சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அதிமுக முதல்வர் வேட்பாளர் அறிமுக நிகழ்ச்சியில் கொரோனா விதிமுறை மீறல் - அரசு பதில் தர ஹைகோர்ட் ஆணை

விதிகளை பின்பற்றி, உதாரணமாக இருக்க வேண்டிய அமைச்சர்களும், எம்.எல்.ஏக்களும் சட்டத்தை மீறி செயல்பட்டுள்ளதால் அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த மனுவிற்கு பதில் அளிக்கும்

Google Oneindia Tamil News

சென்னை: ஆளுங்கட்சி முதல்வர் வேட்பாளர் அறிவிப்பு நிகழ்ச்சியில் கொரோனா தடுப்பு விதிகளை பின்பற்றாத அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரிய மனுவுக்கு பதிலளிக்கும்படி, தமிழக அரசுக்கும், சென்னை மாநகராட்சிக்கும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கொரோனா பரவலை தடுக்க அறிவிக்கப்பட்ட ஊரடங்கு தளர்த்தப்பட்ட போதும், முக கவசம் அணிய வேண்டும் எனவும், தனி மனித விலகலை பின்பற்ற வேண்டும் எனவும் அரசு அறிவித்துள்ளது.

Violation of corona rule in AIADMK chief ministerial candidates inaugural function - High Court order

ஆனால், கடந்த அக்டோபர் 7ஆம் தேதி அதிமுக முதல்வர் வேட்பாளராக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை அறிவித்த நிகழ்ச்சியிலும், அதன்பின் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் சமாதியில் மரியாதை செலுத்திய போதும், அதிமுகவினர், கொரோனா விதிகளை பின்பற்றவில்லை எனக் கூறி திருவொற்றியூரைச் சேர்ந்த வழக்கறிஞர் தொண்டன் சுப்பிரமணியன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

அந்த மனுவில், அரசை நடத்தும் அமைச்சர்களும், எம்.எல் ஏக்களும், கொரோனா விதிகளை காற்றில் பறக்கவிட்டு, கட்சியினரை ஒன்று கூட அனுமதித்ததாக குற்றம் சாட்டியுள்ளார்.

விதிகளை பின்பற்றி, உதாரணமாக இருக்க வேண்டிய அமைச்சர்களும், எம்.எல்.ஏ..க்களும் சட்டத்தை மீறி செயல்பட்டுள்ளதால் அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் எனவும் மனுவில் கேட்டுக் கொண்டுள்ளார்.

அவதூறு வழக்கு கலாசாரத்துக்கு முற்றுப்புள்ளி தேவை.. ஸ்டாலின் மீதான 4 வழக்குகளை ரத்து செய்த ஹைகோர்ட் அவதூறு வழக்கு கலாசாரத்துக்கு முற்றுப்புள்ளி தேவை.. ஸ்டாலின் மீதான 4 வழக்குகளை ரத்து செய்த ஹைகோர்ட்

இந்த மனு நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் ஹேமலதா அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, குறிப்பிட்ட நாளில் அனைத்து விதிகளும் பின்பற்றப்பட்டதாகவும், மனுவுக்கு பதிலளிக்க அவகாசம் வழங்க வேண்டும் எனவும் அரசுத்தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

மனுதாரர் தாக்கல் செய்த புகைப்படங்களில் இருந்து அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் முககவசம் அணிந்திருந்தாலும், தனி மனித விலகல் பின்பற்றப்படவில்லை எனச் சுட்டிக்காட்டிய நீதிபதிகள், மனுவுக்கு ஜனவரி 6ஆம் தேதிக்குள் பதிலளிக்கும்படி, தமிழக சுகாதார துறை செயலாளர், சென்னை மாநகராட்சி ஆணையர், மாநகராட்சி சுகாதார அதிகாரி மற்றும் பேரிடர் மேலாண்மை மைய தலைவருக்கு உத்தரவிட்டனர்.

English summary
The High Court has directed the Tamil Nadu government and the Chennai corporation to respond to a petition seeking action against ministers and MLAs who did not follow the corona prevention rules during the announcement of the ruling party's chief ministerial candidate.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X