Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வக்ஃப் சட்டத் திருத்தம் ஏன் முக்கியமானது? இதில் செய்யப்பட்ட மாற்றங்கள் கவனிக்கப்படுவது ஏன்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: வக்ஃப் (திருத்த) சட்டம் நிறைவேற்றப்பட்டதில் இருந்து பல மாநிலங்களில் அதற்கு எதிராக போராட்டங்கள் நடந்து வருகின்றன. முக்கியமாக மேற்கு வங்கத்தின் முர்ஷிதாபாத், டயமண்ட் ஹார்பர், டெல்லி மற்றும் தமிழ்நாடு போன்ற எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் வக்ஃப் (திருத்த) சட்டத்திற்கு எதிரான போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. குறிப்பாக காங்கிரஸ், திரிணாமூல் காங்கிரஸ், திமுக, சிபிஐ(எம்), ஆர்ஜேடி, ஜேஎம்எம் மற்றும் ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகளின் கூட்டணியான இந்தியா கூட்டணி ஆட்சியில் இருக்கும் மாநிலங்களில்தான் இந்த போராட்டங்கள் நடக்கின்றன.

வக்ஃப் (திருத்தம்) சட்டம், 2025, மத ரீதியாக வழங்கப்படும் நன்கொடைகளில், நில கையகப்படுத்தும் நடவடிக்கைகளில் நடக்கும் ஊழலை தடுக்க, தவறான நிர்வாகங்களை கட்டுப்படுத்துவதற்கான ஒரு முக்கிய நடவடிக்கையாகும். எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுவது போல இந்த சட்டம் எந்த மதத்தையும், சமூகத்தையும் குறிவைக்கவில்லை. வக்ஃப் (திருத்தம்) சட்டம் வக்ஃப் போர்டில் வெளிப்படைத்தன்மையை அதிகரிக்க, அதன் சொத்துக்களை சரியான முறையில் பயன்படுத்துவதை உறுதி செய்ய கொண்டு வரப்பட்ட சட்டம் ஆகும் என்று பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையின் கீழ் மத்திய அரசு தெளிவுபடுத்தியுள்ளது:

Wakf

இஸ்லாமிய மத அல்லது தொண்டு பயன்பாட்டிற்காக நன்கொடையாக கொடுக்கப்பட்ட தனிப்பட்ட அசையும் சொத்து அல்லது அசையா சொத்துக்கள்தான் வக்ஃப் சொத்துக்கள் ஆகும். பல வருடங்களாக , இந்த வக்ஃப் அமைப்பு பெரிய அளவில் கட்டுப்பாடின்றி இயங்கி வந்தது. இதை மேற்பார்வை செய்ய சரியான சட்டம், வலிமையான சட்ட பிரிவுகள் இல்லாத சூழல் இருந்தது. இதன் விளைவாக பரவலான முறைகேடுகள் மற்றும் சுரண்டல்கள் இந்த போர்டில் ஏற்பட்டது. இந்த நிலையில்தான் பா.ஜ.க தலைமையிலான அரசு நீண்ட காலமாக கோரிக்கையாக வைக்கப்பட்ட சீர்திருத்தங்களை தற்போது இந்த சட்ட திருத்தத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது. வக்ஃப் வாரியத்திற்கு இருந்த கட்டுக்கடங்காத அதிகாரங்களை நீக்கி.. அதை மேற்பார்வைக்கு கீழ் மத்திய அரசு கொண்டு வந்துள்ளது.

சில எதிர்க்கட்சிகள் சர்ச்சைக்குரியவை என்று முத்திரை குத்தும் இந்த சட்ட திருத்தங்கள் உண்மையில், இந்த காலத்தில் மிகவும் முற்போக்கான, தேவையான சட்ட சீர்திருத்தங்களில் ஒன்றாகும். இந்த மசோதா பாராளுமன்றத்தில் முழுமையான விவாதத்திற்குப் பின்பே நிறைவேற்றப்பட்டது. அவசர கதியில் நிறைவேற்றப்படாமல் அனைத்து தரப்பு மக்களையும் மனதில் வைத்தே நிறைவேற்றப்பட்டது.

வக்ஃப் கையில் இருந்த அதீத அதிகாரம்

நீண்ட காலமாக, வக்ஃப் வாரியங்கள் அதீத அதிகாரத்தோடு இயங்கி வந்ததும். எந்த ஒரு நிலத்தையும் உரிய நடைமுறையின்றி வக்ஃப் சொத்தாக அறிவித்து அதை கட்டுப்பாட்டிற்குள் எடுக்கும் அதீத அதிகாரம் அந்த அமைப்பிற்கு இருந்தது. வக்ஃப் வாரியங்களுக்கு தன்னிச்சையான அதிகாரங்களை வழங்கிய பிரிவு 40-ஐ ரத்து செய்வதன் மூலம் பாஜக இதற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது. இனி, மதத்தின் பெயரால் பின்கதவு வழியாக நில அபகரிப்பு நடக்காது என்ற நிலையில் இந்த சட்டம் கொண்டு வந்துள்ளது.

வக்ஃப் (திருத்தம்) மசோதா, 2025ன் கீழ் வக்ஃப் சொத்துகளின் நிர்வாகத்தில் உள்ள நீண்டகால பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட்டு உள்ளது. இதில் வெளிப்படைத்தன்மை கொண்டு வரப்பட்டுள்ளதோடு, அதன் அதீத அதிகாரம் பிடுங்கப்பட்டு உள்ளது.

நிர்வாகத்தை மேம்படுத்துதல்

வக்ஃப் திருத்த மசோதாவால் கொண்டுவரப்பட்ட மிக முக்கியமான மாற்றங்களில் ஒன்று, வக்ஃப் வாரியங்கள் முன்பு வைத்திருந்த அதிகாரங்களை குறைப்பது அல்லது முறைப்படுத்துவது ஆகும். முந்தைய சட்டத்தின் கீழ், வக்ஃப் வாரியங்கள் அசாதாரண அதிகாரங்களை கொண்டு இருந்தன. அவை அடிக்கடி தவறாகப் பயன்படுத்தப்பட்டன. இது தவறான நிர்வாகம் மற்றும் ஊழலுக்கு வழிவகுத்தது. வக்ஃப் வாரியங்கள் எந்த விதமான சொத்துக்களையும் வக்ஃப் சொத்து என அறிவிக்க அனுமதித்த பழைய வக்ஃப் சட்டத்தின் பிரிவு 40 ஐ ரத்து செய்வதன் மூலம் அதன் அதிகாரம் குறைக்கப்பட்டு உள்ளது.

வக்ஃப் சட்டத்தின் மூலம் வெளிப்படைத்தன்மை

திருத்தப்பட்ட இந்த சட்ட மசோதா வக்ஃப் சொத்துக்களின் நிதி ஆய்வு, சொத்துக்களின் டிஜிட்டல் மயமாக்கலை கட்டாயமாக்குகிறது. இந்த சட்டம் முஸ்லிம் சமூகத்தின் ஏழை மற்றும் பின்தங்கிய பிரிவினர், பாஸ்மாண்டா முஸ்லிம்கள் போன்ற பின்தங்கிய முஸ்லிம்கள் பயனடைவதை உறுதி செய்கிறது. வம்சம் வம்சமாக சொத்துக்களை அனுபவிக்கும் இஸ்லாமியாய் மற்றும் அரசியல் கைக்கூலிகளின் கைகளில் அதிகாரம் குவிவதற்குப் பதிலாக, இந்த நிலங்கள் சாதாரண மக்களுக்கு பயன்படும் வகையில் சட்டம் கொண்டு வரப்பட்டு உள்ளது. குறிப்பாக வரலாற்று ரீதியாக பின்தங்கிய இஸ்லாமியர்களுக்கு அதிகாரம் அளிக்கும் சட்டமாக இந்த சட்ட திருத்தம் கொண்டு வரப்பட்டு உள்ளது.

எல்லோரையும் உள்ளடக்கும் சட்டம்

மாநில வக்ஃப் வாரியங்கள் மற்றும் மத்திய வக்ஃப் கவுன்சிலில் முஸ்லிம் அல்லாத உறுப்பினர்களைச் சேர்ப்பது வக்ஃப் திருத்த மசோதாவின் மற்றொரு முக்கிய அம்சமாகும். இது முஸ்லீம் சமூகத்தின் அதிகாரத்தை குறைத்து மட்டுப்படுத்துகிறது என்று விமர்சகர்கள் குற்றம் சாட்டுகின்றனர். ஆனால் இது எல்லோரையும் உள்ளடக்கும் சட்டம், அதிகாரத்தை பரவலாக்கும் சட்டம், தவறுகளை தடுக்கும் சட்டம் என்று வாதம் வைக்கிறது. போஹ்ராக்கள் மற்றும் அககானி முஸ்லீம்கள் போன்ற முஸ்லீம் மக்களில் உள்ள பல ஒடுக்கப்பட்ட சமூகங்கள் அதிகாரம் பெறுவதை உறுதி செய்கிறது. வரலாற்று ரீதியாக வக்ஃப் அதிகாரத்தில் ஓரம்கட்டப்பட்ட பலருக்கு இதில் அதிகாரம் கிடைக்கும்

இந்த சட்ட திருத்தம் மூலம் பெண்களை இந்த போர்டில் சேர்த்து அவர்களின் குரல்களையும் கேட்க ஒரு வழியை வழங்குகிறது. பாலின சமத்துவத்தை கொண்டு வரும் வகையில் இந்த சட்ட திருத்தம் கொண்டு வரப்பட்டு உள்ளது.

கூடுதலாக, பாஜகவின் அணுகுமுறை பல்வேறு மதங்களைக் கொண்ட மக்களை இந்த போர்ட்டிற்குள் கொண்டு வருகிறது. இதன் மூலம் மதஒருமைப்பாடு மேம்படும். முஸ்லிம் அல்லாதவர்கள் உட்பட பல்வேறு சமூக உறுப்பினர்களிடமிருந்து பல்வேறு நிபுணத்துவத்தை போர்ட்டிற்குள் கொண்டு வரும். அவர்களின் ஆலோசனைகளை பெற வழி வகுக்கும்.

இந்தியாவின் நில அதிகாரத்தை காப்பது

மசோதாவில் உள்ள மற்றொரு முக்கிய விதி, அரசு சொத்துக்களுக்கு வெளிப்படையான பாதுகாப்பு வழங்குவது ஆகும். வக்ஃப் சொத்து என்ற போர்வையில் அரசு நிலங்கள் பல, பல வருடங்களாக அபகரிக்கப்பட்ட சம்பவங்கள் நடந்து உள்ளன. அத்தகைய நிலங்களை மீட்பதற்கான அதிகாரத்தை அரசாங்கத்திற்கு வழங்குவதன் மூலம் இந்த சட்டம் சமநிலையை கொண்டு வருகிறது. பொதுச் சொத்துக்களை கைப்பற்றும் நியாயமற்ற கோரிக்கைகளிலிருந்து இந்த சட்டம் பாதுகாக்கிறது. நிலத்தை அபகரிக்கும் அதிகாரத்தை நீக்கும் வகையில் இந்த சட்டம் கொண்டு வரப்பட்டு உள்ளது.

குறிப்பிடத்தக்க வகையில், பழங்குடி சமூகங்களுக்கு சொந்தமான நிலத்தை வெளிப்படையாகப் பாதுகாக்கும் வகையில் இந்த சட்ட திருத்தம் கொண்டு வரப்பட்டு உள்ளது. அவர்களின் நிலங்கள் அபகரிக்கப்படாமல் இது தடுக்கிறது. இத்தகைய நிலங்கள் மீதான வக்ஃப் உரிமைகோரல்களைத் தடுப்பதன் மூலம், இந்தியாவில் உள்ள பழங்குடியின சமூகங்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் துணிச்சலான நிலைப்பாட்டை இந்த மசோதா எடுக்கிறது.

வக்ஃப் சீர்திருத்தத்ம் - மதத்தை இழிவுபடுத்தும் நடவடிக்கை அல்ல

இது முஸ்லிம்களுக்கு எதிரான சட்டம் அல்ல. இது நீதிக்கு ஆதரவான, வெளிப்படைத்தன்மைக்கு ஆதரவான சீர்திருத்தமாகும். வக்ஃப் சட்டத்திருத்த மசோதா ஒரு நவீனமயமாக்கல் முயற்சி என்பதை மறுக்க முடியாது. வக்ஃப் சொத்துக்கள் பாதுகாக்கப்படுவது, அதே சமயம் அது முறையாக நிர்வகிக்கப்படுவது, சொத்து அபகரிப்புகளை தடுப்பது, அதில் டிஜிட்டல் மயமாக்கலை அறிமுகப்படுத்துவதை இந்த சட்டம் உறுதி செய்கிறது. மேலும் சொத்துக்களை சிறப்பாக கண்காணிப்பதற்காக ஒரு மையப்படுத்தப்பட்ட தரவுத்தளத்தை உருவாக்குகிறது. தொழில்நுட்பத்தை கொண்டு வருவதன் மூலம் இந்த சொத்துக்களை எளிதாக தணிக்கை செய்ய முடியும். வக்ஃப் சொத்துக்கள் தொடர்பான தகவல்களை எளிதாக கண்காணிக்க ம்டுய்யும். இது அவசியம். ஆடம்பரம் அல்ல.

சர்வதேச தரத்திற்கு இந்த சட்டம் உள்ளது. துருக்கி மற்றும் கத்தார் போன்ற நாடுகள் இதேபோன்ற வக்ஃப் சட்டங்களை கொண்டு உள்ளன. அதே தரத்திற்கும் மத்திய அரசும் சட்ட திருத்தங்களை கொண்டு வந்துள்ளன. இந்தியச் சட்டங்களை சர்வதேசத் தரத்துடன் சீரமைப்பது மட்டுமன்றி உள்ளூர் பழக்கவழக்கங்கள் மற்றும் மரபுகளை தக்கவைத்துக்கொள்ளவும் உதவுகிறது.

வக்ஃப் (திருத்தம்) மசோதா, 2025, இந்தியாவில் வக்ஃப் சொத்துக்களின் நிர்வாகத்தை சீர்திருத்துவதில் ஒரு முக்கியமான படியாகும். பல சர்ச்சையில் சிக்கி இருந்த போர்டை சீர்திருத்தும் வகையில் இந்த சட்ட திருத்தம் மேற்கொள்ளப்பட்டு உள்ளது. வக்ஃப் வாரியங்களின் 'தன்னிச்சையான' அதிகாரத்தை குறைக்கும் நோக்கத்துடன் கொண்டு வரப்பட்டு உள்ளது. அதாவது வக்ஃப் வாரியங்களின் அளப்பரிய பலத்தை குறைக்கும் வகையில் இந்த திருத்தங்களை மேற்கொண்டு உள்ளனர். முக்கியமாக தற்போதுள்ள வக்ஃப் சட்டத்தின் படி வக்ஃப் வாரியம் எந்தவொரு சொத்தையும் சரிபார்க்காமல் உரிமை கோர முடியும். இந்த அதிகாரம் நீக்கப்பட்டு உள்ளது. வக்ஃப் வாரியம் எந்தவொரு சொத்தையும் சரிபார்க்காமல் உரிமை கோர முடியாது. அதாவது முன்பு வக்ஃப் வாரியம் ஒரு நிலத்தின் வில்லங்க விவகாரங்களை, அந்த நிலத்தின் வரலாற்றை ஆராயாமல் அப்படியே உரிமை கோர முடியும். ஒரு நிலத்தை அவர்கள் உரிமை கோரினால்.. அதற்கு டாக்குமெண்ட் இல்லாத பட்சத்தில் வக்ஃப் வாரியம் அதை எடுத்துக்கொள்ள முடியும். இனி அப்படி செய்ய முடியாது என்ற பாதுகாப்பை உறுதி செய்துள்ளது.

வக்ஃப் சட்டம் தொடர்பான சர்ச்சைகளைத் தீர்ப்பதற்கான அதிகாரங்களை கலெக்டருக்கு வழங்கியுள்ளது. இவர் இஸ்லாமியர் இல்லை என்றாலும் இனி வக்ஃப் வாரியத்தின் சொத்து விவகாரங்களில் இறுதி முடிவுகளை எடுக்க முடியும். வக்ஃபு வாரியத்துக்கும் அரசுக்கும் அல்லது மக்களுக்கும் இடையே உள்ள சொத்து தொடர்பான பிரச்னைகளை தீர்த்து வைக்க மாவட்ட ஆட்சியர்களுக்கு இந்த மசோதா அதிகாரம் அளிக்கிறது. அத்தகைய சொத்து ஏதேனும் அரசாங்கச் சொத்தா இல்லையா என்பது குறித்து ஏதேனும் கேள்விகள் எழுந்தால், அந்தச் சொத்து அரசாங்கச் சொத்தா இல்லையா என்பதைத் தீர்மானித்துச் சமர்ப்பிக்கும் அதிகாரம் கலெக்டருக்கு வழங்கப்படும். முன்பு இதில் வக்ஃப் போர்டு அதிகாரம் வைத்து இருந்தது. அது நீக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+