மூணாறிலிருந்து மெரினா வரை! ஓய்வு பெற்ற டிஜிபி வால்டர் தேவாரம் பற்றி ஞாபகம் இருக்கிறதா?
சென்னை: ஒரு காலத்தில் தமிழக காவல்துறையில் கம்பீர அதிகாரியாக வலம் வந்து, எதிரிகளுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்த வால்டர் தேவாரத்தை அவ்வளவு எளிதாக யாரும் மறந்திருக்க வாய்ப்பில்லை.
எம்.ஜி.ஆர்., கருணாநிதி, ஜெயலலிதா என மூன்று முதலமைச்சர்களுடன் இணக்கமாக பணியாற்றிய வால்டர் தேவாரம், சூட்டிங்கில் எக்ஸ்பர்ட் ஆக திகழ்ந்தவர். வீரப்பன் கூட்டாளிகள் 150 பேர் இருந்த நிலையில் 6 மாதத்தில் அதனை கால் வாசியாக குறைத்தவர். பக்தவத்சலம் முதலமைச்சராக இருந்த போது காவல்துறை பணிக்கு வந்தவர் படிப்படியாக உயர்ந்து தமிழக காவல்துறை தலைவர் பதவி வரை உயரம் தொட்டவர்.

அதுமட்டுமல்ல தமிழக காவல்துறையில் பெண் காவலர்களை ஏன் நியமிக்க வேண்டும் என வால்டர் தேவாரம் 4 காரணங்களுடன் கூடிய அறிக்கை ஒன்றையும் அரசிடம் சமர்பித்தார். இன்று தமிழக காவல்துறையில் பெண்கள் அதிகம் இருக்கிறார்கள் என்றால் அதில் வால்டர் தேவாரத்தின் பங்களிப்பும் உள்ளது.
ஓய்வு பெற்று 26 ஆண்டுகள் ஆகும் நிலையில் 80 வயதை கடந்தும் இன்னும் திடகாத்திரமாக காணப்படுகிறார். இந்நிலையில் மூணாறிலிருந்து மெரினா வரை என்ற தலைப்பில் தனது சுயசரிதை மற்றும் கடந்து வந்த பாதை, நினைவலைகள் பற்றி வால்டர் தேவாரம் புத்தகம் ஒன்றை எழுதியுள்ளார். அதன் வெளியீட்டு விழா இன்று மாலை நடைபெறும் நிலையில், 2 நாட்களுக்கு முன்னர் முதலமைச்சர் ஸ்டாலினை நேரில் சந்தித்து அந்த புத்தகத்தின் பிரதியை வழங்கி படித்து பார்க்குமாறு கேட்டுக்கொண்டார்.
இதனிடையே மூணாறிலிருந்து மெரினா வரை என்ற புத்தகத்தின் சுருக்கம் பற்றிய விவரம் வருமாறு;
''மூணாறிலிருந்து மெரினா வரை என்ற இப்புத்தகத்தில் வால்டர் ஐ. தேவாரம் அவர்களின் வாழ்க்கைப் பயணம் மூணார் தேயிலைத் தோட்டத்தில் தொடங்கிய சிறுவயது நினைவுகளையும், கல்லுரிப் படிப்பை சென்னையில் தொடர்ந்தது பற்றியும் இராணுவத்தில் சேர ஆர்வம் கொண்டு, வடகிழக்கு மாநிலத்திற்குச் சென்று இம்பால் நகரில் சிறிதுகாலம் கல்லுரியில் ஆசிரியராகப் பணிபுரிந்து விட்டுப் பின்னர் அவரது இரண்டாவது தெரிவான இந்தியக் காவல் பணியில் சேர்ந்தது பற்றியும் அதன் பின்னர் கடந்த கால சம்பவங்களைப் பற்றியும் சுவராசியமாக எழுதியுள்ளார் அதை வாசகர்கள் தெரிந்து கொள்ள விரும்பலாம்.''
''அவருடன் சேருங்கள் தமிழ்நாட்டுக் காவல் பணியில் பல ஆண்டுகள் வன்முறைக்கும்பல்களை அடக்கியதும், நக்சல் தீவிரவாதிகளை ஒழித்தது, வீரப்பன் வேட்டையில் ஈடுப்பட்டது போன்றவற்றை அவருடன் இராட்டினத்தில் பயணித்து அனுபவியுங்கள்.''
''ஓய்வுபெற்று இருபத்தி ஆறு ஆண்டுகள் கழித்து தன்னுடைய அனுபவங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறார். அவர் எவ்வாறு உயிருக்கு ஆபத்தான சூழ்நிலைகளில் பணிபுரிந்து தனது தனித்தன்மையை பதிவு செய்துள்ளார் இப்புத்தக்கத்தின் வழியாக.''
-
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை -
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்! -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட் -
அண்ணாமலை புரிதல் கொண்டவர்.. அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்.. பாராட்டி தள்ளிய ராகவா லாரன்ஸ் -
ஒரு இடம் விடக்கூடாது.. சென்னையில் தெரு தெருவாக ரெய்டு விடப்போகும் அதிகாரிகள்.. என்ன காரணம்? -
உலகத்திற்கே 'ஞாயிறு' மிக முக்கியமான நாள்.. கையெழுத்திடும் ஈரான்.. டிரம்ப் மிகப்பெரிய அறிவிப்பு












Click it and Unblock the Notifications