இடி, ஐடி ரெய்டு மூலம்..பணம் பறித்த பாஜக! தேர்தல் பத்திரத்தை பாருங்க தெரியுது! பாயிண்டை பிடித்த காங்.
சென்னை; ED, CBI, IT ரெய்டுகளுக்குப் பிறகு 15 நிறுவனங்கள் பாஜகவுக்கு நன்கொடையாக பணம் வழங்கி உள்ளன, மொத்தம் 45 நிறுவனங்கள் BJP க்கு கிட்டத்தட்ட ₹400 கோடி செலுத்துகின்றன என்று காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுனா கார்கே குற்றச்சாட்டு வைத்துள்ளார்.
தேர்தல் பத்திர விவரங்களை மார்ச் 12 வெளியிட உச்ச நீதிமன்றம் எஸ்பிஐ வங்கிக்கு உத்தரவிட்ட நிலையில், அந்த விவரங்களை தேர்தல் ஆணையத்திடம் எஸ்பிஐ வழங்கியது. இந்த நிலையில் நேற்று மாலை அந்த பத்திரங்களை தேர்தல் ஆணையம் பொதுவில் வெளியிட்டது.

எவ்வளவு சென்றது; எந்த கட்சி எவ்வளவு பெற்றது என்ற விவரங்கள் தற்போது வெளியாகி உள்ளன. தேர்தல் பத்திரங்கள் மூலம் அதிக நிதி பாஜகவிற்கே இதுவரை சென்றுள்ளது
அதிகபட்சமாக 11562.5 கோடி ரூபாய் நிதியில் 6566 ரூபாயை பாஜக நிதியாக பத்திரங்கள் மூலம் பெற்றுள்ளது
மொத்த தேர்தல் பத்திரங்களில் 46.74 சதவிகிதம் பாஜகவிற்கு சென்றுள்ளது
1093 கோடி ரூபாய் திரிணாமூல் காங்கிரஸ் கட்சிக்கு நிதியாக சென்றுள்ளது
காங்கிரஸ் கட்சிக்கு 1123 கோடி ரூபாய் நிதியாக சென்றுள்ளது
திமுக கட்சிக்கு 617 கோடி ரூபாய் நிதியாக சென்றுள்ளது
அதிமுக கட்சிக்கு 6 கோடி ரூபாய் நிதியாக சென்றுள்ளது

முறைகேடு: இந்த தேர்தல் பத்திரங்கள் மூலம் பெரிய முறைகேடு நடந்துள்ளதாக காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுனா கார்கே குற்றச்சாட்டு வைத்துள்ளார்.
அவர் வைத்துள்ள குற்றச்சாட்டில், மிரட்டல், பணம் பறித்தல், கொள்ளையடித்தல் மற்றும் வற்புறுத்தல் மூலம் அதிக பணம் பெறப்பட்டதா?
ED, CBI, IT ரெய்டுகளுக்குப் பிறகு 15 நிறுவனங்கள் பாஜகவுக்கு நன்கொடையாக பணம் வழங்கி உள்ளன, மொத்தம் 45 நிறுவனங்கள் BJP க்கு கிட்டத்தட்ட ₹400 கோடி செலுத்துகின்றன.
அறிக்கைகளின்படி, 4 ஷெல் நிறுவனங்களும் பாஜகவுக்கு நிதியளித்து உள்ளன.
▪️ சர்வாதிகார மோடி அரசு, காங்கிரஸ் கட்சியின் வங்கிக் கணக்குகளை முடக்கியுள்ளது, அதே நேரத்தில் மத்திய நிறுவனங்களைப் பயன்படுத்தி பணம் பறிக்கிறது!
▪️ பாஜக இப்படி கொள்ளையடிப்பதற்காக அரசியலமைப்புச் சட்டத்திற்கு முரணான மற்றும் சட்டவிரோதமான தேர்தல் பத்திரங்களைப் பயன்படுத்தி வந்துள்ளது. மேலும் தேர்தல் பத்திரங்கள் மூலம் அதன் நன்கொடை கொள்ளையை 10 மடங்கு அதிகரித்துள்ளது!
'ஜனநாயகம்' பற்றி பா.ஜ.க கவலைப்பட்டால் இந்த பணம் பறிக்கும் வேலைகளை செய்துள்ளது. சுதந்திரமான விசாரணை மூலம் அதன் சொந்த நிதி குறித்து வெள்ளை அறிக்கையை வெளியிட வேண்டும், என்று காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுனா கார்கே தெரிவித்துள்ளார்.
தடை; கடந்த 2018ம் தேதி பிப்ரவரி மாதம் இந்த தேர்தல் பத்திரங்கள் திட்டம் மத்திய அரசால் கொண்டு வரப்பட்டது. தேர்தல் பத்திரங்கள் என்பது தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள் தங்கள் அடையாளங்களை வெளிப்படுத்தாமல், அரசியல் கட்சிகளுக்கு நிதி வழங்க அனுமதிக்கும் திட்டம் ஆகும். இத்திட்டத்தின் விதிகளின்படி, இந்தியாவின் எந்தவொரு குடிமகனும் அல்லது நாட்டில் இணைக்கப்பட்ட அல்லது நிறுவப்பட்ட எந்த நிறுவனமும் தேர்தல் பத்திரங்களை வாங்கலாம்.
இந்த பத்திரங்கள் ₹ 1,000 முதல் ₹ 1 கோடி வரையிலான பல்வேறு மதிப்புகளில் கிடைக்கின்றன, மேலும் பாரத ஸ்டேட் வங்கியின் (SBI) அனைத்து கிளைகளிலும் பெறலாம். இந்த நன்கொடைகளுக்கு வட்டியும் இல்லை. இந்த பத்திரங்களை பெயரை வெளிப்படுத்தாமல் எந்த கட்சிக்கும் கொடுக்கலாம்.
இதன் மூலம் தேர்தல் பத்திரங்கள் மூலம் நன்கொடைகளை அரசியல் கட்சிகள் பெற்றால் தேர்தல் ஆணையத்திடம் தெரிவிக்க தேவை இல்லை என மாற்றிவிட்டது. இந்த நிலையில்தான் தேர்தல் பத்திரங்களுக்கு எதிரான வழக்கில், நாடு முழுக்க தேர்தல் பத்திரங்களை உச்ச நீதிமன்றம் தடை செய்துள்ளது.
-
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications