பருத்தி மூட்டை குடோனிலேயே இருக்கலாம்.. தாம்பரம் திருநெல்வேலி ரயிலா இப்படி .. மக்கள் கேள்வி
சென்னை: தாம்பரம் திருநெல்வேலி இடையே விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சிறப்பு ரயிலை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இந்த ரயில் செப்டம்பர் 3ம் தேதியான இன்று இரவு தாம்பரத்தில் இருந்து புறப்பட்டு புதன்கிழமை காலை திருநெல்வேலி சென்றடைகிறது. ஆனால் இந்த ரயிலில் போதிய டிக்கெட் முன்பதிவு ஆகவில்லை.. இந்த சிறப்பு ரயிலை செப்டம்பர் 6ம் தேதி அறிவித்தால் மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
விநாயகர் சதுர்த்தி பண்டிகை வரும் செப்டம்பர் 7ம் தேதி சனிக்கிழமை அன்று கொண்டாடப்படுகிறது. அதுமட்டுமின்றி முகூர்த்த தினங்களும் அடுத்தடுத்து வருகிறது.இதன் காரணமாக பலரும் சொந்த ஊர் செல்ல ஆயத்தமாகி வருகிறார்கள். இவர்களின் வசதிக்காக மக்கள் சென்று வரும் வகையில் சிறப்பு ரயில்களை இயக்க வேண்டும் என்ற கோரிக்கையை மக்கள் வைத்து வந்தனர். இந்நிலையில் தெற்கு ரயில்வே இன்றைக்கு தாம்பரத்தில் இருந்து திருநெல்வேலி செல்ல சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது.

இந்த சிறப்பு ரயில் இன்று இரவு 10.25க்கு புறப்பட்டு, செங்கல்பட்டு, மேல்மருத்துத்தூர், விழுப்புரம், பண்ருட்டி, கடலூர் துறைமுகம், சிதம்பரம், சீர்காழி, மயிலாடுதுறை, கும்பகோணம், தஞ்சாவூர், திருச்சி, திண்டுக்கல். மதுரை, விருதுநகர். சாத்தூர், கோவில்பட்டி, ஆகிய ரயில் நிலையங்களில் நின்று, நாளை காலை 11.30க்கு திருநெல்வேலி சென்றடைகிறது. இதேபோல் திருநெல்வேலியில் இருந்து நாளை இரவு 10.20க்கு தாம்பரம் சிறப்பு ரயில் புறப்பட்டு வெள்ளிக்கிழமை காலை 11.25க்கு தாம்பரம் வந்து சேரும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இந்த சிறப்பு ரயில் இன்றைக்கு அறிவிக்கப்பட்டதற்கு பதில், வியாழக்கிழமை கிளம்பி வெள்ளிக்கிழமை செல்லும் வகையிலோ அல்லது வெள்ளிக்கிழமை கிளம்பி சனிக்கிழமை காலையில் போய் இறங்கும் வகையிலோ இயக்கினால் பயனுள்ளதாக இருக்கும் என்கிறார்கள் பயணிகள். ஏனெனில் இன்றைக்கு அறிவிக்கப்பட்டுள்ள ரயிலில், ஸ்லீப்பர் கோச்சிலேயே 400க்கும் மேற்பட்ட காலியிடங்கள் இருப்பதாக கூறும் பயணிகள், இந்த ரயிலை வெள்ளிக்கிழமை அறிவித்தால் பயனுள்ளதாக இருக்கும் என்று தெரிவித்துள்ளனர்.
நாளை திருநெல்வேலியில் இருந்து புறப்பட்டு வெள்ளிக்கிழமை வரும் சிறப்பு ரயிலை, மீண்டும் அன்று இரவு சிறப்பு ரயிலை திருநெல்வேலிக்கு இயக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. அப்படி ரயிலை வெள்ளிக்கிழமை இரவு இயக்கினால், மறுபடியும் ஞாயிறு அன்று இரவு திருநெல்வேலியில் இருந்து புறப்பட்டு திங்கள் அன்று சென்னை வரும் வகையில் இயக்க வேண்டும் என்றும் மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
அதேபோல் வார இறுதியில் திருச்சி வரை இயக்கப்படும் முன்பதிவு இல்லாத சிறப்பு ரயிலை மதுரை வரை இயக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். அதே நேரம் தாம்பரம் திருநெல்வேலி இடையே இன்று அறிவித்துள்ள ரயிலால் மக்களுக்கு பெரிய நன்மை இல்லை என்றும் மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
-
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி அடுத்த குட் நியூஸ்? தமிழக அரசு அசத்திய ரூ.193 கோடி மகளிர் நிதி -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு












Click it and Unblock the Notifications