்சாட்டு உள்ளது.

சென்னை வேப்பேரி காவல் நிலையத்தில் போக்குவரத்து பிரிவில் காவலராக பணியாற்றுபவர் ஜெயகுமார் (42), இவருடைய மனைவி மகேஷ்வரி (38). இவர் சென்னை மத்திய குற்றப்பிரிவில் காவலராகப் பணிபுரிந்து வருகிறார். இருவரும் உறவினர் வீட்டுக்கு சென்றுவிட்டு கொரட்டூரில் இருந்து வீடு திரும்பி கொண்டிருந்தனர். சென்னை பாடி மேம்பாலத்தில் பைக்கில் வந்த போது ஜெயகுமார், கழுத்தில் மாஞ்சா நூல் சிக்கி அறுத்தது.
இதனால் கணவன், மனைவி இருவரும்விபத்தில் சிக்கினார்கள். அவர்கள் இருவரும் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். தற்போது இருவரும் நலமாக உள்ளனர். மருத்துவமனையிலிருந்து இது தொடர்பாக தகவல் அறிந்து மாஞ்சா நூல் மூலம் காற்றாடிகளை பறக்க விட்டது, தொடர்பாக போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்தச் சூழலில் வில்லிவாக்கம் சட்டம் ஒழுங்கு இன்ஸ்பெக்டர் ரஜீஸ்பாபுவை இடமாற்றம் செய்து கூடுதல் கமிஷனர் அருண் உத்தரவிட்டுள்ளார்.
சென்னை வில்லிவாக்கம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் மாஞ்சா நூலைப் பயன்படுத்தி காற்றாடிகள் அதிக அளவில் பறக்க விடுவதாகப் புகார்கள் எழுந்ததால் இன்ஸ்பெக்டர் ரஜீஸ்பாபு காவல் கட்டுபாட்டு அறைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications