Vijay: கொந்தளித்த விஷால்.. தளபதிக்காக குரல் கொடுக்கும் புரட்சி தளபதி.. இதெல்லாம் ரொம்ப தப்புங்க!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக அரசியல் தற்போது கனவிலும் நினைத்திடாத ஒரு விஷயம் நடப்பதாக தகவல்கள் பரவி வருகிறது. திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு முக்கியக் கட்சிகள் இணைந்து கூட்டணி ஆட்சி அமைக்கலாம் என்ற தகவல்கள் பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளன.

இந்தச் சூழலில், நடிகர் விஷால் இந்தக் கூட்டணி யோசனைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

TVK Vijay Politics Vishal opposes DMK ADMK alliance Vishal statement on Tamil Nadu politics DMK ADMK coalition rumours TVK single largest party Vijay Tamilaga Vettri Kazhagam 108 seats Tamil Nadu government formation crisis Vishal supports Vijay TVK common people disaster alliance Tamil Nadu assembly election results Congress support to TVK Vishal social media post Tamil Nadu political debate Thalapathy Vijay party challenge DMK ADMK unexpected alliance Vishal voice for TVK 108

திமுக - அதிமுக கூட்டணி

சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு தமிழகத்தில் ஆட்சி அமைப்பதில் ஏற்பட்டுள்ள சிக்கலைத் தீர்க்கும் வகையில் திமுக மற்றும் அதிமுக இணைந்து புதிய அரசு உருவாக்கலாம் என்ற கருத்து காட்டுத்தீ போல பரவி வருகிறது.

இது தமிழக அரசியலின் நீண்டகால எதிரிகளாகக் கருதப்படும் இரு கட்சிகளின் இணைப்பு என்பதால், பலருக்கும் இது எதிர்பாராத திருப்பமாகவே உள்ளது. இத்தகைய கூட்டணி உருவானால், அடுத்த அரசாங்கம் எப்படி இருக்கும் என்பது குறித்து பொதுமக்கள் மத்தியில் பல கேள்விகள் எழுந்துள்ளன.

கொந்தளித்த விஷால்..

நடிகர் விஷால் தனது சமூக ஊடகப் பதிவில் இந்த வதந்திக்கு கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்துள்ளார். "தவெக அல்லாத வேறு எந்தத் தரப்பு, குறிப்பாக திமுக-அதிமுக கூட்டணி ஆட்சிக்கு வந்தால், அது சாமானிய மக்களுக்கு பேரழிவாகவும் விபரீதமாகவும் அமையும்" என்று அவர் தெரிவித்தார்.

ஒரு பொதுமக்களாகவும் வாக்காளராகவும் தான் காணும் இந்தச் சூழல் எவருக்கும் ஏற்புடையதல்ல என்றும் விஷால் தெரிவித்தார். விஷாலின் இந்தக் கருத்து சினிமா துறையினர் மத்தியில் பிரபலமடைந்து வருகிறது. இதனால் ஆட்சி அமைப்பதில் இருக்கும் பிரச்சனைக்கு எதிராக சினிமா துறையில் இருந்தும் குரல் எழுந்து வர துவங்கியுள்ளது.

வாக்கு அளிக்கும் நாளிலேயே பலர் விஜய்-யின் அரசியல் யூனிபார்ம் ஆக விளக்கும் வெள்ளை சட்டை காக்கி பேண்ட்-ஐ அணிந்து பல நடிகர்கள், நடிகைகள் வாக்களிக்க வந்து விஜய்-க்கு மறைமுகமாக ஆதரவு அளித்தனர்.

சமூக வலைதளங்களில் பெரும் விவாதம்

விஷாலின் பதிவு வெளியான சில மணி நேரங்களுக்குள் அரசியல் மற்றும் சமூக வலைதளங்களில் கடும் விவாதம் உருவானது. பல தரப்பினரும் இந்தக் கருத்தை ஆதரித்தும் எதிர்த்தும் தங்கள் கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர். தமிழக அரசியலின் எதிர்காலம் எப்படி இருக்கும் என்பது குறித்து இப்போது பொதுமக்கள் மத்தியில் பல கேள்விகள் எழுந்துள்ளன.

தவெகவின் தேர்தல் வெற்றி மற்றும் ஆட்சி சவால்

தமிழக சட்டமன்றத் தேர்தலில் நடிகர் விஜய்யின் (Vijay) தமிழக வெற்றிக் கழகம் (தவெக) 108 இடங்களை கைப்பற்றியுள்ளது. இதனால் தவெக தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. காங்கிரஸ் கட்சியின் 5 எம்எல்ஏக்கள் தவெகவுக்கு ஆதரவு அளித்துள்ளனர்.

இருப்பினும், ஆட்சி அமைக்கத் தேவையான 118 இடங்கள் இன்னும் கிடைக்கவில்லை. எனவே, முழுமையான பெரும்பான்மை இல்லாத நிலையில் தவெக ஆட்சி அமைப்பதில் தொடர்ந்து சிக்கல் நிலவி வருகிறது. 112 இடங்கள் ஆட்சி அமைக்க போதுமானது இல்லை என ஆளுநர் கூறிய காரணத்தால் முதல்வராகும் கனவு விஜய்-க்கு தள்ளிப்போனது.

இந்தச் சூழலில் தான் திமுக - அதிமுக கூட்டணி வதந்தி எழுந்துள்ளது. தவெக தனிப்பெரும் கட்சியாக இருந்தும் ஆட்சி அமைக்க முடியாத நிலையைச் சுட்டிக்காட்டி, மாற்று ஏற்பாடுகள் குறித்து அரசியல் பேச்சுகள் நடைபெறுவதாகத் தெரிகிறது. இந்த வளர்ச்சிகள் தமிழக அரசியலை அடுத்த கட்டத்துக்கு நகர்த்தும் வகையில் அமைந்துள்ளன. பொதுமக்கள் இந்த அரசியல் மாற்றங்களை உன்னிப்பாகக் கவனித்து வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+