Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நான் ஏற்கனவே சொன்தை தான் விஜய் பேசியிருக்கிறார்.. கார்த்தி சிதம்பரம் சொல்வதை கேளுங்க

Subscribe to Oneindia Tamil

சென்னை: 10, 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ-மாணவிகளை நேற்று நடிகர் விஜய் சந்தித்து பாராட்டினார். மேலும் உதவித்தொகையும் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் நடிகர் விஜய் பேசிய சில கருத்துக்கள் தனது கருத்துடன் ஒத்துபோவதாக சிவகங்கை மக்களவை எம்.பி கார்த்தி சிதம்பரம் கூறியுள்ளார்.

தமிழ் திரையுலகின் உச்ச நட்சத்திரமான விஜய், சினிமாவை தாண்டி பொது விவகாரங்களிலும் அக்கறை காட்டி வருகிறார். தனது படத்தில் சில அரசியல் பஞ்ச் வைத்து பேசுவதோடு, ஊழல்கள் குறித்தும் பேசி அரசியல் வட்டாரத்திலும் கவனம் பெற்றுள்ளார். தனது மக்கள் இயக்கம் சார்பாக மாநிலம் முழுவதும் பல்வேறு நலத்திட்டங்களை அவ்வப்போது அவரது ரசிகர்கள் செய்து வருகின்றனர்.

Vote for Cash Vijay agrees with my opinion: Says Karthi Chidambaram MP

ரத்த தானம் முகாம், பசியால் வாடுவோருக்கு உணவு வழங்குதல் உள்ளிட்ட பணிகளை அவரது விஜய் மக்கள் இயக்கத்தினர் தீவிரமாக செய்து வருகின்றனர். இந்த நிலையில், 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் தொகுதி வாரியாக முதல் 3 மதிப்பெண்கள் எடுத்த மாண-மாணவிகளை சந்தித்து பாராட்டு தெரிவித்து கல்வி உதவி தொகை வழங்க நடிகர் விஜய் முடிவு செய்தார். இதற்கான ஏற்பாடுகளை மக்கள் இயக்க நிர்வாகிகள் செய்து வந்தனர்.

10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களை சந்தித்து பாராட்டு சான்றிதழ் மற்றும் ஊக்கப் பரிசு வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில் 12 மணி நேரத்திற்கும் நேலாக கலந்து கொண்ட அனைத்து மாணவ - மாணவிகளுக்கும் விஜய் தனது கைகளினால் பாராட்டு சான்றிதழையும் ஊக்கத்தொகையும் வழங்கி கவுரவித்தார். முன்னதாக நிகழ்ச்சியில் பேசிய விஜய் மாணவ மாணவிகளுக்கு பல அட்வைஸ்களையும் செய்தார்.

குறிப்பாக 'காடு இருந்தா எடுத்துப்பாங்க... ரூபாய் இருந்தா பிடுங்கிப்பாங்க... ஆனால் படிப்பை மட்டும் உன்கிட்ட இருந்து எடுத்துக்கவே முடியாது' என்று ஒரு படத்தில் 'டயலாக்' வரும். இது என்னை மிகவும் பாதித்த வரிகள் என்று அசுரன் படத்தின் வசனத்தை குறிப்பிட்டு கல்வியின் முக்கியத்தும் குறித்து பேசினார். ஓட்டுக்கு பணம் வாங்கக் கூடாது எனவும் ஒவ்வொரு மாணவ-மாணவியரும் தங்கள் பெற்றொரிடம் இனிமேல் காசு வாங்கிட்டு ஓட்டு போடாதீங்க... அப்படின்னு சொல்லி பாருங்கள். சும்மா... முயற்சி செய்து பாருங்கள். நீங்கள் முயற்சித்தால் அது கண்டிப்பாக நடக்கும்.

ஏனெனில் வரும் ஆண்டுகளில் நீங்கள் முதல் தலைமுறை வாக்காளர்களாக வரப்போகிறீர்கள். இதெல்லாம் எப்போது நடக்குமோ, அப்போதுதான் உங்கள் கல்வி முறையே முழுமை அடைவதாக எடுத்துக்கொள்ளலாம்" என்றார். மாணவ மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் விழாவில் விஜய் பேசிய இந்தக் கருத்துகள் அரசியல் ரீதியாகவும் கவனம் பெற்றுள்ளது. விஜயின் கருத்து குறித்த விவாதங்கள் அரசியல் வட்டாரத்திலும் கிளம்பாமல் இல்லை.

இந்த நிலையில், சிவகங்கை மக்களவை தொகுதி எம்.பி கார்த்தி சிதம்பரம் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது செய்தியாளர்கள் அவரிடம் விஜய் பேசியது குறித்து கேட்டனர். அதற்கு கார்த்தி சிதம்பரம் கூறியதாவது:- நடிகர் விஜய் அரசியலுக்கு வரப்போகிறாரா இல்லையா எனத் தெரியவில்லை. நல்ல அறிவுரைதான். பணம் வாங்கி ஓட்டு போடக்கூடாது என்று நான் சொல்லுகிறேன்.

என்னை பொறுத்தவரை கேஷ் ஃபார் வோட், காசு பணம் துட்டு மணி, மணி, சம்திங் சம்திங் என்பதுதான் தமிழக அரசியலையே தென்னக அரசியலையே உலுக்கிக் கொண்டு இருக்கிறது. அது இல்லாமல் ஒரு அரசியல் இருக்க வேண்டும் என்றுதான் நானும் சொல்லிக் கொண்டு வருகிறேன். அந்த கருத்தை விஜய் சொல்கிறார் என்றால் என்னுடைய கருத்துக்கு அவர் ஒத்துப் போகிறார் என்றுதான் அர்த்தம்" என்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+