நிரந்தரமாக கையை கழுவுங்கள் - குஷ்பு ட்வீட்டும் நெட்டிசன்ஸ் எதிர்வினையும்
நிரந்தரமாய் கையை கழுவுங்கள் இது மோடி ஜி பீகாரில் உணர்த்திய பாடம் வரும் தேர்தலில் தமிழகம் இதை எதிரொலிக்கும் என்று குஷ்பு தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
சென்னை: பீகார் தேர்தல் முடிவுகள் வெளியாகி வரும் நிலையில் பாஜகவில் சமீபத்தில் இணைந்த குஷ்புவின் ட்விட்டர் பதிவு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அடிக்கடி கை கழுவுங்கள். இது கொரோனாவுக்கான பாடம். நிரந்தரமாய் கையைக் கழுவுங்கள். இது மோடி ஜி பிஹாரில் உணர்த்திய பாடம். வரும் தேர்தலில் தமிழகம் இதை எதிரொலிக்கும் என்று கூறியுள்ளார் குஷ்பு.
நடந்தது முடிந்த பீகார் சட்டசபை தேர்தலின் வாக்குகள் எண்ணப்பட்டு காலை முதலே முடிவுகள் வெளியாகி வருகின்றன. ஜேடியு தலைமையிலான கூட்டணி முன்னிலை வகிப்பதாக தகவல் வெளியானலும் வெற்றி பெற்றவர்களின் அறிவிப்பதில் இழுபறி நீடித்தது.
மாலைக்கு மேல் விறுவிறுப்பான முடிவுகள் வெளியாகத் தொடங்கின. ஜேடியு கூட்டணி அதிக இடங்களை வென்றுள்ளதாக முடிவுகள் வெளியாகவே பாஜக தொண்டர்கள் உற்சாகத்துடன் கொண்டாடத் தொடங்கினர்.
ஆர்ஜேடி தனித்து அதிக இடங்களை வென்றாலும் கூட்டணி அமைத்து போட்டியிட்ட காங்கிரஸ் கட்சிக்கு அதிக இடங்கள் கிடைக்கவில்லை. இதனால் ஆட்சி அமைக்கும் வாய்ப்பு ஆர்ஜேடி கட்சிக்கு கை நழுவிப் போனது.

பாஜக உழைக்கும் கட்சி
பீகார் தேர்தல் முடிவுகள் வெளியாகத் தொடங்கிய உடனே குஷ்பு தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிடத் தொடங்கினார். நரேந்திர மோடியின் அலை தொடர்ந்து இன்னொரு வெற்றியைப் பார்க்கிறது. பாஜக மக்களுக்காக உழைக்கிறது என்பதை, ஏன் வாக்காளர்கள் மீண்டும் மீண்டும் தேர்ந்தெடுக்கிறார்கள் என்பதை நிரூபித்திருக்கிறது. இந்திய தேசிய காங்கிரஸ் மீண்டும் தோற்கடிக்கப்பட்டு விட்டது, எங்கு சென்றாலும் அவர்கள் தேவையில்லாத ஒரு சுமை என்பதை நிரூபித்திருக்கிறார்கள்.

2021 தேர்தல் கூட்டணியில் மாற்றம்
பிகார் தேர்தல் முடிவுகளை வைத்து தமிழகத்தில் 2021 தேர்தல் கூட்டணியில் மிகப்பெரிய மாறுதல் வரும் என நினைக்கிறேன். காங்கிரஸ் கட்சி தனித்து விடப்பட்டு, தேவையில்லாத சுமை என்று கூறி யாரும் கூட்டணிக்குப் பரிசீலிக்காமல் போனாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. பொறுத்திருந்து பார்ப்போம்.

தமிழகத்தில் பாஜகவிற்கு வரவேற்பு
தமிழகத் தேர்தலிலும் பாஜக தனது வெற்றி முகத்தைத் தொடரும். நரேந்திர மோடியைத் தமிழகம், பெரிய அளவில் பாதை போட்டு வரவேற்கும். வளர்ச்சி, முன்னேற்றம், மனிதம், நேர்மையுள்ள, வேலைவாய்ப்பு தரும் அரசை ஆரத்தழுவும் என்று பதிவிட்டிருந்தார்.

தமிழகம் எதிரொலிக்கும்
அடிக்கடி கை கழுவுங்கள் இது corona சொல்லிய பாடம். நிரந்தரமாய் கையை கழுவுங்கள் இது மோடி ஜி பீகாரில் உணர்த்திய பாடம் வரும் தேர்தலில் தமிழகம் இதை எதிரொலிக்கும் என்றும் பதிவிட்டுள்ளார் குஷ்பு.

நடக்கவே நடக்காது
குஷ்புவின் இந்த பதிவிற்கு ஏராளமானோர் எதிர்வினையாற்றி வருகின்றனர். பாக்கதானே போறோம். உங்கள மாதிரி நேரத்துக்கு தகுந்த மாதிரி மாறுகிற ஆளுங்கள பாத்து யாரு ஓட்டு போட போறாங்க என்று பதிவிட்டு வருகின்றனர். தமிழ்நாட்டில் ஒருபோதும் தாமரை மலராது என்றும் நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications