இந்திய மேலாளர் vs ஜப்பான் மேனேஜர்! லீவு கேட்டதுக்கு பதிலை பாருங்க! நம்மாளுங்க திருந்த மாட்டாங்க
சென்னை: வேலை-வாழ்க்கை இரண்டையும் சமமாக பேலன்ஸ் செய்து போக வேண்டும். அப்போதுதான் இரண்டும் சரியாக இருக்கும். ஆனால், இந்தியாவில் இதற்கான சாத்தியமே இல்லை என்பது பலமுறை நிரூபிக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் சமீபத்தில் ஊழியர் ஒருவர் தனது இந்திய மேனேஜர் மற்றும் ஜப்பான் மேனேஜரிடம் லீவு கேட்டபோது அவர்கள் என்ன ரிப்ளை கொடுத்தார்கள் என்பதை ஸ்கிரீன்ஷாட் எடுத்து ரெடிட் சோஷியல் மீடியாவில் பதிவிட்டிருக்கிறார். இந்த போஸ்ட் பரவலாக ஷேராகி வருகிறது.
இந்த ஊழியர், தற்போது ஜப்பான் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இதற்கு முன்னர் ஒரு இந்திய நிறுவனத்தில் பணியாற்றியிருந்தார். அங்கு வேலை செய்தபோது, குடும்ப விஷயம் தொடர்பாக அவசரமாக வெளியூர் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டிருந்தது. அவருக்கு 7 நாட்கள் கேஷுவல் லீவு பெண்டிங்கில் இருந்தது. எனவே மேனேஜரிடம் லீவு அப்ளை செய்திருக்கிறார்.

லீவு ரெக்வஸ்ட் மெயிலுக்கு, "லீவு அங்கீகரிக்கப்பட்டது. டீமுடனும், மெயிலிலும் இணைப்பில் இருங்கள்" என்று பதில் வந்திருக்கிறது. இந்திய மேனேஜரின் இந்த பதிலை ஸ்கிரீன் ஷாட்டாக எடுத்து, "லீவுக்கு அப்ரூவ் கொடுப்பது, தனிப்பட்ட முறையில் எனக்கு ஏதோ நல்லது செய்வதை போல இந்திய மேனேஜர் நினைக்கிறார்" என்று குறிப்பிட்டு ஊழியர் ஷேர் செய்திருக்கிறார். அதேபோல ஜப்பான் மேனேஜரின் பதிலையும் இணைத்துள்ளார். அதில், "வெல்கம், உங்கள் லீவு நோட் செய்யப்பட்டது. வீட்டிற்கு செல்லும்போது கவனமாக இருங்கள்" என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இந்த போஸ்ட்டுக்கு பலரும் கமென்ட் செய்திருக்கின்றனர். சிலர், "நானும் ஜப்பான் நிறுவனத்தின் கீழ் வேலை பார்த்திருக்கிறேன். அது புது அனுபவமாக இருந்தது" என்று கூறியிருக்கிறார். இன்னும் சிலரோ, "வொர்க்-லைஃப் பேலன்ஸ் விஷயத்தில் ஜப்பானியர்கள் கவனமாக இருப்பார்கள். அவர்கள் வாழ்க்கைக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். இந்தியர்கள் வேலைக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள்" என்று கூறியிருக்கிறார்கள். இதுதான் சார் நம்ம பய புத்தி என்கிற விதத்தில், இந்திய மேனஜரின் பதிலை சிலர் கமெண்ட் செய்திருக்கிறார்கள்.
சர்வதேச அளவில் வேலை-வாழ்க்கை சமநிலை குறைவாக உள்ள 60 நாடுகளின் பட்டியலில் இந்தியா 42வது இடத்தில் இருக்கிறது. இந்திய நிறுவனங்களில் 4-5 தொடர் லீவு கிடைப்பது அத்தப்பூ பூப்பதை போலதான் இருக்கும். ஒவ்வொரு இந்தியரும் வாரத்திற்கு 45.72 மணி நேரம் உழைக்கிறார்கள். இது நிறுவனங்கள் சொல்லும் கணக்கு. உண்மையில் வேலை நேரம் அதிகமாக இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. இருப்பினும் 45.72 மணி நேரம் என்பது உலகிலேயே மிக அதிகமான பணி நேரமாகும்.
சுகாதார வசதிகள் குறைவாக இருப்பது, வேலையில் பாதுகாப்பு மற்றும் மகிழ்ச்சி இல்லாமல் இருப்பது போன்ற பிரச்சனைகளை இந்திய தொழிலாளர்கள் எதிர் கொண்டிருக்கிறார்கள்.
-
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications