விழுப்புரத்தில் விழுந்த "அடி".. குமட்டுது ஆபாசம்.. ஆபீசர் செய்ற வேலையா இது? கதிகலங்க வைத்த சங்கீதா
சென்னை: விழுப்புரம் சங்கீதா தந்த புகார், பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வரும்நிலையில், இதுகுறித்த விசாரணையை போலீசார் தீவிரப்படுத்தி வருகிறது. அத்துடன், சம்பந்தப்பட்ட ஆபீசர் மீது துறைரீதியான நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது.
விக்கிரவாண்டி தாலுகாவுக்கு உட்பட்ட நல்லாபாளையம் என்ற பகுதியில் வசித்து வருகிறார் சங்கீதா என்ற இளம் பெண்.. இவர் இருளர் சமூகத்தை சேர்ந்தவர்... இவரது கணவர் ஐய்யனார், கடந்த 2014ம் ஆண்டு உடம்பு சரியில்லாமல் நலக்குறைவால் இறந்துவிட்டார். இவர்களுக்கு 11 வயதில் கமலேஷ் என்ற மகன் உள்ளான்.
இறப்பு சான்றிதழ்: இந்நிலையில், சங்கீதா தன்னுடைய கணவரின் இறப்பு சான்றிதழ் பெறுவதற்காக, விஏஓ ஆபீசுக்குள் சென்றிருக்கிறார்.. அங்கே கிராம நிர்வாக அலுவலர், ஆரோக்கியதாஸ் என்பவரிடம் மனு தந்தபோது, இறப்பு சான்றுக்கு 5,000 ரூபாய் வேண்டும் என்று ஆரோக்கியதாஸ் கேட்டிருக்கிறார். இதைக்கேட்டு அதிர்ந்த சங்கீதா, தன்னிடம் அவ்வளவு பணம் இல்லை, 1000 ரூபாய் மட்டும் வைத்திருக்கிறேன் என்று சொல்லி, அந்த பணத்தை தந்திருக்கிறார்.

அதை வாங்கி கொண்ட ஆரோக்கியதாஸ், சங்கீதாவுக்கு தினமும் இரவுநேரத்தில் போனை போட்டு, ஆபாசமாக பேசியிருக்கிறார்.. லஞ்ச பணம் தராததால்தான், இப்படியெல்லாம் டார்ச்சர் செய்கிறார் என்று நினைத்து, மேலும் 3,000 ரூபாயை தந்துள்ளார் சங்கீதா.. அதற்கு பிறகுதான், சங்கீதாவிற்கு இறப்பு சான்றிதழ் தந்தார் ஆரோக்கியதாஸ்.
லஞ்சம் கேட்ட ஆபீசர்: இந்த சான்றிதழை பெற்ற பிறகு, மகளிர் உதவித்தொகைக்காக, சங்கீதா விண்ணப்பித்திருக்கிறார்.. ஆனால், சங்கீதாவின் விண்ணப்பத்தை பார்த்ததுமே, விஏஓ ஆரோக்கியதாஸ், ரத்து செய்துவிட்டாராம்.
இதுகுறித்து சங்கீதா கேட்டதற்கு, தன்னுடைய பாலியல் இச்சைக்கு சம்மதிக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்தி உள்ளார். இதற்கு பிறகு சங்கீதா, தன்னுடைய உறவினர்கள் 50க்கும் மேற்பட்டோருடன், விழுப்புரம் மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில், புகார் தந்தார்.
ஆடியோ ஆபாசம்: அத்துடன், செல்போனில் ஆபாசமாக பேசி டார்ச்சர் செய்த, அந்த ஆடியோவும், ஆதாரமும் தரப்பட்டிருக்கிறது. இருளர் பெண்ணுக்கு பாலியல் தொல்லை தந்த அதிகாரியால், விழுப்புரமே அதிர்ந்து போனது..
இதையடுத்து, சங்கீதா தந்த புகாரின்பேரில், கண்டாச்சிபுரம் போலீசார் விசாரணையை கையில் எடுத்துள்ளனர்.. இந்நிலையில், ஆரோக்கியதாஸ் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கிராம நிர்வாக அலுவலர் ஆரோக்கியதாஸை சஸ்பெண்ட் செய்தும் கோட்டாட்சியர் காஜாசாகுல்அமீது அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.
-
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம் -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்? -
போடியில் ஓபிஎஸ்! ஆலங்குளத்தில் மனோஜ் பாண்டியன்! திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு -
164.. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.. திமுக பட்டியலில் கடைசி பெயராக வந்த முதல்வர் பெயர் -
சட்டமன்ற தேர்தலில் நடிகர் சுந்தர் சி போட்டி.. மதுரை மத்திய தொகுதியில் களம் இறங்குகிறார்.. ஏசி சண்முகம் அறிவிப்பு -
தமிழ் புத்தாண்டு பலன்: எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 3 ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க -
எழும்பூர் டூ பத்மநாபபுரம் வரை.. திமுகவில் சீட் மறுக்கப்பட்ட சிட்டிங் எம்எல்ஏக்கள்! முழு விவரம் -
அண்ணாமலையை தொட்ட விஜய்! கொங்குவில் ரகசிய வார் ரூம் டீல்? எடப்பாடி பழனிசாமிக்கு காத்திருக்கும் ஷாக் -
DMK: 3 அமைச்சர்களுக்கு சீட் இல்லை.. ஸ்டாலின் அறிவித்த திமுக வேட்பாளர் பட்டியலில் ஷாக்!












Click it and Unblock the Notifications