தமிழகத்தில் பரவும் காய்ச்சல்..1-9 மாணவர்களுக்கு தேர்வுகள் ரத்தாகுமா?..அமைச்சர் மகேஷ் சொன்ன தகவல்!
தமிழ்நாட்டில் கோடை வெப்பம் சுட்டெரித்து வரும் நிலையில் பள்ளி இறுதித்தேர்வுகளை முன்கூட்டியே நடத்தும் திட்டம் எதுவுமில்லை என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியுள்ளார்.
சென்னை: தமிழகத்தில் 9ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு முன்கூட்டியே இறுதி தேர்வை நடத்தி முடிக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியான நிலையில் அப்படி ஒரு திட்டம் எதுவும் இல்லை என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியுள்ளார். திட்டமிட்ட நாட்களில் 1 முதல் 9ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு தேர்வுகள் நடைபெறும் என்றும் அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் கோடை காலம் முன்கூட்டியே தொடங்கி விட்டது. இன்புளுயன்சா என்3எச்2 வைரஸ் காய்ச்சலும் பரவி வருகிறது. ஆயிரக்கணக்கானோர் காய்ச்சலுக்கு பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் ஓமிக்ரான் வைரஸ் பரவலும் அதிகரித்து வருகிறது. காய்ச்சலும் பரவி வருவதால் பொது இடங்களில் நடமாடுபவர்கள் முக கவசம் அணிவது அவசியம் என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் கூறியுள்ளார்.

நாட்டின் பல பகுதிகளில் பகல் நேரத்தில் அனல் காற்று வீசுகிறது. வாகனம் ஓட்டுவது சவாலாக உள்ளது. தமிழ்நாட்டில் அக்னி நட்சத்திரம் தொடங்குவதற்கு முன்பே கடுமையான வெயில் நிலவுகிறது. வரும் நாட்களில் வெப்ப நிலை மேலும் அதிகரிக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தமிழ்நாட்டில் ஈரோடு, சேலம், நாமக்கல் மாவட்டங்களில் 100 டிகிரியைத் தாண்டி வெப்ப நிலை பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக நேற்று ஈரோட்டில் 100.7 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது. சேலத்தில் 100.5, நாமக்கல்லில் 100.4 என்ற அளவில் வெப்பம் பதிவாகியுள்ளது.
இந்த நிலையில் தற்போது பிளஸ் 2, பிளஸ் 1 மாணவர்களுக்கு பொது தேர்வுகள் தொடங்கி விட்டன. பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு விரைவில் பொதுத்தேர்வுகள் நடைபெற உள்ளன. 1 முதல் 9ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு ஏப்ரல் மாத இறுதியில் பொதுத்தேர்வுகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் வைரஸ் காய்ச்சல் பரவல், கோடை வெப்பத்தை கருத்தில் கொண்டு முன்கூட்டியே தேர்வுகளை முடிக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியானது. ஆனால் அப்படி ஒரு திட்டம் எதுவும் இல்லை என்று அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியுள்ளார். 1முதல் 9ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு ஆல்பாஸ் போடும் திட்டம் எதுவும் இல்லை என்றும் இறுதித் தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும் என்றும் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியுள்ளார்.
புதுச்சேரி மாநிலத்தில் வைரஸ் காய்ச்சல் பரவல் காரணமாக 1 முதல் 8 வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு வரும் 16ம் தேதி முதல் 26ம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. வைரஸ் காய்ச்சல் பரவலைத் தடுக்கும் நடவடிக்கையாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது என அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார். புதுச்சேரி போல தமிழ்நாட்டிலும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படுமா என்று செய்தியாளர்கள் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஷிடம் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த அமைச்சர், தமிழ்நாட்டில் விடுமுறை விட வேண்டிய அவசியம் ஏற்படவில்லை என்றும் தெரிவித்தார்.
-
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ












Click it and Unblock the Notifications