Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பிரிட்ஜில் திறந்து பார்த்து ஷாக்கில் நடுங்கிய போலீசார்.. அப்பார்ட்மெண்ட் கிச்சனில் யார் இந்த தம்பதி?

Subscribe to Oneindia Tamil

சென்னை: கேரள மாநிலத்தில் ஒரு அப்பார்ட்மெண்ட்டில் நடந்த இந்த சம்பவம், அந்த மாநில மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் மர்மத்தையும் ஏற்படுத்தியுள்ளது.. ஒரு வீட்டின் பிரிட்ஜை திறந்து பார்த்ததுமே போலீசார் அதிர்ச்சியில் உறைந்துவிட்டார்கள்.. இதை கேள்விப்பட்டவர்களின் நெஞ்சையும் உறைய வைத்து வருகிறது.. யாரிந்த தம்பதி? போலீசார் இவர்களிடம் தீவிர விசாரணையில் இறங்கி உள்ளார்கள்..!!

கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள கொடுங்கல்லூர் பகுதியில் உள்ளது அந்த அப்பார்ட்மெண்ட்.. இங்கு வசிக்கும் ஒரு தம்பதியினரின் நடவடிக்கைகளில் சந்தேகம் இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

Couple news Fridge police news crime news mystery case apartment crime fridge discovery shocking news viral crime investigation breaking news India news police investigation apartment mystery unexpected discovery crime story viral news

அப்பார்ட்மெண்ட் தம்பதி

உடனே அதனடிப்படையில், போலீசார் அந்த வீட்டிற்கு நேரில் சென்று அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அந்த வீட்டின் ஒவ்வொரு ரூமையும் போலீசார் சோதனையிட்டனர்.. அப்போது கிச்சனில் இருந்த பிரிட்ஜைத் திறந்து பார்த்த போலீசாருக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. அங்கு ஒரு சின்ன பெட்டிக்குள், சுமார் 3 மாத வளர்ச்சி உடைய சிசுவின் கரு மிகவும் பத்திரமாக வைக்கப்பட்டிருந்தது.

இதைக் கண்ட போலீசார் உடனடியாக அந்தப் பெட்டியை கைப்பற்றி, வீட்டில் இருந்த கணவன் மற்றும் மனைவி இருவரையும் பிடித்துத் தனித்தனியாக விசாரணை நடத்தினர்.

பிரிட்ஜில் கரு

விசாரணையில் அந்தப் பெண் அளித்த வாக்குமூலம் மிகவும் விசித்திரமாகவும், அதேசமயம் ஒருவிதமான மன உளைச்சலை வெளிப்படுத்துவதாகவும் அமைந்தது. அதாவது 3 மாதங்களுக்கு முன்பு தான் அந்த பெண் கர்ப்பமடைந்துள்ளார். ஆனால் எதிர்பாராத விதமாகத் அப்பெண்ணுக்கு அபார்ஷன் ஆகிவிட்டதாம்..

அந்த நேரத்தில் என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்ததாகவும், கரு சிதைந்து வெளியே வந்த அந்தச் சிசுவை வீச மனசு கேட்காமல், அதை ஒரு பெட்டிக்குள் வைத்து பிரிட்ஜில் பாதுகாத்து வைத்ததாகவும்அவர் உருக்கத்துடன் சொல்லி உள்ளார்..

இருந்தாலும் போலீசார் இந்த விளக்கத்தை அப்படியே ஏற்றுக் கொள்ளவில்லை. இது உண்மையிலேயே இயற்கையாக நடந்த கருக்கலைப்பா அல்லது சட்டவிரோதமாகக் கருக்கலைப்பு செய்யப்பட்டதா என்ற கோணத்தில் விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளது.

போலீசார் ஷாக்

அந்தப் பெண் இதற்கு முன்பு ஏதேனும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றாரா, அல்லது மருத்துவர்களின் ஆலோசனையின்றி கருக்கலைப்பு மாத்திரைகள் ஏதும் உட்கொண்டாரா என்பது குறித்தும் போலீசார் தகவல்களைச் சேகரித்து கொண்டிருக்கிறார்கள். கண்டெடுக்கப்பட்ட அந்த சிசுவின் கரு தற்போது மருத்துவப் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. அதன் மூலம் சிசுவின் இறப்பிற்கான உண்மையான காரணம் தெரியவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எனினும் இந்த சம்பவத்தை பார்க்கும்போது, ஒரு பெண்ணின் மனநிலை எவ்வளவு தூரம் பாதிக்கப்பட்டிருந்தால், இத்தகைய விசித்திரமான முடிவை எடுத்திருப்பார் என்ற கேள்வி எழுகிறது. 3 மாத வளர்ச்சி அடைந்த ஒரு கருவை பிரிட்ஜில் வைத்திருப்பது என்பது மிகவும் கொடுமையான விஷயம்.

கருக்கலைப்பு சம்பவம்

ஒருவேளை கருக்கலைப்பு ஏற்பட்ட அதிர்ச்சியில் இருந்த அந்தப் பெண்ணிற்கு, முறையான மருத்துவ உதவியோ அல்லது மனநல ஆலோசனையோ கிடைக்காமல் இருந்திருக்கலாம். சமூகத்திற்கு பயந்தோ அல்லது அந்தச் சிசுவின் மீதான அதீதப் பிணைப்பாலோ அவர் இப்படி செய்திருக்கலாம். என்றாலும் சட்ட ரீதியாக இது ஒரு பெரிய குற்றம் என்பதால், போலீசாரின் முழுமையான விசாரணைக்குப் பிறகே இதன் பின்னணியில் உள்ள உண்மைத்தன்மை விளங்கும்.

இதுபோன்ற இக்கட்டான சூழலில் இருப்பவர்களுக்குச் சரியான வழிகாட்டுதலும், மருத்துவ விழிப்புணர்வும் சமூகத்தில் எவ்வளவு அவசியம் என்பதையே இந்தச் சம்பவம் நமக்கு உணர்த்துகிறது..!!!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+