இனிமே எந்த ரயிலும் இங்கே நிற்காது.. நிரந்தரமாக மூடப்படுகிறது "வாங்கல்" ஸ்டேஷன்: அதிரும் கரூர், சேலம்
சென்னை: கரூர்-சேலம் வழித்தடத்தில் உள்ள வாங்கல் ரயில்வே ஸ்டேஷன் இன்று முதல் மூடப்படுவதாக அறிவிக்கபட்டுள்ளது. வாங்கல் ரயில் நிலையத்தில் இனி எந்த ரயில்களும் நிற்காது என்றும் ரயில்வே தெரிவித்துள்ளது. இந்த அறிவிப்பானது பயணிகளிடம் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.
இந்திய ரயில்வே துறை சார்பில், ரயில்கள் மற்றும் ரயில் நிலையங்கள் தொடர்பான நடவடிக்கைகளையும், அறிவிப்புகளையும் அவ்வப்போது வெளியிட்டு வருகிறது.. அதேபோல, பயணிகளின் வசதிக்காக, ரயில்கள் நின்றுசெல்லும் வகையில், ஆங்காங்கே புதிய ரயில் நிலையங்களையும் அமைத்து வருகின்றன..

ரயில் நிலையங்கள்: எனினும், சில சமயங்களில், இதுபோன்ற ரயில் நிலையங்களுக்கு பயணிகளிடம் போதுமான வரவேற்பு கிடைப்பதில்லை.. அதனால், அந்த ரயில் நிலையங்களின் பயன்பாடுகள் வெகுவாக குறைந்துவிடவும், சம்பந்தப்பட்ட ரயில் நிலையங்களை மூடும் நடவடிக்கைகளையும் ரயில்வே நிர்வாகம் அவ்வப்போது மேற்கொண்டு வருகிறது. அதில் ஒன்றுதான், வாங்கல் ரயில்வே ஸ்டேஷன்.
கரூர்-சேலம் வழித்தடத்தில் இந்த வாங்கல் ரயில்வே ஸ்டேஷன் செயல்பட்டு வருகிறது. சேலம் ரயில்வே கோட்டத்தில் சேலம்- நாமக்கல் - கரூர் இடையே புதிய அகல ரயில்பாதை அமைக்கப்பட்டபோது மோகனூருக்கும், கரூருக்கும் இடைப்பட்ட பகுதியில் உள்ள வாங்கல் ரயில் நிலையம் கடந்த 201ல், அமைக்கப்பட்டது.
வரவேற்பு இல்லை: இந்த ரயில் நிலையத்துக்கு பயணிகள் வந்து, பயணம் மேற்கொள்ளும் வகையில் சேலம்-கரூர் பாசஞ்சர் ரயில் நின்றும், சென்றும் செயல்பட்டு வந்தது. ஆனால், அந்த பகுதி மக்களிடையே வாங்கல் ஸ்டேஷன் பயன்பாடு பெரிய அளவில் காணப்படவில்லை.. சில நாட்கள் மட்டும் ஒருசில பயணிகள் ஸ்டேஷனுக்கு வந்து போனார்கள்.. ரயிலில் ஏறி பயணித்தும் வந்தனர்.. அதனால்தான், வாங்கல் ரயில்வே ஸ்டேஷனை மூடுவது தொடர்பாக ரயில்வே நிர்வாகம் ஆலோசித்து வந்தது.
பயணிகளிடம் போதிய வரவேற்பு இல்லாத காரணத்தினால், இன்று முதல் இந்த ரயில் நிலையம் மூடப்படுவதாக ரயில்வே நிர்வாகம் தற்போது அறிவித்திருக்கிறது.. சேலம் ரயில்வே கோட்டம் ரயில்வே துறை சார்பில் இது தொடர்பாக செய்திக்குறிப்பும் வெளியிடப்பட்டுள்ளது.
விளக்கம் : அதில், "வாங்கல் ரயில் நிலையத்தில் இனி எந்த ரயில்களும் நிற்காது. இன்று மட்டுமே கடைசியாக ரயில்கள் இந்த வழித்தடத்தில் நின்று செல்லும். பயணிகளுக்கு வாங்கல் ரயில் நிலையத்திலிருந்து பயணச் சீட்டுகள் வழங்கப்படாது. பிற ரயில் நிலையங்களில் இருந்து வாங்கல் ரயில் நிலையத்துக்கும் பயணச்சீட்டு வழங்கப்படாது" என்று அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications