இருட்டா இருக்கு.. சண்டை.. money money.. சீரியல் நடிகை சித்ராவின் ஆவி பேசியதா? டிரென்டாகும் வீடியோ!
சென்னை: தான் இருக்கும் இடம் ரொம்ப இருட்டா இருக்கு என விஜே சித்ராவின் ஆவி பேசியதாக ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.
விஜே சித்ரா கடந்த 2020 ஆம் ஆண்டு பூந்தமல்லியில் உள்ள சொகுசு ஹோட்டலில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதற்கு காரணம் என்ன என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இவரது மரணம் தொடர்பாக அவரது கணவர் ஹேமந்த் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளியே உள்ளார். அவர் போதை மாஃபியா கும்பலால்தான் சித்ரா உயிரிழந்ததாகவும் தன்னுடைய உயிருக்கும் ஆபத்து இருப்பதாகவும் போலீஸில் புகார் கொடுத்தார்.

ஹேமந்த்
ஹேமந்த் பல பெண்களுடன் உல்லாசமாக இருப்பவர் என்றும் சித்ராவையே உடல் தேவைக்காவும் பணத்தேவைக்காகவும்தான் அவர் பயன்படுத்திக் கொண்டார் என்றும் பல்வேறு தகவல்கள் வெளியாகின. அது போல் விஜே சித்ராவுக்கு போதை பழக்கம், கஞ்சா பழக்கம் இருப்பதாக அவரது தோழி ரேகா நாயர் தெரிவித்திருந்தார்.

புதிய விஷயம்
இந்த நிலையில் புதிய விஷயமாக சித்ராவின் ஆவி பேசியதாக வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. ஆவிகளுடன் பேசும் கதிர் தனது kathir vlogs எனும் யூடியூப் சேனலில் ஒரு வீடியோவை பகிர்ந்துள்ளார். அதில் மறைந்த நடிகை நல்லெண்ணெய் சித்ராவின் ஆவியுடன் பேசுவதற்காக அவரை அழைக்கிறார்.

பீப் ஒலி
அந்த வீடியோவில் அவ்வப்போது பீப் ஒலி கேட்கிறது. வீடியோவில் நடுவில் அந்த ஆவி என்ன சொல்கிறது என்பதை எழுத்துகளாக போட்டுள்ளார். இந்த நிலையில்தான் நல்லெண்ணெய் சித்ராவிடம் ரசிகர்களுக்கு என்ன சொல்ல போறீங்க என கதிர் கேட்கிறார். அப்போது நடுவே விஜே சித்ரா வந்து பேசுகிறார்.

நிரூபிக்கப்பட்ட உண்மை
அந்த வீடியோவில் நிரூபிக்கப்பட்ட உண்மை இல்லை என கதிர் குறிப்பிட்டுள்ளார். அந்த வீடியோவில் போடப்பட்டுள்ள டெக்ஸ்டில் ஹாய், வெய்ட், சொல்லுங்க, ரொம்ப கஷ்டமா இருக்கு.. இருட்டா இருக்கு.. சண்டை சண்டை.. main problem money money.. நான் இருக்கிறேன், நான் யாருனு தெரியும் என போடப்பட்டுள்ளது.

விஜே சித்ரா பேச்சு
இதையடுத்து கதிர், நாம் நல்லெண்ணெய் சித்ராவை பேச அழைத்தால் விஜே சித்ரா இடையில் வந்து வந்து பேசுகிறார் என்கிறார். உடனே எஸ் நான் தான் என ஒரு டெக்ஸ்ட் வருகிறது. கதிர் தனது வீடியோவை முடிக்கும் போது காத்திருக்கிறேன் பேசுங்க என கூறும் போது ரொம்ப நன்றி என்ற டெக்ஸ்ட் வருகிறது. அத்துடன் இந்த வீடியோவும் முடிகிறது. வீடியோ தொடங்கும்போதே அந்த வீடியோ நிரூபிக்கப்பட்டது இல்லை என கதிர் கூறியுள்ளதால் இது நம்பலாமா நம்பக் கூடாதா என்பதை ஆராய வேண்டிய அவசியம் இல்லை.
-
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
எங்கிட்ட எப்படி ஆதரவு கேட்கலாம்? கவுண்டம்பாளையம் அதிமுக வேட்பாளரிடம் சொன்ன வார்த்தை.. பின்னணி -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
அதிமுக, தமிழக வெற்றிக் கழகம்.. மொத்தமாக கேம் ஓவர்.. அடித்து சொல்லும் 3 பெரிய கருத்து கணிப்புகள்!












Click it and Unblock the Notifications