TN Election: 5 மாநில சட்டசபை தேர்தல்! நாளை வாக்கு எண்ணிக்கை! தமிழகத்தில் யார் ஆட்சி?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகம், புதுச்சேரி, கேரளா, அஸ்ஸாம் மற்றும் மேற்கு வங்கம் ஆகிய ஐந்து மாநில சட்டப்சபைத் தேர்தல்களில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி நாளை (மே 4, திங்கட்கிழமை) காலை 8 மணிக்குத் தொடங்குகிறது.

இந்தியாவின் அரசியல் திசையைத் தீர்மானிக்கப் போகும் இந்த முடிவுகளை அறிவிக்க இந்தியத் தேர்தல் ஆணையம் அனைத்து ஏற்பாடுகளையும் தயார் நிலையில் வைத்துள்ளது.

Vote Counting for Assembly Elections

தமிழகம்: 62 மையங்களில் பலத்த பாதுகாப்பு

தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை குறித்து மாநிலத் தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் வெளியிட்டுள்ள முக்கியச் தகவல்களை பார்க்கலாம்.

பிரம்மாண்ட ஏற்பாடு: தமிழகம் முழுவதும் 62 மையங்களில் வாக்குகள் எண்ணப்படுகின்றன. இதற்காக 3,324 மேஜைகள் தயார் நிலையில் உள்ளன.

பணியாளர்கள் குவிப்பு: வாக்கு எண்ணிக்கை பணியில் 10,545 அரசுப் பணியாளர்கள் ஈடுபடுகின்றனர். இவர்களுக்குத் துணையாக 4,624 நுண் பார்வையாளர்கள் பணியைக் கண்காணிக்க உள்ளனர்.

தபால் வாக்குகள்: முன்னெப்போதும் இல்லாத வகையில், தபால் வாக்குகளை எண்ணுவதற்காகவே தனியாக 240 அறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

வாக்கு எண்ணிக்கை நடைமுறை: முதலில் எது?

நாளை காலை 8:00 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கும் போது, முதலில் தபால் வாக்குகள் (Postal Ballots) எண்ணப்படும். ஒவ்வொரு 500 தபால் வாக்குகளுக்கும் ஒரு மேஜை வீதம் ஒதுக்கப்பட்டு, இந்தப் பணிக்காக மட்டும் 1,135 கூடுதல் உதவித் தேர்தல் நடத்தும் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் (EVM) உள்ள வாக்குகள் எண்ணப்படும்.

மூன்றடுக்கு பாதுகாப்பு வளையம்

வாக்கு எண்ணும் மையங்கள் ராணுவக் கட்டுப்பாட்டைப் போன்ற பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளன:

முதல் அடுக்கு: மையத்தைச் சுற்றி 100 மீட்டர் தூரம் வரை வெளியாட்கள் நுழைய தடை.

இரண்டாம் அடுக்கு: தகவல் தொடர்பு சாதனங்களுக்குக் கடும் கட்டுப்பாடு.

மூன்றாம் அடுக்கு: மின்னணு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகளுக்கு அருகே மத்திய ஆயுதக் காவல் படையினரின் 24 மணி நேரக் கண்காணிப்பு.

QR குறியீடு கட்டாயம்: தேர்தல் ஆணையம் வழங்கிய QR குறியீடு கொண்ட அடையாள அட்டை இல்லாத வேட்பாளர்கள் அல்லது முகவர்கள் மையத்திற்குள் நுழைய அனுமதி மறுக்கப்படும். செல்போன்கள் கொண்டு செல்லவும் முற்றிலுமாகத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

பிற மாநிலங்களின் நிலவரம்

புதுச்சேரி: 30 தொகுதிகளுக்கான முடிவுகளுக்காக யூனியன் பிரதேசம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

மேற்கு வங்கம்: 294 தொகுதிகளைக் கொண்ட இம்மாநிலத்தில் பல கட்டங்களாகத் தேர்தல் நடந்தது. வாக்குப் பதிவு இயந்திரங்கள் ஸ்ட்ராங் அறையில் வைக்கப்பட்டிருந்தன. ஃபால்டா தொகுதிக்குள்பட்ட சில வாக்குச் சாவடி மையங்களில் உள்ள வாக்குப் பதிவு இயந்திரங்கள் டேப் கொண்டு ஒட்டப்பட்டதாக புகார் எழுந்ததை அடுத்து ஃபால்டா சட்டசபைத் தொகுதியில் உள்ள அனைத்து வாக்குச்சாவடிகளிலும் மறுவாக்குப் பதிவு நடைபெறுகிறது. எனவே அந்த தொகுதியை தவிர மற்ற தொகுதிகளில் நாளை வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.

கேரளா , அஸ்ஸாம்: முறையே 140 மற்றும் 126 தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை ஏற்பாடுகளும் முழுமையடைந்துள்ளன.

முடிவுகளை உடனுக்குடன் அறிய..

தேர்தல் முடிவுகளின் அதிகாரப்பூர்வ நிலவரங்களை பொதுமக்கள் பின்வரும் முறைகளில் உடனுக்குடன் அறிந்து கொள்ளலாம்:

இணையதளம்: https://results.eci.gov.in/

செயலி: 'Voter Helpline' (வாக்காளர் உதவி எண்) மொபைல் ஆப். ECINET என்ற செயலியிலும் அறியலாம்.

நாளை காலை 10 மணி முதலே முன்னணி நிலவரங்கள் தெரியவரும் என்பதால், நாடு முழுவதும் அரசியல் களம் தற்போதே சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+