200 புதிய பில்லர் பாக்ஸ்.. 250 புதிய ஆர்.எம்.யுக்கள் - ஸ்டாலின் ஆட்சியில் ஒளிரும் விருகம்பாக்கம்

Subscribe to Oneindia Tamil

சென்னையில் உள்ள ஹாட் ஆஃப் த சிட்டிகளில் ஒன்று விருகம்பாக்கம் தொகுதி. அந்தப் பகுதியில்தான் தமிழ்த் திரையுலகின் கனவுத் தொழிற்சாலையான ஏவி.எம். ஸ்டுடியோ இயக்கி வருகிறது.

பிரசாத் ஸ்டுடியோ உட்படப் பல ஸ்டுடியோக்கள் உள்ளன. அதேபோல் பல திரை நட்சத்திரங்களின் வீடுகளும் இங்குதான் உள்ளன.

இவை போக மிகப்பெரிய விஜயா ஃபோரம் மால் மற்றும் தமிழ்நாட்டின் மிகப்பெரிய கோயம்பேடு காய்கறி சந்தையும் இருக்கிறது.

ஆகவே, இந்தத் தொகுதி பரபரப்புக்குப் பஞ்சம் இல்லாதது. இத்தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக ஏ. எம். வி. பிரபாகர் ராஜா உள்ளார்.

கே.கே.நகர் செயற்பொறியாளராக உள்ளார் வேல்முருகன். மற்றும் விருகம்பாக்கம் சட்டமன்றத் தொகுதியின் மண்டல அதிகாரியாகவும் பணியாற்றிவருகிறார்.

அவர், "இந்தத் தொகுதியைப் பொறுத்தவரை 1லட்சத்து 40 ஆயிரத்திற்கும் மேலான மின் இணைப்புகள் இருக்கின்றன. இந்த வாடிக்கையாளர்கள் அனைவருக்கும் சீரான மின்சாரம் வழங்குவதற்காக 8 துணை மின்நிலையங்கள் இயங்கிவருகின்றன.

ஏவி.எம்.ஸ்டுடியோ முதல் விஜயா மால் வரை..

ஏவி.எம்.ஸ்டுடியோ முதல் விஜயா மால் வரை..

திமுக ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் கடந்த வருடம் ஏவி.எம். வளாகத்திற்குள்ளாக ஒரு துணை மின்நிலையம் புதியதாக அமைத்துக் கொடுத்துள்ளோம். மேலும் வருங்காலத்தில் மின் பற்றாக்குறை ஏற்படாமல் இருப்பதற்கும், அதிக மின் அழுத்தம் நேராமல் இருப்பதற்கும் இரண்டு துணை மின்நிலையங்கள் விரைவில் அமைக்கப்பட்ட உள்ளன.

முனுசாமி சாலையில் அதற்கான பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. அதேபோல மத்திய சேமிப்புக் கிடங்கு வளாகத்திற்கு உள்ளாக ஒரு துணை மின்நிலையத்திற்கான வேலைகள் நடந்து வருகின்றன.

இதற்கு இடையே கே.கே. நகர் துணை மின்நிலையத்தின் தரமும் உயர்த்தப்பட்டுள்ளது. விருகம்பாக்கம் ஆற்காடு சாலையில் ஒரு துணை மின்நிலையம் அமைப்பதற்கான முன்வரைவு திட்டம் தயாராகி வருகிறது. இது மெட்ரோ ரயில் பயன்பாட்டிற்காக வேண்டி அமைக்க உள்ளோம்.

கடந்த 2021 இல் கோடைக்காலத்தின் போது எந்தெந்த பகுதிகளில் எல்லாம் அதிக மின் அழுத்தத்தால் மின் தடைகள் ஏற்பட்டதோ அவற்றை எல்லாம் கணக்கிட்டு ஆய்வு செய்தோம்.

அதன் பலனாக 20 மின்மாற்றிகளை புதியதாக அமைத்துள்ளோம். அவை அனைத்தும் தற்போது பயன்பாட்டிலிருந்து வருகின்றன. இந்த முன் எச்சரிக்கை நடவடிக்கையினால் கடந்த 2022ஆம் ஆண்டு எந்தவிதமான மின் தடைப் பிரச்சினைகளும் ஏற்படவில்லை. அதை முற்றிலுமாக சரி செய்துவிட்டோம்.

இவை போக 200 மின்கல பெட்டிகளை ( பில்லர் பாக்ஸ்) புதியதாக மாற்றித் தந்துள்ளோம். இந்த வேலைகள் அனைத்தும் கடந்த ஒன்றரை ஆண்டுகளில் நடைபெற்றுள்ளன. 2021இல் பெய்த மழையின்போது அதிக இடங்களில் இந்தத் தொகுதியில் வெள்ளநீர் தேங்கி நின்றது. அதனால் மின்கல பெட்டிகள் வெள்ளத்தில் மிதந்தன. இதனால் மின்வெட்டும் ஏற்பட்டது.

உயர்த்தி நடப்பட்ட 300 மின்கல பெட்டிகள்

உயர்த்தி நடப்பட்ட 300 மின்கல பெட்டிகள்

இந்த வெள்ளத்தின் போது வெள்ளநீர் புகுந்த பெட்டிகளைக் கணக்கிட்டு வைத்திருந்தோம். அப்படி பட்டியல் செய்யப்பட்ட ஏறக்குறைய 300 மின்கல பெட்டிகளைக் குறைந்தது ஒரு மீட்டர் அளவுக்குத் தரைக்கு மேலாக உயர்த்தி அமைத்துள்ளோம்.

இதன் பலனாகக் கடந்த 2022 மழையின் போது எந்தப் பகுதியிலும் ஒரு நாள் கூட மின்வெட்டே ஏற்படவில்லை. அந்தளவுக்குச் சிறப்பாகச் செயலாற்றி இருக்கிறோம்.

ஆக, இந்த ஆட்சிக்காலத்தில் இந்தத் தொகுதியை மின் சேவையில் தன்னிறைவு பெற்ற தொகுதியாக மாற்றியமைத்துள்ளோம். அதற்கு முழு உறுதுணையாக முதல்வர் ஸ்டாலின் இருந்துள்ளார். எல்லா திட்டப் பணிகளுக்கும் பின்பாக அமைச்சர் செந்தில் பாலாஜியின் தீவிர உழைப்பு இருக்கின்றது. சட்டமன்ற உறுப்பினர் ஏ. எம். வி. பிரபாகர் ராஜா எந்நேரமும் களத்தில் எங்கள் கூடவே நின்றிருக்கிறார். முழுமையாக இப்பணிகளின் பின்புலமாக இருந்துள்ளார்" என்கிறார்.

பொதுவாக திமுக ஆட்சியில் அறிமுகம் செய்யப்பட்ட மின்னகம் என்ற சேவை மக்களின் புகார்களைப் பெரிய அளவில் நிறைவேற்றித் தந்துள்ளது. 9498794987 என்ற எண்ணில் பெறப்படும் புகார்களைக் களைய 24X7 மணிநேரமும் மின் ஊழியர்கள் வேலை பார்த்து வருகிறார்கள். சுருங்கச் சொன்னால், மின்துறை என்றாலே ஆமை நடை என்ற பழைய நடைமுறை முற்றிலுமாக துடைத்தெறியப்பட்டுள்ளது.

இதுவரை 250 பழைய வடிவிலான மின்மாற்றிகளை அகற்றிவிட்டு நவீனமான ஆர்.எம்.யு ஆக மாற்றியுள்ளனர். இதனால் அடிக்கடி ஏற்படும் மின் கசிவு தடுக்கப்பட்டுள்ளது. பறவைகளால் நேரும் விபத்துகள் ஒழிக்கப்பட்டுள்ளன. அதேபோல் மரங்கள் உடைந்து விழுவதால் நிகழும் மின்வெட்டுகள் இல்லாத அளவுக்கு நிலைமை சீராகியுள்ளது.

இந்த அனைத்து மாற்றங்களும் மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் நேரடி விசிட்-க்கு பிறகும், அவரது கள ஆய்வில் எடுக்கப்பட்ட தரவுகள் அடிப்படையிலும் தான் நடைபெற்றுள்ளன.

மின்வெட்டு இல்லாத எம்.ஜி.ஆர் நகர்:

மின்வெட்டு இல்லாத எம்.ஜி.ஆர் நகர்:

சிவலிங்கபுரம், விஜயராகவபுரம் ஆகிய பகுதிகளில் நுகர்வோர் எண்ணிக்கை அதிகம். ஆகவே மின் அழுத்தம் அதிகமாக இருந்து வந்தது. தற்போது நவீன உபகரணங்களாக அவற்றை மாற்றி அமைத்ததன் மூலம் இந்தப் பிரச்சினைகள் அனைத்தும் சரிசெய்யப்பட்டுவிட்டன.

அதேபோல் இந்தப் பகுதியில் மின் துறையில் பணியாற்றி வரும் பானுப்ரியா சில தகவல்களைப் பகிர்ந்துகொண்டுள்ளார். அவர் இந்தப் பகுதி மக்களின் கோரிக்கையை ஏற்று மின் கம்பங்கள் வழியாக அமைக்கப்பட்டிருந்த மின் பாதையைத் தரைக்கு அடியில் செல்லக் கூடியதாக மாற்றி வழங்கி இருக்கிறோம்.

ஆகவே விபத்துகள் பரவலாக வெகுவாக குறைந்துள்ளன என்கிறார். இவரது மேற்பார்வையில் கீழ் மட்டுமே 19 ஆயிரம் நுகர்வோர் உள்ளனர்.

எம்.ஜி.ஆர் நகர் மார்கெட் பகுதியில் ஆட்டோக்களுக்கு பெயிட் அடிக்கும் வேலை பார்த்துவருகிறார் காளிதாஸ். இவர் இந்த ஒன்றரை ஆண்டுகளாக மின் தடை மட்டும் அல்ல, இதுவரை மின் வெட்டு பிரச்சினைகூட வரவே இல்லை என்கிறார்.

அதேபோல கோழிக்கறிக் கடை நடத்திவருகிறார் ராமன். இதே பகுதியில் கடந்த பத்து வருடங்களாக வசிக்கிறார். ஏறக்குறைய இவரது தெருவில் 500 வீடுகள் உள்ளன. இதுவரை மின்வெட்டு பிரச்சினை வந்ததில்லை என்கிறார் இவர்.

இவரைப் போலவே இந்தப் பகுதிவாசிகள் பலரும் அத்தனை மாற்றங்களுக்கும் முழு முதற் காரணமான முதல்வர் ஸ்டாலினுக்கும் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறார்கள்.

3 அடி உயர்ந்த 150 மின் பில்லர்கள்:

3 அடி உயர்ந்த 150 மின் பில்லர்கள்:

இந்த மக்களைப் போலவே சாலிகிராமத்தில் உள்ள மக்களும் முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கின்றனர். காரணம், இந்தப் பெருமழையில் ஒருநாள் கூட மின்வெட்டு இல்லையாம். ஒருநாள் என்ன? ஒரு நிமிடம் கூட இல்லை என்கிறார்கள்.

ஏறக்குறைய இந்தப் பகுதியில் 150 மின் பில்லர்கள் தரையிலிருந்து 3 அடிக்கும் மேல் உயர்த்தி அமைக்கப்பட்டுள்ளன. அதன் பலனாகத்தான் மின்வெட்டு இல்லாத சாலிகிராமமாக இது மாறி இருக்கிறது.

"இந்த திராவிட மாடல் ஆட்சியில் பலதுறைகள் முன்னேறி உள்ளது. அதில் மாபெரும் முன்னேற்றத்தை எட்டி உள்ள துறையாக மின்துறை மாறி இருக்கிறது. மின்வெட்டே இல்லாத தமிழகத்தை முதல்வர் ஸ்டாலின் உருவாக்கி வருகிறார்.

ஒரு காலத்தில் இந்தத்துறை பின் தங்கிக் கிடந்தது. பலமணிநேரம் மின்வெட்டால் மக்கள் அவதிப்பட்டு வந்தனர். என் தொகுதியில் பல நாட்கள் மின் தடை நிலவி இருக்கிறது. ஆனால், இன்றைக்கு ஒரு நிமிடம் கூட சேவை கிடைக்காமல் ஒரு குடும்பம் சிரமப்பட்டது எனச் சொல்லவே முடியாது. அந்தளவுக்கு இந்த மின் துறையை நவீனமயமாக மாற்றி இருக்கிறார் முதல்வர் ஸ்டாலின்" என்கிறார் சட்டமன்ற உறுப்பினர் ஏ. எம். வி. பிரபாகர் ராஜா.

24 மணிநேரத்தில் மாபெரும் மாற்றம்:

24 மணிநேரத்தில் மாபெரும் மாற்றம்:

குறிப்பாகச் சொன்னால், சாலிகிராமத்தில் ராமராவ் தெருவிலிருந்து ஒரு புகார் வந்தது. கடந்த ஆட்சிக்காலத்தில் உயர்மின் அழுத்தக் கம்பிகளில் சிக்கி சில மனித உயிர்கள் பலியாகி உள்ளன என்றனர். அதை உடனடியாக செந்தில் பாலாஜியின் கவனத்திற்குக் கொண்டு சென்றேன்.

சுமார் 24 மணிநேரத்தில் அந்தப் பகுதியில் மின் கம்பம் வழியே சென்ற வழித்தடத்தைப் பூமிக்கு அடியில் செல்லக் கூடிய வழித்தடமாக மாற்றிக் கொடுத்துள்ளோம். இந்த ஒரு சான்றே போதும் இந்த ஆட்சியின் வேகத்தை எடுத்துச் சொல்ல" என்கிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+