வன்முறை நிகழ்வு எந்த ரூபத்தில் வந்தாலும் ஏற்க முடியாது! கேரளா குண்டுவெடிப்புக்கு ஜவாஹிருல்லா கண்டனம்
சென்னை: வன்முறை நிகழ்வு எந்த ரூபத்தில் வந்தாலும் அதனை ஏற்க முடியாது என்றும் கேரள குண்டுவெடிப்பு சம்பவத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்துக் கொள்வதாகவும் மமக தலைவர் ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்.
கேரள குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக மனிதநேய மக்கள் கட்சியின் மாநில தலைவர் பேராசிரியர் எம். எச். ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை வருமாறு;

''கேரள மாநிலம் எர்ணாகுளம் அருகே உள்ள களமசேரியில் ஞாயிறு தோறும் நடக்கும் கிறிஸ்தவ மத சிறப்பு ஜெபக் கூட்டம் நடக்கும் இடத்தில் இன்று காலை 9 மணியளவில் மூன்று இடங்களில் பயங்கர வெடி விபத்துகள் நடைபெற்றுள்ளது. இதில் பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 30க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதில் 7 பேரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல்கள் தெரிகின்றன. வன்முறை நிகழ்வுகள் அது எந்த வடிவத்தில் வந்தாலும் அதனை ஏற்றுக் கொள்ள முடியாது. இந்த குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த பயங்கரவாத நடவடிக்கையின் உண்மையான குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு கடும் தண்டனை வழங்கப்பட வேண்டும். இந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த சம்பவத்தில் சிகிச்சை பெற்று வரும் அனைவரும் மிக விரைவில் குணம் பெற்று இல்லம் திரும்ப இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்.'' இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications