கம்பீருடன் சண்டை.. ஐபிஎல் ஆக்ஷன்! ரூ.1 கோடி அபராதத்தை கோலி செலுத்த மாட்டாராம் - ஏன் தெரியுமா?
சென்னை: லக்னோ சூப்பர் ஜியாண்ட்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்கு இடையிலான போட்டியில் விராட் கோலிக்கும் கம்பீருக்கும் ஏற்பட்ட மோதலை தொடர்ந்து பிசிசிஐ விதித்த ரூ.1 கோடி அபராதத்தை விராட் கோலி செலுத்த மாட்டார் என்று தகவல் வெளியாகி உள்ளது. அவருக்கு பதிலாக யார் அபராதம் செலுத்துவார்கள்? விரிவாக பார்ப்போம்.
ஐபிஎல் தொடரின் இரண்டாம் சுற்று லீக் போட்டியில் நடைபெற்று வரும் நிலையில் கடந்த மே 1 ஆம் தேதி கே.எல்.ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜியாண்ட்ஸ் அணியும் பாப் டூ பிளஸ்ஸி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளும் விளையாடின. உத்தரப்பிரதேச தலைநகர் லக்னோவில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணி கேப்டன் டூ பிளஸ்ஸி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

பெங்களூரு அணியில் கோலி, டூ பிளஸ்ஸி ஆகியோர் மட்டுமே ஓரளவு ரன்களை சேர்த்தனர். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களையே எடுத்து ஆட்டமிழந்ததால் அந்த அணி 126 20 ஓவர்களில் ரன்களை மட்டுமே எடுத்தது. சொந்த மைதானத்தில் எளிதான இலக்கை நோக்கி இறங்கிய லக்னோ அணி, ஆனால், பெங்களூருவின் அபாரமான பந்துவீச்சால் லக்னோ அணி 108 ரன்களிலேயே ஆட்டமிழந்து தோல்வியடைந்தது.
இந்த போட்டி முடிந்தவுடன் பிறகு கோலிக்கும் ஆப்கானிஸ்தானை சேர்ந்த லக்னோ அணியின் பந்துவீச்சாளர் நவீனுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அதன் தொடர்ச்சியாக கம்பீருக்கும் கோலிக்கும் இடையே கடும் வாக்குவாதம் மூண்டது. இருவரையும் சக வீரர்கள் தடுத்த நிலையிலும் கடந்த 2 நாட்களாக இந்த சம்பவமே ஊடகங்களிலும் சமூக வலைதளங்களிலும் பிரதானமாக பேசப்பட்டன.

இந்த நிலையில் கோலி, கம்பீரின் போட்டிக்கான 100 சதவீத ஊதியமும் பிடித்தம் செய்யப்படும் என பிசிசிஐ அறிவித்தது. இதேபோல் தாமதமாக ஓவர் வீசியது உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக பல்வேறு அணியின் கேப்டன்களுக்கு பகுதியாகவோ, முழுமையாகவோ ஊதியம் பிடித்தம் செய்யப்பட்டு உள்ளது. ஆனால், இந்த அபராதங்களை எல்லாம் வீரர்கள் எப்படி வழங்குவார்கள் என்ற கேள்விக்கு பலரிடம் விடை இல்லை.
தற்போதைய கோலி - கம்பீர் விவகாரத்தை எடுத்துக்கொண்டால், கோலிக்கு ஆண்டுக்கு 15 கோடியை ஊதியமாக வழங்குகிறது பெங்களூரு அணி நிர்வாகம். அதை கணக்கிட்டால் அவருக்கு ஒரு போட்டிக்கு ரூ.1.07 கோடி ஊதியம் வழங்கப்படுகிறது. அதன்படி பார்த்தால் கம்பீருடன் மோதியதற்காக ஒரு போட்டியின் முழு ஊதியமான ரூ.1.07 கோடியை கோலி வழங்க வேண்டும்.

ஆனால், அவர் அதை கொடுப்பாரா என்று கேட்டால் இல்லை என்ற பதிலே கிடைக்கிறது. வீரர்களுக்கு விதிக்கப்படும் அபராதம், ஊதியம் போன்றவரை அணிகளுக்கு அணி மாறுபடும். ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் கொள்கையை பொறுத்தவரை, வீரர்களுக்கு விதிக்கப்படும் அபராதத் தொகையை அணி நிர்வாகமே வழங்கும் என்று கூறப்படுகிறது.
இதுகுறித்து பெயர் கூற விரும்பாத ஆர்சிபி நிர்வாகி தெரிவிக்கையில், "வீரர்கள் அணிகளுக்காக மைதானங்களில் தங்கள் உடல்களை வருத்திக்கொள்கின்றனர். அவர்களை நாங்கள் மதிக்கிறோம். எனவே அபராதங்களை அவர்களின் ஊதியத்தில் இருந்து பிடித்தம் செய்ய மாட்டோம்." என்று கூறி உள்ளார். அதே நேரம் கம்பீரின் அபராதத்தை பிடித்தம் செய்வது தொடர்பாக லக்னோ அணி நிர்வாகம் என்ன முடிவில் உள்ளது என்ற தகவல் கிடைக்கவில்லை.
-
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி!












Click it and Unblock the Notifications