காரில் கசமுசா.. சிக்கிய நிர்மலா தேவி.. மாணவிகளை தப்பா வழிநடத்தி.. கோர்ட்டுக்கும் வரலயாமே.. என்னாச்சு
சென்னை: பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பேராசிரியை நிர்மலா தேவி வழக்கின் தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.. என்ன காரணம்?
கடந்த 2016-ம் ஆண்டு, பேராசிரியை நிர்மலா தேவி மீது கிளம்பிய குற்றச்சாட்டு, தமிழகமெங்கும் அதிர்வலையை கிளப்பியது.. தனியார் கல்லூரியில் படித்த மாணவிகளை, நிர்மலாதேவி தவறான பாதைக்கு அழைத்ததுதான் முக்கிய குற்றச்சாட்டாகும்.

இது தொடர்பாக நிர்மலாதேவியிடம் விசாரணை நடத்த முயன்றபோதுதான், நிர்மலா தேவி பற்றின பல்வேறு விவகாரங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தின.
தன்னுடன் தொடர்பில் இருந்தவர்களை பற்றி விலாவரியாக நிர்மலா தேவியே கூறியிருந்தார்.. இந்து சமய அறநிலையத்துறை அதிகாரி ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டு உல்லாசம் அனுபவித்தாகவும், 2016-ல் தேவாங்கர் கல்லூரியின் முன்னாள் செயலாளருடன் தொடர்பு ஏற்பட்டு உல்லாசம் அனுபவித்ததாகவும், தன்னுடைய கணவரின் நண்பர்கள் 2 பேருடன் நெருக்கமாக இருந்ததாகவும் கூறியிருந்தார்.
அதிகாரிகள்: அதுமட்டுமல்ல, இந்து சமய அறநிலையத்துறை அதிகாரியுடன் 24 நாட்கள் பல இடங்களுக்குச் சென்று உல்லாசம் அனுபவித்ததாகவும், இன்னொரு இந்து சமய அறநிலையத்துறை அதிகாரி மற்றும் நகைக்கடை அதிபருடனும் படுக்கையைப் பகிர்ந்து கொண்டதாகவும், 2016-ல் மதுரை காமராஜர் பல்கலைக்கழக அதிகாரியுடன் மிக நெருக்கமாக பழகியதாகவும் வாக்குமூலம் தந்தார்.
அதுமட்டுமல்ல, எஸ்பிகே கல்லூரியில் பணிபுரியும் உதவி பேராசிரியர் வீட்டில் 2 முறை உல்லாசமாக இருந்ததாகவும், 2017ல் முருகன் என்பவருடன் உடலுறவு வைத்துக் கொண்டதாகவும், முருகனின் நண்பர், கருப்பசாமியுடன் தொடர்பு ஏற்பட்டு, காரில் அருப்புக்கோட்டை சென்றபோது, காரை ஓரமாக நிறுத்திவிட்டு காருக்குள்ளேயே இருவரும் உல்லாசம் அனுபவித்தாகவும் நிர்மலா தேவி, தன்னுடைய வாக்குமூலத்தில் சிபிசிஐடி போலீசாரிடமே கூறியிருந்தார்.
அருப்புக்கோட்டை: இதெல்லாம் நிர்மலா தேவியின் தனிப்பட்ட விவகாரங்கள் என்றாலும், தான் பணியாற்றிய கல்லூரியில் இளங்கலை மற்றும் முதுகலை மாணவிகள் சிலரை மூளைச்சலவை செய்திருக்கிறார் நிர்மலாதேவி..
அந்த மாணவிகளின் குடும்ப வறுமையையும், அவர்களின் ஏழ்மை நிலையையும் தெரிந்துகொண்டு, அவர்களிடம் ஆசைவார்த்தைகள் கூறி பாலியல் வலையை விரித்துள்ளார்.. அவர்களை தவறாக தவறான பாதைக்கு வழிநடத்தியிருக்கிறார்.
விஐபி: இதையடுத்து, விஐபிக்களுக்கு மாணவிகளை சப்ளை செய்வது தொடர்பாக முருகன், கருப்பசாமி மற்றும் நிர்மலாதேவி இடையே பேச்சுவார்த்தையும் நடந்துள்ளது.. இது தொடர்பான ஆடியோவும் வெளியாகி, மாணவிகளிடம் ஆசையை தூண்டி நிர்மலா தேவி பேசியபோது உறுதியானது.. ஆனால் இறுதியில் 3 பேருமே மாட்டிக் கொண்டு கம்பி எண்ணும் நிலைமைக்கு ஆளானார்கள்.
இந்த வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில், இறுதி வாதங்களும் முடிவடைந்தது.. எனவே இன்று அதாவது 26ம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. நிர்மலா தேவி குற்றவாளி என்பதாலும், இன்று தீர்ப்பு என்பதாலும், இந்த வழக்கில் இன்று காலையிலிருந்தே பரபரப்பு எகிறியது.
அதற்கேற்றார்போல், உதவி பேராசிரியர் முருகன், ஆய்வு மாணவர் கருப்பசாமி ஆகியோர் ஸ்ரீவில்லிபுத்தூர் கோர்ட்டுக்கு காலையிலேயே வந்திருந்தனர். ஆனால் நிர்மலாதேவியை காணோம்.. 10.15 மணி வரை ஆகியும், அவர் வரவேயில்லை..
உடல்நலக்குறைவு: பின்னர், அவருக்கு உடல்நலக்குறைவு காரணமாக இன்று கோர்ட்டில் ஆஜராக முடியவில்லை என்று அவரது வக்கீல் சார்பில் மனு தரப்பட்டது.. எனவே, இன்று வழங்கப்படுவதாக இருந்த வழக்கின் தீர்ப்பை வருகிற 29-ந்தேதிக்கு ஒத்திவைத்துள்ளார் நீதிபதி பகவதி அம்மாள்.
நிர்மலா தேவி கேஸில் முன்கூட்டியே தீர்ப்பு வழங்கப்பட்டிருக்க வேண்டும்.. ஆனால், நடுவில் கொரோனா பரவல் வந்துவிட்டதால், ஸ்ரீவில்லிப்புத்தூர் மகளிர் கோர்ட்டில் இந்த வழக்கு விசாரணை தாமதமாகவே நடந்தது.
எதிர்பார்ப்பு: வருகிற 29ம் தேதி நிர்மலா தேவிக்கு என்ன மாதிரியான தீர்ப்பு கிடைக்க போகிறதென்று தெரியவில்லை.. காரணம், பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்பு சட்டம், விபச்சார தடுப்புச் சட்டம், தொழில்நுட்பத்தைத் தவறாக பயன்படுத்திய பிரிவுகளில் வழக்கு என பல்வேறு தரப்பில் வழக்குகள் பதிவாகி, விசாரணையும் நடத்தப்பட்டதாக குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமல்லாமல், இந்த வழக்கில் முதல் குற்றவாளியே நிர்மலா தேவிதான் என்பதால், வழக்கின் தீர்ப்பு எப்படியிருக்க போகிறாதோ என்ற எதிர்பார்ப்பு இன்னமும் தொடர்ந்து கொண்டேயிருக்கிறது.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
10 வருஷமா வேதனையில இருக்கேன்... எங்களை விஷம் வைத்து கொன்றுடுங்க... நடிகர் பாலா உருக்கம்!












Click it and Unblock the Notifications