தமிழக வாக்காளர் பட்டியல் ரெடி.. நாளை வெளியீடு.. தேர்தல் ஆணையம் அதிரடி அறிவிப்பு!
நாளை மாலை 4 மணிக்கு அனைத்து மாவட்ட தேர்தல் அலுவலகங்களிலும் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.
சென்னை: நாளை மாலை 4 மணிக்கு அனைத்து மாவட்ட தேர்தல் அலுவலகங்களிலும் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.
லோக் சபா தேர்தலுக்கு கட்சிகள் எல்லாம் எப்படி தயாராகி வருகிறதோ அதேபோல்தான் தேர்தல் ஆணையமும் வேகமாக தயாராகி வருகிறது. இந்த தேர்தல் வரும் ஏப்ரல் இறுதியில் தொடங்கி மே இறுதி வரை பல்வேறு கட்டங்களாக நடத்தப்பட வாய்ப்புள்ளதாக கூறுகிறார்கள்.

இதில் தமிழகத்தில் மே மாதத்தில் தேர்தல் நடத்தப்பட வாய்ப்புள்ளது என்று கூறியுள்ளனர். இதற்காக தேர்தல் ஆணையம் நிறைய தயாரிப்புகளை செய்து வருகிறது. இந்த தேர்தல் குறித்து ஏற்கனவே ஆலோசனை நடந்த நிலையில் இன்று இரண்டாவது கட்ட ஆலோசனை நடந்தது.
இந்த ஆலோசனை தமிழக டிஜிபி, காவல் அதிகாரிகள், மாவட்ட ஆட்சியர்கள், தேர்தல் அதிகாரிகளுடன் நடந்தது. இந்த ஆலோசனைக்கு பின் தமிழக தலைமைத் தேர்தல் ஆணையர் மாலிக் பெரோஸ்கான் செய்தியாளர்களை சந்தித்தார்.
அதில், லோக்சபா தேர்தலுக்கான பணிகள் நடந்து வருகிறது. லோக்சபா தேர்தலுக்கான இறுதி வாக்காளர் பட்டியல் தயார் செய்யப்பட்டுவிட்டது. நாளை மாலை 4 மணிக்கு இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும்.
அனைத்து மாவட்ட தேர்தல் அலுவலகங்களிலும் இறுதி வாக்காளர் பட்டியல் நாளை மாலை 4 மணிக்கு வெளியிடப்படும். மக்கள் தங்கள் பெயர்களை இந்த பட்டியலில் சரிபார்த்துக் கொள்ளலாம்.
லோக் சபா தேர்தலுடன் மாநில சட்டமன்ற இடைத்தேர்தலை நடத்துவது குறித்து இன்னும் முடிவெடுக்கவில்லை. தலைமை தேர்தல் ஆணையம் கூறினால் இரண்டையும் சேர்த்து நடத்துவோம்.
லோக்சபா தேர்தலுக்கு பின்பே உள்ளாட்சி தேர்தல் நடக்கும். மே மாதம் உள்ளாட்சி தேர்தல் குறித்த அறிவிப்பு வெளியாகும், என்று அவர் கூறியுள்ளார்.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications