விழுப்புரம் மாவட்டத்தில் இன்றும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை! மழை பாதிப்பிலிருந்து இன்னும் மீளல!

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஃபெஞ்சல் புயல் ஏற்படுத்திய பாதிப்பில் இருந்து விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்கள் இன்னும் மீளவில்லை. இந்நிலையில், விழுப்புரம் மாவட்டத்தில் இன்றும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்துள்ளார் அம்மாவட்ட ஆட்சியர். விழுப்புரம் மாவட்டத்தில் 5வது நாளாக இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

வங்கக் கடலில் ஃபெஞ்சல் புயல் உருவானது முதலே, மாறி மாறி போக்கு காட்டி வந்தது. தமிழக கடலோரப் பகுதிகளை நெருங்கி வரும் வரை எந்த பகுதியில் கரையைக் கடக்கும், எந்த பகுதியில் பாதிப்பு ஏற்படும் என்பது குறித்து சரியாகக் கணிக்க முடியாமல் இருந்தது. சென்னை உள்ளிட்ட பகுதிகள் பாதிப்புக்கு உள்ளாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்டங்கள் அதிக பாதிப்புக்கு உள்ளாகியுள்ளன.

schools cyclone fengal rain

ஃபெஞ்சல் புயல் காரணமாக பெய்த கனமழையால் விழுப்புரம், திருவண்ணாமலை உள்ளிட்ட புயல் பாதிப்பு ஏற்பட்ட மாவட்டங்களில் மக்களின் இயல்பு வாழ்க்கை மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. சாலைகள், பாலங்கள் கடும் சேதமடைந்துள்ளன. பல கிராமங்களின் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசு மீட்பு பணிகளையும், நிவாரணப் பணிகளையும் வேகப்படுத்தி வருகிறது. பாதிக்கப்பட்ட அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் 2000 ரூபாய், உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு இழப்பீட்டுத் தொகையாக ரூபாய் 5 லட்சம் ரூபாய், சேதமடைந்த குடிசைகளுக்கு இழப்பீட்டுத் தொகையாக ரூபாய 10 ஆயிரம் என பல்வேறு நிவாரண உதவிகள் தமிழக அரசால் அறிவிக்கப்பட்டு உள்ளன.

ஃபெஞ்சல் புயல் வலுவிழ்ந்து தமிழ்நாட்டை விட்டு சென்று இரண்டு நாட்கள் ஆன நிலையிலும் பாதிக்கப்பட்ட மாவட்டங்கள் இயல்பு நிலைக்கு திரும்ப முடியாமல் தவிக்கின்றன பல இடங்களில் வெள்ள நீர் வடியாமல் தேங்கியுள்ளது. தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் தங்கள் வீடுகளிலிருந்து வெளியேறி முகாம்களில் தங்கி உள்ளனர்.

இந்நிலையில் இன்றும் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் பழனி உத்தரவிட்டுள்ளார். கனமழை பாதிப்புகளை சரி செய்ய இருப்பதால் இன்றும் பள்ளிகள், கல்லூரிகள் உள்ளிட்ட அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் விடுமுறை அறிவித்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.

விழுப்புரம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இன்னும் வெள்ளம் வடியாததாலும், பள்ளிகள் நிவாரண முகாம்களாக செயல்படுவதாலும், விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி கல்லூரிகளுக்கும் இன்றும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் 5வது நாளாக இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

அதேசமயம் வெள்ள பாதிப்புகள் சீரானதால் கடலூர் மாவட்டத்தில் இன்று பள்ளி கல்லூரிகள் வழக்கம் போல இயங்கும் என கடலூர் மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் கூறியுள்ளார்.

புதுச்சேரியில் மழை வெள்ள நிவாரண முகாம்களாக செயல்படும் 17 பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பிற பள்ளிகள் அனைத்தும் இன்று வழக்கம்போல இயங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+