சென்னை மாநில கல்லூரி வளாகத்தில் வி.பி.சிங் சிலை- முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
சென்னை: சென்னை மாநில கல்லூரி வளாகத்தில் மறைந்த முன்னாள் பிரதமர் சமூக நீதி காவலர் வி.பி.சிங் சிலை நிறுவப்படும் என தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
முன்னாள் பிரதமர் வி.பி. சிங் பிறந்த நாள் இன்று. அவரது பிறந்த நாளை முன்னிட்டு இன்று விபி சிங்குக்கு புகழஞ்சலி செலுத்தி இருந்தார் முதல்வர் ஸ்டாலின். இதனைத் தொடர்ந்து வி.பி.சிங்குக்கு மரியாதை செய்யும் விதமாக மாநில கல்லூரி வளாகத்தில் அவருக்கு சிலை அமைக்கப்படும் எனவும் அறிவித்துள்ளார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.

அண்மையில் தமிழ்நாடு சட்டசபையில் 110-வது கீழ், சென்னையில் விபி சிங் சிலை அமைக்கப்படும் என அறிவித்திருந்தார் முதல்வர் ஸ்டாலின். தற்போது சென்னை மாநில கல்லூரி வளாகத்தில் அந்த சிலை அமைக்கப்படும் எனவும் அறிவித்திருக்கிறார் முதல்வர் ஸ்டாலின்.
முன்னாள் இந்தியப் பிரதமர், சமூக நீதிக் காவலர் திரு. வி.பி.சிங் அவர்களுக்கு மாநிலக் கல்லூரி வளாகத்தில் சிலை நிறுவப்படும் என மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள் அறிவித்துள்ளார். pic.twitter.com/iSe8D67gw4
— CMOTamilNadu (@CMOTamilnadu) June 25, 2023


Click it and Unblock the Notifications
