வரதட்சணை கொடுமையா - சித்ரா கணவரிடம் ஆர்டிஓ விசாரணை - சக நடிகர்களையும் விசாரிக்க முடிவு
சித்ராவை அவரது கணவர் வரதட்சணை கொடுமை செய்து தற்கொலைக்கு தூண்டினாரா என்பது பற்றி ஆர்டிஓ விசாரணை மேற்கொண்டுள்ளார்.
சென்னை: சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை வழக்கில் அவரது கணவர் ஹேமந்திடம் ஆர்டிஓ திவ்யஸ்ரீ இன்று விசாரணை மேற்கொண்டுள்ளார். வரதட்சணை கொடுமை நடந்துள்ளதா என்பது பற்றி விசாரணை நடத்தும் ஆர்டிஓ திவ்யஸ்ரீ, டிவி சீரியலில் சித்ரா உடன் நடித்த சக நடிகை, நடிகர்களிடமும் விசாரணை நடத்தப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.
சித்ரா மரணமடைந்து ஓரு வாரம் கடந்த நிலையிலும் அதிர்வலைகள் ஓயவில்லை. அவரைப்பற்றி செய்திகள், புகைப்படங்கள் அதிகம் பகிரப்பட்டும் எழுதப்பட்டும் வருகின்றன. சித்ராவும், ஹேமந்தும் பதிவு திருமணம் செய்து கொண்டுள்ளனர். திருமணம் நடந்து சில மாதங்களே முடிந்துள்ள நிலையில் சித்ராவின் மரணம் நிகழ்ந்துள்ளதால், வரதட்சணை கொடுமை நடந்துள்ளதா என்பது பற்றி ஸ்ரீபெரும்புதூர் ஆர்டிஓ. திவ்யஸ்ரீ விசாரணை நடத்தி வருகிறார்.
முதற்கட்டமாக, நடிகை சித்ராவின் பெற்றோரிடமும், அதனைத் தொடர்ந்து மாமனார், மாமியாரிடம் விசாரணையை நடத்தியுள்ள ஆர்டிஓ திவ்யஸ்ரீ, அடுத்த கட்டமாக சித்ராவின் கணவரிடம் விசாரணை நடத்துகிறார். இதற்காக பொன்னேரி சிறையில் இருந்து அழைத்து வரப்பட்டுள்ளார்.

கொடுமைப்படுத்திய ஹேமந்த்
தோழியின் பிறந்தநாள் விழாவுக்கு சென்றபோதுதான் சித்ராவுக்கும், ஹேமந்துக்கும் காதல் மலர்ந்து அதுவே நிச்சயம் வரை சென்று பதிவு திருமணத்தில் முடிந்துள்ளது. சீரியல் நடிகை என்று தெரிந்துதான் திருமணம் செய்து கொண்டார் ஹேமந்த். தினசரியும் சந்தேகப்பட்டு கொடுமைப்படுத்தி தற்கொலைக்கு தள்ளியதாகவும் காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.

பதிவு திருமணம்
ஹேமந்த் ஏற்கனவே ஒரு பெண்ணை காதலித்து இருவரும் சுமூகமாக பிரிந்து விட்டனர் என்றும் அதன்பிறகே சித்ராவை காதல் வலையில் விழ வைத்து திருமணம் செய்து கொண்டதாகவும் காவல்துறையினர் விசாரணையில் தெரியவந்துள்ளது. வலுவான ஆதாரங்களின் அடிப்படையில் சித்ராவின் கணவரை கைது செய்த காவல்துறையினர் பொன்னேரி சிறையில் அடைத்தனர்.

ஹேமந்திடம் விசாரணை
காவல்துறையினர் கடந்த 6 நாட்களாக நடத்திய விசாரணையில் பல தகவல்களை தெரிவித்துள்ளாராம் ஹேமந்த். இந்த நிலையில் இன்று ஹேமந்திடம் ஆர்டிஓ விசாரணை நடத்துகிறார். இதற்காக பொன்னேரி சிறையில் இருந்த ஹேமந்த் ஸ்ரீபெரும்புதூர் ஆர்டிஓ அலுவலகத்துக்கு அழைத்து வரப்பட்டார். அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. விசாரணைக்குப் பிறகு ஹேமந்த் மீண்டும் பொன்னேரி கிளைச் சிறையில் அடைக்கப்படுவார்.

நீடிக்கும் விசாரணை
சீரியலில் நடித்து சம்பாதித்த பணத்தில் வீடு, கார் வாங்கியிருக்கிறார் சித்ரா. திடீரென திருமணம் செய்து கொண்ட சித்ராவை அவரது கணவரும் குடும்பத்தினரும் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தினார்களா என்ற கோணத்தில் ஆர்டிஓ விசாரணை நடைபெற்று வருகிறது. இதனைத் தொடர்ந்து சித்ரா உடன் டிவி சீரியரில் நடித்த சக நடிகை, நடிகையர்களிடமும் ஆர்டிஓ விசாரணை நடத்தப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications