மெரினாவில் 5 பேர் பலிக்கு உண்மையான காரணம் என்ன? உள்ளுறுப்புகள் விஸ்ரா ஆய்வுக்கு அனுப்பிவைப்பு!
சென்னை: சென்னை மெரினா கடற்கரையில் நடந்த விமான சாகச நிகழ்வை பார்க்க வந்து உயிரிழந்த 5 பேரின் உடலில் மேற்கொண்ட உடற்கூராய்வில் உயிரிழப்புக்கான முதற்கட்ட காரணம் தெரியவந்துள்ளது. அதைத்தொடர்ந்து, அவர்களின் இறப்புக்கான துல்லியமான காரணத்தை கண்டறிய, சாம்பிள்கள் 'விஸ்ரா' ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளார்.
சென்னை மெரினா கடற்கரையில், விமானப்படை தொடங்கப்பட்டு 92வது ஆண்டு நிறைவை முன்னிட்டு, இந்திய விமானப்படை சார்பாக வான் சாகச நிகழ்ச்சி நேற்று முன்தினம் (அக்டோபர் 6) நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சி காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை நடந்தது. இதைக் காண 10 லட்சத்திற்கும் மேற்பட்டோர் கூடினர். இதனால் சென்னை முழுக்க கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

கடும் வெயிலால் பாதிப்பு: அதே நேரத்தில் சென்னையில் காலை முதலே வெப்பநிலை அதிக அளவில் இருந்ததால், விமான சாகசங்களை காண மெரினா கடற்கரைக்கு வந்த மக்கள் வெயிலின் தாக்கத்தால் கடும் அவதிக்கு உள்ளாகினர். கடும் வெப்பத்தாலும், கூட்ட நெரிசலாலும் நூற்றுக்கும் மேற்பட்ட நபர்கள் நீர்ச்சத்து குறைபாடு ஏற்பட்டு ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை, ஓமந்தூரார் மருத்துவமனை, ராயப்பேட்டை அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றனர்.
5 பேர் பலி: மெரினா கடற்கரைக்கு விமான சாகச நிகழ்ச்சியை காண வந்த சென்னை கொருக்குப்பேட்டை பகுதியைச் சேர்ந்த ஜான் (56) பெருங்களத்தூர் பகுதியை சேர்ந்த சீனிவாசன் (48), சென்னை மடுவங்கவரை பகுதியைச் சேர்ந்த தினேஷ் (41), செங்கல்பட்டு மாவட்டத்தை சேர்ந்த மணி (59), திருவொற்றியூர் பகுதி சேர்ந்த கார்த்திகேயன் (34) ஆகிய 5 பேர் உயிரிழந்தனர்.
சென்னை மெரினாவில் நடைபெற்ற விமான வான்வழி சாகச நிகழ்ச்சியை காண வந்த லட்சக்கணக்கான நபர்களில் 5 பேர் கடும் வெப்பத்தால் நீர்ச்சத்து குறைந்து உடல்நலம் பாதித்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. அரசு உரிய ஏற்பாடுகளைச் செய்யாததே உயிர் பலிக்கு காரணம் என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின.
இது குறித்து விளக்கம் அளித்த தமிழ்நாடு அரசு கூட்ட நெரிசலால் யாரும் உயிரிழக்கவில்லை எனவும் கடும் வெப்பத்தினால் நீர் சத்து குறைந்து மயக்கம் அடைந்து உயிரிழந்து இருகின்றனர் எனவும் தெரிவித்தது. இதையடுத்து உயிரிழந்த நபர்களின் உடல்கள் அரசு மருத்துவமனையில் உடற்கூறு ஆய்வு செய்யப்பட்டு குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டன.
போலீஸ் விசாரணை: விமான சாகச நிகழ்ச்சியை பார்க்க வந்த 5 பேர் உயிரிழந்தது குறித்து காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. அண்ணா சதுக்கம் காவல்நிலையம், திருவல்லிக்கேணி, மயிலாப்பூர், மெரினா காவல் நிலையங்களில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. 5 பேர் உயிரிழப்பு குறித்து இயற்கைக்கு மாறான மரணம் என்ற பிரிவின் கீழ் தனித்தனியாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு, விசாரணை நடைபெற்று வருகிறது.
உயிரிழப்பு ஏற்பட்டது எதனால்?: இந்த நிலையில் உடற்கூராய்வில் உயிரிழப்புக்கான முதற்கட்ட காரணம் தெரியவந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். சீனிவாசனின் இதயத்தில் அடைப்புகள் இருந்ததால் அவர் உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது. ஜான் என்பவர் குறை ரத்த அழுத்தம் காரணமாக மயக்கம் ஏற்பட்டு பின்னர் உயிரிழந்ததாகவும், தினேஷ்குமார், மணி ஆகியோர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்ததாகவும் உடற்கூராய்வில் தெரியவந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
விஸ்ரா ஆய்வு: மேலும், ஐந்து பேரும் உயிரிழந்ததற்கான துல்லியமான காரணத்தை கண்டறிய ஐந்து நபர்களின் உடல் உள்ளுறுப்பு சாம்பிள்கள் தடயவியல் துறையின் "விஸ்ரா" ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளன. "விஸ்ரா" (Viscera) ஆய்வு என்பது உடல் உள்ளுறுப்புகளின் திசுக்களை ஆய்வு செய்து இறப்புக்கான காரணத்தை கண்டறியும் வழிமுறை. இந்த ஆய்வின் முடிவில் பிரேத பரிசோதனையில் தெரியவந்த விஷயங்கள் காரணமாக உயிரிழப்பு ஏற்பட்டதா? அல்லது வேறு ஏதேனும் காரணங்கள் உள்ளதா? என்ற விவரம் தெரியவரும்.
-
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
சேலத்தில் விசிக பிரமுகருக்கு 20 பவுன் தங்க மாலை.. மனைவியான பெண் போலீஸ் ஏட்டு சர்ப்ரைஸ் -
திண்டுக்கல்லில் ஒரே நாளில் சிறப்பு எஸ்ஐ, பெண் ஏட்டு சஸ்பெண்ட்.. காவலர் அதிரடியாக பணி நீக்கம் -
Kerala: உடலில் 91 காயங்கள்.. கண்ணை மறைத்த கள்ளக்காதல்.. 1½வயது குழந்தையை துடிக்க துடிக்க கொன்ற கொடூரம்! அதிர்ந்த கேரளா -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம்












Click it and Unblock the Notifications