விருதுநகர் பட்டாசு ஆலை விபத்து.. 4 பிரிவில் வழக்கு.. உரிமையாளர்கள் தலைமறைவு?
சென்னை: விருதுநகர் பட்டாசு ஆலை விபத்து நாட்டையே உலுக்கியுள்ளது. இந்த பட்டாசு ஆலை விபத்து தொடர்பாக ஆலை இருந்த கிராமத்தின் விஏஓ அளித்த புகாரின் பேரில், போலீசார் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் ஆலை உரிமையாளர்களான ஈஸ்வரி மற்றும் அவரது கணவர் முத்துமாணிக்கம் மீது வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் இருவரையும் தேடி வருகிறார்கள்.
விருதுநகர் மாவட்டம் சிவகாசி உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான பட்டாசு ஆலைகள் செயல்பட்டு வருகின்றன. ஆயிரத்திற்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகள் செயல்பட்டு வரும் நிலையில், இந்த ஆலைகளில் லட்சக்கணக்கானவர்கள் பணியாற்றி வருகிறார்கள்.

விருதுநகரில் உள்ள கட்டானர்ப்பட்டி பகுதியில் இயங்கி வரும் பட்டாசு ஆலையில் நேற்று பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. நேற்று காலையில் இந்த ஆலையில் 50-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றிக்கொண்டு இருந்த நிலையில், மதிய உணவுக்கு பிறகு திடீரென ஆலையில் பட்டாசு வெடித்து விபத்து ஏற்பட்டது. இதையடுத்து அருகில் உள்ள அறைகளுக்கும் தீ பரவி அடுத்தடுத்து பட்டாசுகள் வெடித்து சிதறின.
பேன்சிரக பட்டாசுகள் தயாரிக்கப்பட்டதாகவும், வீரியம் அதிகம் உள்ள வேதிப்பொருட்கள் பயன்படுத்தப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது. இதனால், சுமார் 10 கிலோ மீட்டர் சுற்றளவுக்கு பயங்கர வெடி சத்தம் ஏற்பட்டது. இந்த ஆலையில் ஏற்பட்ட விபத்தில் 24 பேர் பலியாகியுள்ளனர். அவர்களின் உடல்கள் உடனடியாக மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.
நாட்டையே உலுக்கிய இந்த பட்டாசு ஆலை தொடர்பாக ஆலை இருந்த கிராமத்தின் விஏஓ அளித்த புகாரின் பேரில் போலீசார் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஆலை உரிமையாளர்களான ஈஸ்வரி மற்றும் அவரது கணவர் முத்துமாணிக்கம் மீது வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் இருவரையும் தேடி வருகிறார்கள்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications