யார்னு தெரியுதா.. இன்றுதான் கடைசி நாள்.. கடைசி காட்சி.. விடைபெறும் முல்லை.. வைரலாகும் போட்டோ
சித்ராவின் முதல், கடைசி போட்டோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது
சென்னை: இன்னைக்குதான் சித்ரா நடித்த கடைசி சீன் சீரியலில் ஒளிபரப்பாக உள்ளது.. அதனால், அவரது ரசிகர்கள் இன்று நாள் முழுவதும் சித்ராவின் போட்டோக்களை சோஷியல் மீடியாவில் வைரலாக்கி வருகிறார்கள்.
சினிமா பிரபலம் அளவுக்கு சீரியலில் பிரபலமாகி இருக்கும் சித்ரா, மிகப்பெரிய தாக்கத்தை ரசிகர் மத்தியில் ஏற்படுத்தி உள்ளார்.

இதற்கு காரணம் வெறும் நடிப்பு என்று மட்டும் சொல்லிவிட முடியாது.. காம்பியரிங், நடனம், மாடலிங் என மல்ட்டி திறமைகளை கொண்டவர் சித்ரா. உழைப்பின் மேல் உயரிய மதிப்பை கொண்டவர்.. அதில் தன்னை நிரூபித்தும் காட்டியவர்.. அதனாலேயே தினம் தினம் சித்ராவின் பெயர் மீடியாவில் தொடர்ந்து அடிபட்டு வருகிறது.
இன்று காலையில் இருந்து சித்ராவின் ஒரு வீடியோவும், போட்டோவும் இணையத்தில் வைரலாகி வருகிறது.. அதுதான் சீரியலில் அவர் கடைசியாக நடித்த காட்சியாம்.. இதுவரை சித்ரா நடித்த காட்சிகள் அனைத்தும் ஏற்கனவே எடுத்து வைக்கப்பட்ட நிலையில், அது இன்றுடன் முடிவடைகிறது.
சித்ராவின் பிறந்தநாளை கொண்டாடுவதுதான் கடைசியாக எடுக்கப்பட்ட காட்சிகளாம். அதுதான், இந்த வாரம் முழுவதும் ஒளிபரபாக்கியும் வருகிறது.. அதுதான் தற்போது முடிவடைய உள்ளது.. இந்த ஷூட்டிங் நடக்கும்போதுகூட, பிரேக் நேரத்தில் வழக்கம்போல் சகநடிகர்களுடன் சேர்ந்து போட்டோ, வீடியோ எடுத்தபடியே இருந்துள்ளார்.
அதை சக நடிகர்களும் தங்கள் ட்வீட், இன்ஸ்ட்டாகிராம் பக்கத்தில் கண்ணீருடன் பதிவிட்டு வருகின்றனர்.. அதனை சித்ராவின் ரசிகர்கள் ஷேர் செய்தும் வைரலாக்கியும் வருகிறார்கள். இதனுடன் ஒரு போட்டோவும் வைரலாகிறது.. அது பார்ப்பதற்கே வித்தியாசமாக உள்ளது.. சித்ரா முதன்முதலில் பாண்டியன் ஸ்டோர் சீரியலின் முதல் முதலாக எடுத்த போட்டோவாம்.
முதல் நாள் எடுத்ததையும், கடைசி எபிசோட் போட்டோவையும் ஒன்றாக சேர்த்து, "எவ்வளவு வித்தியாசம் பாருங்க எங்க சித்து-க்கு" என்று ஆச்சரியத்துடனும், பெருமிதத்துடனும் வைரலாக்கி வருகிறார்கள். அதிலும் சிரித்த முகத்துடன் சித்ரா காணப்பட்டாலும், இப்போது சற்று மெருகேறி காணப்படுகிறார்.. முகம் தெளிவாக, இன்னும் அழகாக உள்ளது!
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications