சசிகலா வேனில் உட்கார்ந்து பேசிட்டு இருக்கும்போதே.. "அந்த" அதிர்ச்சி சம்பவம்.. என்ன நடந்தது

சசிகலாவின் பெரியபாளையம் கூட்டத்தில் நிர்வாகிகளிடம் திருட்டு நடந்துள்ளது

Subscribe to Oneindia Tamil

சென்னை: வேனில் உட்கார்ந்து சசிகலா, உரையாற்றிக் கொண்டிருந்தபோதே, அந்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது..!

நேற்றைய தினம், திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி தொகுதிக்கு உட்பட்ட கன்னிகைப்பேர், பெரியபாளையம், ஊத்துக்கோட்டை பகுதிகளில் சசிகலா சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய சசிகலா திமுக அரசை கடுமையாக சாடி பேசினார்.. "ரேசன் கடைகளில் முறையாக அரிசி கொடுக்க வேண்டும்.. தேவையற்ற பொருட்களை வாங்க ஏழைகளை நிர்பந்திக்கக் கூடாது.

கடல்வழி

கடல்வழி

போதைப்பொருள் தமிழ்நாட்டில் போதைப்பொருள் நடமாட்டம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதையெல்லாம் கட்டுப்படுத்த தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுத்தே தீர வேண்டும்... கடல்வழியாகப் போதைப்பொருள் வருவதால் அதை கட்டுப்படுத்த முடியவில்லை என்று திமுக அமைச்சர் சொல்கிறார்.. தமிழ்நாட்டில் போதைப்பொருள் நுழையும் முன்பு அதை தடுக்க வேண்டுமே தவிர மற்றவர்களை குறை சொல்லிக் கொண்டு இருக்கக் கூடாது. போலீசார் இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

எஜமானர்கள்

எஜமானர்கள்

அதிமுக விவகாரம் ஓபிஎஸும், எடப்பாடியும் தனித்தனியாக பிரதமரை சந்தித்து உள்ளனர். இது அவர்களின் உட்கட்சி பிரச்சினை.. பிரச்சினைகள் எல்லாம் முடிந்த பிறகு அதிமுக கட்சித் தலைமை அலுவலகத்திற்கு நிச்சயமாகப் போவேன் .. ஓபிஎஸ், எடப்பாடி இருவரில் யார் பக்கம் என்பதை கழக தொண்டர்கள்தான் முடிவு எடுக்க வேண்டும். அவர்கள் யாரைச் சொல்கிறார்களோ அதுவே இறுதியானது.. மக்களே எஜமானர்கள்.. அவர்கள் சொல்வது தான் நடக்கும்" என்றார்.

 மர்மகும்பல்

மர்மகும்பல்

பெரியபாளையம் ஐஓபி வங்கி அருகே தான், இந்த நிகழ்ச்சி நடந்தது.. சசிகலா உரையாற்ற போகிறார் என்பதால், ஏராளமான கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் குவிந்துவிட்டனர்.. எனினும் சசிகலா வேனில் அமர்ந்தபடியேதான் பேசினார்.. சசிகலா பேசிக் கொண்டிருக்கும்போதே, அந்த கூட்ட நெரிசலை பயன்படுத்தி, ஒரு மர்மகும்பல் 10 பேரிடம் கைவரிசையை காட்டி விட்டது.. கைவரிசையை காட்டியது சொந்த கட்சிக்காரர்களிடமே.. சசிகலா பேசுவதை உன்னிப்பாக நிர்வாகிகள் கவனித்து கொண்டிருந்தபோது, பணத்தை அபேஸ் செய்துவிட்டது அந்த கும்பல்..

அபேஸ்

அபேஸ்

இதில் சிலரது செல்போனும் பறிபோனதாக சொல்கிறார்கள். ஒட்டுமொத்தமாக, கட்சி நிர்வாகிகள் 3 பேர் தலா ரூ.10 ஆயிரத்தை இழந்து உள்ளார்களாம்.. இதனால் அதிர்ச்சி அடைந்த நிர்வாகிகள், பெரியபாளையம் போலீசில் புகார் செய்யப்பட்டது... போலீசார் கூட்டம் நடைபெற்ற இடத்தில் உள்ள கண்காணிப்பு கேமிரா காட்சி பதிவுகளை வைத்து கொள்ளையர்களை தேடி வருகிறார்கள். சொந்த கட்சி கூட்டத்திலேயே நிர்வாகிகளிடம் ஆட்டைய போட்டது பெரிதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+