‘வேட்டையன்’ சத்யதேவ்க்கு எதிராக உரிமை மீறல் தீர்மானம்? எம்.ஜி.ஆர் ஆட்சியில் நடந்தது என்ன?
சென்னை: ’வேட்டையன்’ படத்தில் இடம்பெற்றுள்ள உண்மையான நீதியரசர் சத்யதேவ் பற்றிய நினைவுகளை அவருடன் பழகிய முன்னாள் நீதிபதி சந்துரு பகிர்ந்துகொண்டுள்ளார்.
ரஜினியின் 'வேட்டையன்’ படத்தில் சத்யதேவ் கதாபாத்திரத்தில் அமிதாப்பச்சன் நடித்திருந்தார். எந்தக் குற்றத்திற்கும் என்கவுண்டர் என்பது தீர்வு கிடையாது என்பதே இந்தக் கதாபாத்திரம் சொல்லும் உண்மை. இந்த சத்யதேவ் யார்? இயக்குநர் த.செ.ஞானவேல் சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதியான சத்யதேவை மனதில் வைத்தே வடிவமைத்திருக்கிறார்.

படத்தில் ஒரு முக்கியமான பாத்திரம் கொடுக்கும் அளவுக்கு இந்த நீதிபதி என்ன செய்தார்? இப்படிப் பல கேள்விகள் முளைத்துள்ளன. இந்த நீதியரசர் சத்யதேவ் சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதியாக இருந்த காலத்தில் வழக்கறிஞராக இருந்தவர் முன்னாள் நீதிபதி சந்துரு. அவரின் நண்பரும் கூட. இவர் சத்யதேவ் பற்றிய நினைவுகளைப் பகிர்ந்து கொண்டுள்ளார்.
சந்துரு பேசுகையில், “ரஜினியின் வரும் அமிதாப்பச்சன் கேரக்டருக்கு சரியான ஒரு பெயரை வைக்கவேண்டும் என்று இயக்குநர் ஞானவேல் விரும்பினார். முன்னாள் நீதியரசர் சத்யதேவுக்கு அஞ்சலி செலுத்தும் நோக்கத்தில்தான் இந்தப் பெயரையே படத்தை வைத்தோம். இதற்கு முன்பு 'ஜெய்பீம்’ படத்தில் கோர்ட் சீன் ஒன்று இடம்பெற்றிருந்தது. நிஜமாக நீதிமன்றத்தில் இரண்டு ஆங்கிலேய நீதிபதிகள் படங்கள்தான் இருந்தன. நாங்கள் அதை மாற்றிவிட்டு மனித உரிமைக்காகப் போராடிய நீதியரசர் கிருஷ்ணய்யர் படத்தையும் நீதியரசர் சத்யதேவ் படத்தையும் தான் வைத்திருந்தோம்.
நிஜமாகவே சென்னை உயர்நீதி மன்றத்தில் சத்யதேவுக்கு ஒரு புகைப்படம் இருக்கிறது. ஆனால், அவரை நீதிமன்ற வளாகம் தாண்டி வெளியே பெரிய அளவில் தெரியாது. பாமர மக்களுக்கும் அவரது சாதனையைக் கொண்டு போய் சேர்க்க வேண்டும் என்பதற்காகவே ஞானவேல் அவர் படத்தை 'ஜெய்பீம்’ காட்சியில் இடம்பெற வைத்தார்.
சென்னை நீதிமன்றத்தில் எத்தனையோ நீதிபதிகள் இருந்துள்ளன. அதில் சத்யதேவ் வித்தியாசமானவர். அவர் 1976களுக்குப் பின்பு அரசு வழக்கறிஞராக நியமிக்கப்பட்டார். 78இல் இவர் நீதிபதியானார். 90இல் ஓய்வு பெற்றார். அவரது பதவிக் காலத்தில் அவர் வகித்த பதவி பெருமை பெற்றது. மிகக் கண்டிப்பானவர். நேர்மை தவறாதவர். நேரம் தவறாமைக்கு அவரே உதாரணம். அவர் காலத்தில் நீதிமன்றம் 10:45க்குதான் தொடங்கும். அவர் ஒரு நொடிகூட காலம் தாழ்த்தி வந்ததே இல்லை.
அவரது மகனுக்கு திருமணம் அன்று சத்யதேவ் நீதிமன்றத்திற்கு வரமாட்டார் என்று சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் பலரும் பேசினார்கள். ஆனால், அதற்கு மாறாக அவர் மகன் திருமணத்தைக் காலையில் முடித்துவிட்டு, மதியமே நீதிமன்றம் வந்தார். அதேபோல மகனின் கல்யாணத்தைத் தடபுடலாக நடத்தவில்லை. குறைந்தது 20 பேரை வைத்து சுயமரியாதை திருமணம் செய்தார். அவர் காலத்தில் நீதிமன்றத்தில் காலம் தவறாமல் வந்தவரும் அவர் ஒருவர்தான். மகன் மண நாள் அன்றுகூட நீதிமன்றம் வந்த ஒரே நீதிபதி அவர்தான். சத்யதேவ் அப்பா கோவையில் நீதிபதியாக இருந்தார். அவரது தந்தை சத்தியத்தை அவர் நிலைநாட்ட வேண்டும் என்பதற்காகவே இந்தப் பெயரைச் சூட்டினார்.
சத்யதேவ் அளித்த தீர்ப்புகள் சுத்தமாக இருக்கும். ஒரு அடித்தல் திருத்தல் இருக்காது. ஒரு புள்ளியைக் கூட சரியாக பயன்படுத்துவார். கால தாமதம் செய்யாமல் நீதி வழங்குவார். அரசாங்கத்தை எதிர்த்துப் பல தீர்ப்புகள் வழங்கியவர். ஆகவே அவரை எதிர்த்து சட்டமன்றத்தில் உரிமை மீறல் தீர்மானம் நிறைவேற்ற எம்.ஜி.ஆர் ஆட்சிக்காலத்தில் முயன்றார்கள். இறுதியில் அது நிறைவேறவில்லை. பணி ஓய்வு பெற்ற பிறகு அவர் பெங்களூரு போய் செட்டில் ஆகிவிட்டார்.
யாரேனும் உதவி கேட்டுவந்தால், வழக்குகளில் தலையிடுவதாக அது இருக்கும் என அஞ்சி அவர் மாநிலத்தை விட்டு வெளியேறினார். அவரால் ஈர்க்கப்பட்டவர்களில் நானும் ஒருவன். அவர் பெயரில் வழக்கறிஞர் மாணவர்களுக்காக ஒரு அறக்கட்டளை நடத்தி வருகிறோம். இன்றும் ராஜா அண்ணாமலைபுரத்தில் அவர் பெயரில் ஒரு தெரு உள்ளது.
நான் அவருடன் பழகி இருக்கிறேன். நான் வழக்கறிஞராக இருந்தபோது தொழிலாளர் உண்ணாவிரதம் ஒன்று நடந்தது. அதற்கு காவல்துறை அனுமதி மறுத்தது. எம்.ஜி.ஆர் முதல்வராக இருந்த போது மத்திய அரசை எதிர்த்து திடீரென்று அண்ணா சமாதி முன்பு உள்ள சாலையில் அப்படியே உட்கார்ந்து போராட்டம் நடத்தினார். அப்போது வாகனங்கள் வாலாஜா சாலை வழியாகத் திருப்பி விடப்பட்டன. அதனால் நீதிமன்றத்திற்கு வர வேண்டிய நீதிபதிகள் பாதிக்கப்பட்டன. நீதிமன்றம் செல்ல தாமதமானது.
அன்று நடைபெற்ற தொழிலாளர் போராட்டத்திற்கு அனுமதி கொடுக்க மறுத்ததைப் பற்றியும் முதல்வரே சாலையில் உட்கார்ந்து தர்ணா செய்தது பற்றியும் வாதாடும் போது நான் சொன்னேன். உடனே தொழிலாளர் உண்ணாவிரதத்திற்கு அனுமதி கொடுத்து தீர்ப்பளித்தார் சத்யதேவ். நீதிமன்றமே உண்ணாவிரதம் இருக்க அனுமதி அளித்து அதனால் யாரேனும் பட்டினி கிடந்து இறந்து போனால் என்ன ஆகும் என யோசித்த அவர், ’பசியால் அவர்கள் வாடாமல் இருக்கும்வரை உண்ணாவிரதம் நடத்த அனுமதிக்கலாம். ஒருவேளை மயங்கி விழ நேர்ந்தால் அவர்களை மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டும்’ என்று உத்தரவு போட்டார்.
ஹைகோர்ட் சுற்றிலும் அப்போது நிறைய நடைபாதைகள் இருந்தன. பாரிசில் பஸ் ஸ்டான்ட் இருந்த காலகட்டம். மக்கள் அதிகம் பாதிக்கப்பட்டன. அன்றைக்குப் பொதுநல வழக்குகள் பற்றி விழிப்புணர்வு இல்லாத காலம். அப்படியான காலத்தில் அவரே இந்த நடைபாதைகளால் பொதுமக்கள் அவதிப்படுகிறார்கள் என்பதை உணர்ந்து அனைத்தையும் அகற்ற உத்தரவு போட்டார். அவர் போட்ட உத்தரவினால்தான் இன்றுவரை கோர்ட் சுற்றி உள்ள நடைபாதைகளில் கடைகள் போடுவது தடுக்கப்பட்டுள்ளது” என்கிறார்.
-
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்?












Click it and Unblock the Notifications