விஜயகாந்த் மகனுடன் மோதும் ராதிகா! விஜய பிரபாகன் பக்கம் அனுதாப அலை வீசுமா?
சென்னை: விருதுநகர் தொகுதியில் ராதிகா மற்றும் விஜய பிரபாகரன் போட்டியிடுவதால் அது ஸ்டார் வேல்யூ பெற்றுள்ளது. இந்த இருவருக்குமான வாய்ப்புகள் எப்படி உள்ளன?
விருதுநகர் மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளராக ராதிகா சரத்குமார் அறிவிக்கப்பட்டுள்ளார். அதிமுக கூட்டணியில் உள்ள தேமுதிக வேட்பாளராக விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன் அறிவிக்கப்பட்டுள்ளார்.

மதுரை மண்ணின் மைந்தராகக் கருதப்படும் விஜயகாந்த், இப்போது உயிருடன் இல்லை. ஆகவே, அவரது அரசியல் வாரிசாக அவரது மகன் களம் இறக்கப் பட்டுள்ளார்.
எந்தளவுக்கு வெற்றி வாய்ப்பு இருக்கும் என்பது கேள்விக்குறிதான். காரணம், விஜயகாந்த் உயிருடன் இருக்கும் போதே அவர் தனது சொந்த தொகுதியான மதுரையைத் தேர்வு செய்யவில்லை. அவரது கட்சி பலமாக உள்ள விருத்தாசலம் தொகுதியை அவர் தேர்வு செய்தார். அடுத்து ரிஷிவந்தியம் போய் நின்றார்.
அவரது மறைவுக்குப் பிறகு மதுரை தொகுதியில் விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன் நின்றிருந்தால் கூட செண்டிமெண்ட் விசயங்களுக்கு அதிக முக்கியத்துவமளிக்கும் மதுரை மக்கள் அவரது மகனைக் கொஞ்சம் கருணையோடு அணுகி இருப்பார்கள். ஏதோ ஒரு அனுதாப அலையிலாவது அவர் மேலே வந்திருப்பார். அதற்கு மாறாக விருது நகர் தொகுதியை அவரது மகனுக்கு ஒதுக்கி உள்ளது அதிமுக.

விருதுநகர் தொகுதிக்குள் திருப்பரங்குன்றம், திருமங்கலம், சாத்தூர், சிவகாசி, விருதுநகர், அருப்புக்கோட்டை என ஆறு சட்டமன்றத் தொகுதிகள் வருகின்றன. பட்டாசுத் தொழிலாளர்கள் பிரச்சினை அதிகமாக உள்ள தொகுதி.
அதுவும் பாஜக ஆட்சியில் ஜிஎஸ்டி கொண்டுவரப்பட்ட பிறகு பல தொழிற் சாலைகள் இங்கே தரைமட்டமாகப் படுத்துவிட்டன. அதிக அளவில் தொழிற் சாலைகள் வெடிவிபத்து, நிதி நெருக்கடி எனப் பாதி உயிரை விட்டுவிட்டன.
இன்னும் இப்பவோ அப்பவோ என இங்கே அந்தத் தொழில் இயங்கி வருகிறது. சுற்றுச் சூழல் பிரச்சினையால், நீதிமன்ற கட்டுப்பாட்டால் பாதி தொழிலாளர் கள் தங்களின் தொழிலையே விட்டு வெளியேறி விட்டனர்.

இந்தத் தொகுதிக்குள் நாடார் சமுதாய மக்கள் அதிகமாக உள்ளனர். அதனை அடுத்து நாயுடு ஓட்டுகள் அதிகமாக உள்ளன. அதனை மனதில் வைத்துத் தான் விஜயகாந்த் மகன் களம் இறக்கப்பட்டுள்ளார். அவர் தெலுங்கு பேசக் கூடிய நாயுடு வகுப்பைச் சேர்ந்தவர். அதனை மனதில் வைத்துத்தான் வைகோ கூட இந்தத் தொகுதியில் நின்றுள்ளார். ஆனால், அவர் தோல்வியைத் தழுவினார் என்பது தனிக்கதை.
தற்போது எம்பி ஆக உள்ள மாணிக் தாகூர் கடந்த 20090 14 வரை பதவியே இருந்துள்ளார். இவர் வைகோவையே தோற்கடித்தவர். அதன்பின்னர் 2019- 2024 வரை இரண்டாவது முறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார்.
அதாவது 2019 தேர்தலில் மாணிக்கம் தாகூர் 4,70,883 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார். இவரை எதிர்த்து அதிமுக கூட்டணி சார்பாக நின்ற தேமுதிக வேட்பாளர் அழகர்சாமி 3,16,329 வாக்குகளைப் பெற்று 2வது இடத்திற்கு வந்தார். இதே தேர்தலில் அமமுக 1,07,615 வாக்குகளைப் பெற்றது.

2014இல் இராதாகிருஷ்ணன் அதிமுக கூட்டணி சார்பில் போட்டியிட்டு 406,694 வாக்குகளைப் பெற்று வென்றுள்ளார். அப்போதுதான் வைகோ 261,143 பெற்றுத் தோற்றுப் போனார்.
அதற்கு முன்னதாக 2009இல் வைகோ மதிமுக சார்பில் போட்டியிட்டு 2,91,423 வாக்குகளைப் பெற்றார். அப்போதும் அவர் வெற்றி பெறவில்லை. இந்தத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர் 17,336 வாக்குகளைப் பெற்றார்.
விருதுநகர் மக்களவைத் தொகுதிக்குள் வரும் திருப்பரங்குன்றம் சட்டமன்றத் தொகுதியை 2011 இல் தேமுதிக கைபற்றியது. ஏ.கே.டி.ராஜா 95,469 வாக்குகளைப் பெற்று எம்.எல்.ஏ ஆனார்.
2021இல் அதிமுக வேட்பாளர் ராஜன் செல்லப்பா 103,683 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றுள்ளார். அதைப்போலவே திருமங்கலம் சட்டமன்றத் தொகுதி அதிமுகவைச் சேர்ந்த ஆர். பி. உதயகுமார் கைவசம் உள்ளது. இவர் கடந்த சட்டப் பேரவை தேர்தலில் 100,338 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்று எம்.எல்.ஏ ஆக உள்ளார்.
இதே தேர்தலில் தேமுதிக சார்பில் விருதுநகர் சட்டப்பேரவை தேர்தலில் நின்ற தேமுதிக வேட்பாளர் பாண்டிய ராஜன் 70,104 வாக்குகளைப் பெற்றிருந்தார்.
இப்போது விருதுநகர் மக்களவை தொகுதியில் அதிமுக அணியில் போட்டியிடும் விஜய பிரபாகரனுக்கு இவை எல்லாம் சாதகமான அம்சங்கள். ஆனால், வெற்றி அம்சங்கள் எனச் சொல்ல முடியாது.
விஜயகாந்த் மகனுடன் பாஜக சார்பில் போட்டியிடுகிறார் ராதிகார் சரத்குமார். ராதிகா நாயுடு வகுப்பைச் சேர்ந்தவர். சரத்குமார் நாடார் வகுப்பைச் சேர்ந்தவர். இந்த இரண்டு வகுப்பினரும் அதிகம் வாழும் தொகுதி விருதுநகர். அந்தக் கணக்கில் ராதிகா களம் இறங்கி உள்ளார்.

சொல்லப்போனால், சரத்குமார்தான் போட்டியிட்டிருக்க வேண்டும். அவர் வேண்டும் என்றே போட்டியிலிருந்து விலகி உள்ளார். பிரதமராகும் அளவுக்குத் திறமை உள்ளவன் எனத் தன்னைப் பற்றிய மிகையான மதிப்பீட்டிலிருந்தவர் ஏன் எம்பி ஆகப் போட்டியிடவில்லை எனத் தெரியவில்லை. பிரதமராக வேண்டும் என்றால் முதலில் எம்பி ஆக வேண்டும்.
அவருக்குத் தெரிந்திருக்கும், பாஜக கூட்டணியில் நின்று வெற்றி பெற முடியாது என்று. ஏனெனில் திமுக கூட்டணியில் பலமான வேட்பாளராக நின்றே தோற்றுப் போனவர். ஆகவே மனைவியைக் களம் இறக்கி உள்ளார்.
இதில் ஹைலைட் என்னவென்றால் விஜயகாந்தின் காதலியாகப் பேசப்பட்டவர் ராதிகா. அவர் இறந்த போது பல யூடியூப் சேனல்கள் ராதிகாவின் காதல் கதையைத்தான் பக்கம் பக்கமாகப் பேசி வந்தன. இன்று அப்பாவின் முன்னாள் காதலியாக இருந்த ராதிகாவுடன் விஜய பிரபாகரன் மோதுகிறார் என்று சமூக வலைத்தளங்களில் பலர் திரைக்கதை எழுதி வருகின்றனர்.
அதிமுக அணியில் உள்ள விஜய பிரபாகரனுக்குக் கடைசி நேரத்தில் ஏதோ ஒரு அதிருஷ்டம் காத்திருக்கலாம். ஆனால், ராதிகாவுக்கு எந்த வாய்ப்பு இல்லை என்றே விருதுநகர் கதை சொல்கிறது.
-
NDA கூட்ட பேனரில் எடப்பாடி பழனிசாமி படம் புறக்கணிப்பு.. அதிர்ச்சியில் அதிமுகவினர்! என்னங்க நடக்குது? -
ஆரம்பிக்கும் மூன்றாம் உலக போர்.. வெளியே வந்த டூம்ஸ்டே மீன்.. அலறும் உலக நாடுகள் -
கூட்டுறவு வங்கி தங்க நகை கடன் + மகளிர் உரிமை தொகை! கனிமொழி பிரம்மாஸ்திரம்! ஸ்டாலின் முக்கிய முடிவு -
தேசிய ஜனநாயக கூட்டணியில் விஜய்.. நெருங்கும் பேச்சுவார்த்தை.. ஒரே வார்த்தையில் உடைத்த சரத்குமார் -
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
எங்க கொண்டு போய் விட்டுடுச்சி பாருங்க.. கேஸ் தட்டுப்பாட்டால், ஸ்விக்கி, ஜொமோட்டோ டெலிவரி குறைந்தது! -
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
அமெரிக்கா இனி பிக்பாஸ் இல்லை.. நீங்க நம்பலைனாலும் அதான் நெசம்.. ஐக்கிய அரபு சகாப்தமும் வீழ்ந்தது! -
பிரேமலதாவிற்கு திமுகவின் அடுத்த ‘சர்ப்ரைஸ்'.. தேமுதிகவிற்கு தாராளம் காட்டும் ஸ்டாலின்.. காங்கிரஸ்க்கு அடி -
3 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய்யை வாங்கி குவித்த இந்திய நிறுவனங்கள்! ரஷ்யாவுக்கு கொட்டும் பண மழை! -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
கடலில் இறக்கப்பட்ட கண்ணி வெடி! எக்குத்தப்பாய் வந்து சிக்கிய அமெரிக்கா! வால் ஸ்ட்ரீட் ஜர்னல் வார்னிங்












Click it and Unblock the Notifications