பாய்ந்து வந்து சேலையை கடித்த பாம்பு.. ஒரு நொடியில் உயிர் தப்பிய பெண்.. வீடியோ பாருங்க
சென்னை: வெயில் காலம் என்பதால் ..அதுவும் வெப்பம் அதிகமாக இருப்பதால் பாம்புகள் நிழல் தேடி தண்ணி தேடி வீடுகளில் வருவது அதிகரித்து உள்ளது.. அப்படிவரும் பாம்பை தெரியாமல் மிதித்தாலோ அல்லது அருகில் சென்றாலோ அந்தபாம்பு ஆக்ரோஷமாக மாறி கடிக்க பாயும்.. அப்படித்தான் ஒரு பெண்ணை பாம்பு கடிக்க பாய்ந்தது. ஒரு நொடிக்கு குறைவான வினாடியில் அந்த பெண்ணின் காலில் பாம்பு கடிக்க வேண்டியது.. தப்பியிருக்கிறார். இதுபற்றி வீடியோவை இணைத்துள்ளேன் பாருங்கள்.
பொதுவாகவே வெயில் காலத்தில் பாம்புகள் அதிக அளவில் வெப்பத்தை தாக்குப்பிடிக்க முடியாமல் தண்ணீர் தேடியும் உணவு தேடியும், நிழல் தேடியும் வருவது வழக்கம். அப்படியான சூழலில் வீட்டைச் சுற்றியுள்ள பகுதிகளைச் சீரமைக்க வேண்டும்.

வீட்டைச் சுற்றி தேங்கிக் கிடக்கும் பழைய மரக்கட்டைகள், செங்கல் குவியல்கள், காய்ந்த இலைகளை அப்புறப்படுத்துங்கள். இவையே பாம்புகளுக்குச் சிறந்த மறைவிடங்கள். செடி, கொடிகள் அடர்ந்து வளர விடாமல் வெட்டிச் சமமாக வைத்திருங்கள்.
பாம்புகள் நேரடியாக மனிதர்களைத் தேடி வருவதில்லை, அவை தங்களுக்குப் பிடித்தமான உணவான எலிகளைத் தேடியே வருகின்றன. வீட்டில் எலிகள் வராமல் பார்த்துக் கொண்டாலே பாம்புகளின் வருகை 90 சதவீதம் குறைந்துவிடும். வீட்டின் நுழைவாயில்கள் கதவுகளுக்குக் கீழே இருக்கும் இடைவெளிகள் வழியாகப் பாம்புகள் எளிதாக உள்ளே நுழையும். அந்த இடைவெளிகளை அடைக்க Door Strips அல்லது தடிமனான துணிகளைப் பயன்படுத்தலாம்.
குளியலறை மற்றும் கழிவறை குழாய்களின் ஓட்டைகளில் வலை அடிப்பதும் நல்லது. குளிர்ச்சியான இடங்கள்வெயில் காலத்தில் பாம்புகள் குளிர்ச்சியாக இருக்கும் ஈரமான துணிகள், காலணி வைக்கும் இடங்கள், ஏர் கூலர் மற்றும் தண்ணீர் தொட்டிகளின் அருகில் ஒளிந்திருக்க வாய்ப்பு உண்டு. எனவே, ஷூக்களை அணியும் முன் தட்டிவிட்டுப் பயன்படுத்துங்கள்.
இரவு நேரங்களில் வெளியே செல்லும்போது கண்டிப்பாக டார்ச் லைட் எடுத்துச் செல்லுங்கள். பாம்புகள் அதிர்வுகளை உணரக்கூடியவை என்பதால், தரையில் கம்பால் தட்டிச் செல்வது அவை விலகிச் செல்ல உதவும். பாம்பைக் கண்டால் என்ன செய்ய வேண்டும்? பயந்து ஓடாதீர்கள்.. பாம்பைக் கண்டால் கத்தவோ, அதை அடிக்கவோ முயற்சி செய்யாதீர்கள். நாம் அதைத் தாக்கினால் மட்டுமே அது நம்மைத் திருப்பித் தாக்கும்.
பாம்பிடமிருந்து குறைந்தது 5 அடி முதல் 10 அடி தூரம் தள்ளி நில்லுங்கள். அது தானாகப் போக வழிவிடுங்கள். உதவிக்கு அழையுங்கள்: பாம்பு வீட்டிற்குள் புகுந்துவிட்டால், தீயணைப்புத் துறை அல்லது அங்கீகரிக்கப்பட்ட பாம்பு பிடிப்பவர்களுக்கு தகவல் தெரிவியுங்கள்.
இதனிடையே பாம்பு ஒன்று ஒரு பெண்ணை கடிக்க பாயும் வீடியோவை நெட்டிசன் பகிர்ந்து, கவனமாக இருக்குமாறு எச்சரித்துள்ளார். அவரது பதிவினையும் பார்ப்போம்.
வெயில் காலம் என்பதால்.. அதுவும் வெப்பம் அதிகமாக இருப்பதால் பாம்புகள் நிழல் தேடி தண்ணி தேடி வீடுகளில் வருவது அதிகரித்து உள்ளது.. இரவில் புழுக்கமாக இருக்கிறது என்று நினைத்து ஜன்னல் கதவு தொறந்து வெச்சு படுக்காதீங்க.. அப்படித்தான் படுக்கவேண்டும் என்றால் கொசுவலை போடுங்க..
அரசியல் பதிவு அல்ல.⚠️
— Sona🐾🇮🇳 (@sona_sebin) April 30, 2026
வெயில் காலம் என்பதால் ..அதுவும் வெப்பம் அதிகமாக இருப்பதால் பாம்புகள் நிழல் தேடி தண்ணி தேடி வீடுகளில் வருவது அதிகரித்து உள்ளது..
இதை கவனத்தில் கொள்ளவும்👇
Night புழுக்கமா இருக்கு ன்னு ஜன்னல் கதவு தொறந்து வெச்சு படுக்காதீங்க..
Or Windowsக்கு Mosquito net… pic.twitter.com/MpVraAu1Pa
பாத்ரூம் போகும்போது லைட் on பண்ணி 1 நிமிஷம் நல்லா கவனமா பாத்துட்டு அப்றம் போங்க.. டாய்டெலட் பயன்படுத்துவதற்கு முன்னே பிளஸ் பண்ணுங்க.. படுக்க போகும் முன் பெட் பில்லோ கவரை நல்லா உதருங்க. வெளியில் டைல்ஸ் டிசைனாக இருந்தால் பாத்து நடங்க.. அது இருப்பதே கண்ணுக்கு தெரியாது.. இந்தம்மா ஜஸ்ட் மிஸ்ஸில் தப்பியுள்ளது" இவ்வாறு கூறியுள்ளார்.
-
சூட்டோடு சூடா.. அதையும் ஒரு கை பாத்துருவோம்! அடுத்த பரிட்சைக்கு தயாரான விஜய்! வேகமெடுக்கும் பணிகள்! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
39 வயதில் எழுதிய தேர்வு.. 60 வயதில் வந்த அரசு வேலை.. மஜித்தின் கதை சொல்லும் கசப்பான பாடம் -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Kerala: உடலில் 91 காயங்கள்.. கண்ணை மறைத்த கள்ளக்காதல்.. 1½வயது குழந்தையை துடிக்க துடிக்க கொன்ற கொடூரம்! அதிர்ந்த கேரளா -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications